Advertisment

தமிழக கல்வெட்டுக்கள்! அழிக்கும் பா.ஜ.க! -மீட்குமா தமிழக அரசு!

ss

ரு இனத்தின் வரலாறு பண்பாடு, கலாச்சாரம், பெருமை இவையனைத்தும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டே கட்டமைக்கப்படு கிறது. வரலாறு எழுதுவதற்கு மிகமுக்கியமான ஆதாரமாகத் திகழ்பவை கல்வெட்டுக்கள். பிரமியிலிருந்துதான் தமிழ் தோன்றியது என இந்திய வரலாற்றை எழுதிவைத்துள்ளனர். ஆனால் கொடுமணல், புலிமான்கோம்பை, கீழடி போன்ற பல இடங்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆதாரங்களின்படி பிரமிக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் எழுத்துவடிவங்கள் இருந்துள் ளது உறுதியாகிறது. சமஸ்கிருத மொழியின் அடிப்படையில், பல்லவர் காலத்துக்குப் பிறகுதான் தமிழக வரலாறு முறையாக எழுதப்பட்டுள்ளது. ஆயிரம் வருட வரலாற்றை மூடிமறைப்பதற்காக தமிழ் கல்வெட்டுக்களை அழித்தொழிக்க பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளதாக சில தமிழ் ஆர்வலர்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கல்வெட்டுக் கள் தொகுக்கப்பட்டு வந்தநிலையில், 1887-ஆம் ஆண்டு கல்வெட்டுக்கான தனிப்பிரிவை உருவாக்கி கல்வெட்டு மைப்படிகளை சேகரித்து ஊட்டியில் பாதுகாத்துவந்துள்ளனர். இந்திய தொல்லியல் துறையில் அப்போதைய இயக்குனராக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த ஜிஷா என்பவர் தன்னிச்சை யாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக ஊட்டியிலிருந்த கல்வெட்டு மைப்படிகளை 1961-ஆம் ஆண்டு மைசூருக்குக் கொண்டுசென்றார்.

Advertisment

dd

அப்படி கொண்டுசென்ற 1 லட்சம் கல் வெட்டுக்களில் 70 ஆயிரம் தமிழ் கல்வெட்டுக்களே மீதமுள்ளன. இப்படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக் களை அந்த கல்வெட்டின் மீது மைபூசி அதை ஒரு காகிதத்தில் படியெடுப்பார்கள். இதை மைப்படி என்பார்கள். அதன்பிறகு அதனை அச்சு நூல்களாக வெளியிடுவர். மைசூர் சென்றபிறகு மைப்படிகள் பராமரிப்பின்றிக் கிடப்பதையும், மற்ற மொழி கல்வெட்டுகளை ஆவணப

ரு இனத்தின் வரலாறு பண்பாடு, கலாச்சாரம், பெருமை இவையனைத்தும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டே கட்டமைக்கப்படு கிறது. வரலாறு எழுதுவதற்கு மிகமுக்கியமான ஆதாரமாகத் திகழ்பவை கல்வெட்டுக்கள். பிரமியிலிருந்துதான் தமிழ் தோன்றியது என இந்திய வரலாற்றை எழுதிவைத்துள்ளனர். ஆனால் கொடுமணல், புலிமான்கோம்பை, கீழடி போன்ற பல இடங்களில் கிடைக்கும் கல்வெட்டு ஆதாரங்களின்படி பிரமிக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் எழுத்துவடிவங்கள் இருந்துள் ளது உறுதியாகிறது. சமஸ்கிருத மொழியின் அடிப்படையில், பல்லவர் காலத்துக்குப் பிறகுதான் தமிழக வரலாறு முறையாக எழுதப்பட்டுள்ளது. ஆயிரம் வருட வரலாற்றை மூடிமறைப்பதற்காக தமிழ் கல்வெட்டுக்களை அழித்தொழிக்க பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளதாக சில தமிழ் ஆர்வலர்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கல்வெட்டுக் கள் தொகுக்கப்பட்டு வந்தநிலையில், 1887-ஆம் ஆண்டு கல்வெட்டுக்கான தனிப்பிரிவை உருவாக்கி கல்வெட்டு மைப்படிகளை சேகரித்து ஊட்டியில் பாதுகாத்துவந்துள்ளனர். இந்திய தொல்லியல் துறையில் அப்போதைய இயக்குனராக இருந்த கர்நாடகத்தை சேர்ந்த ஜிஷா என்பவர் தன்னிச்சை யாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக ஊட்டியிலிருந்த கல்வெட்டு மைப்படிகளை 1961-ஆம் ஆண்டு மைசூருக்குக் கொண்டுசென்றார்.

Advertisment

dd

அப்படி கொண்டுசென்ற 1 லட்சம் கல் வெட்டுக்களில் 70 ஆயிரம் தமிழ் கல்வெட்டுக்களே மீதமுள்ளன. இப்படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக் களை அந்த கல்வெட்டின் மீது மைபூசி அதை ஒரு காகிதத்தில் படியெடுப்பார்கள். இதை மைப்படி என்பார்கள். அதன்பிறகு அதனை அச்சு நூல்களாக வெளியிடுவர். மைசூர் சென்றபிறகு மைப்படிகள் பராமரிப்பின்றிக் கிடப்பதையும், மற்ற மொழி கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும்போது, அதிகப்படியான கல்வெட்டுகளுள்ள தமிழ் கல்வெட்டுகளை ஆவணப்படுத்த மறுப்பது ஏன்? தமிழ் கல்வெட்டுக்களின் நிலை என்ன? தமிழக வரலாற்று ஆவணம் அழிக்கப்படு கிறதா? எனும் பல கேள்விகளை முன்வைத் தது அப்போதைய தி.மு.க. அரசு. 1997-ஆம் ஆண்டு அன்றைய தமிழக தலைமைச் செயலாளர் மைசூரிலுள்ள தமிழ் கல் வெட்டுக்களை தமிழகத்திடமே ஒப்படைக்கவேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் கொடுத்காத நிலையில், சில ஆண்டு கள் கழித்து மீண்டும் 2005-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு அப்போதைய ஒன்றிய அர சுடன் நல்லிணக்கத்தோடு இருந்த காரணத் தால், தமிழ்நாடு தொல்லியல் துறையும், இந்திய தொல்லியல் துறையும் இணைந்து தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 30 -ஐ வெளியிட்டார்கள். அதில் 271 தமிழ் கல்வெட்டுக்கள் அடங்கியிருந்தன. ஆனால் அதன்பின் தமிழ்நாடு தொல்லியல் துறை யுடன் இணைந்து ஒன்றிய அரசு கல்வெட் டுக்கள் தொகுப்பு பற்றிய நூலை வெளியிட முன்வரவில்லை. அதனைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டில் தஞ்சை தமிழ்ப் பல் கலைக்கழகமும், இந்திய தொல்லியல்துறை யும் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன்மூலமாக கல்வெட்டுக் களை டிஜிட்டல்மயமாக்க திட்டம்வகுத் துள்ளனர். பிறகுவந்த அ.தி.மு.க. ஆட்சி அதனை நீர்த்துப்போக வைத்துள்ளது.

Advertisment

இந்த சூழ்நிலையில்தான் 2019-ஆம் ஆண்டு மைசூரிலுள்ள தமிழக கல்வெட்டுக்களை தமிழகத் திற்கே கொண்டுவரவேண்டும் என பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் கிருபா கரன் மைசூரில் சிதைந்துகொண்டிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து பாது காக்குமாறு தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தமிழகத்திற்கு கல்வெட்டுக்களைக் கொடுப்பதற்கு முன்பாக அதனை டிஜிட்டல்மயப்படுத்தி கொடுப்பதாக அவர்களாகவே ஒரு முடிவெடுத்தனர், அதன்படி தனியார் நிறுவனமான கோஸ்பல் (ஏர்ள்ல்ங்ப்) நிறுவனத்திற்கு அப்பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ss

கோஸ்பல் நிறுவனத்திற்கு டிஜிட்டல்மயப்படுத்தக் கொடுத்த இந்திய தொல்லியல் துறையே, நாங்கள் நினைத்தபடி ஆவணம் டிஜிட்டல் ஆகவில்லை எனக் கூறி பணியை நிறுத்திவைத்துள்ளனர். இப்படி நாடகம் ஆடுவதற்கு முழுக்காரணம் ஒட்டுமொத்த கல்வெட்டுக் களும் தமிழகத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்பதற் காகத் தான். அப்போதைய ஒன்றிய அமைச்சரான கிஷன்ரெட்டி இதற்கு காய்நகர்த்தியுள்ளார் என்கிறார்கள் தமிழார்வலர்கள்.

தமிழக கல்வெட்டுக்களை தமிழகத்திடமே ஒப்படைக்கவேண்டுமென நீதிமன்றம் சொல்லியும், பல காரணங்களைக் காட்டி காலம் கடத்திய பிறகும், ஏன் இன்னும் கல்வெட்டுக்களைக் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இந்திய தொல்லியல் துறையினர் தமிழகத்தில் கல்வெட்டுப் பிரிவுகளை பாதுகாக்க போதுமான இடவசதிகளும் ஆட்களும் இல்லை எனக் கூறி மறுத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த வி.சி.க. துணை பொதுச்செயலாளர் கௌதமசன்னா, மணிமாறன், இந்த பொதுநலவழக்கைப் போட்டவர் ஆகியோர் நீதிமன்றத்துக்குச் சென்று, ஒரு உத்தரவைப் பெற்றனர். அதில், போதிய வசதிகளையும் ஆட்களையும் இந்திய தொல்லியல் துறையே நியமித்து கல்வெட்டுக்களை எடுத்துவர உத்தரவைப் பிறப்பித்தது.

அந்தக் காலகட்டத்தில் முன்பிருந்த இயக்குநருக்குப் பதிலாக, கூடுதல் பொறுப்பாக கல்வெட்டு இயக்குநராக மகேஸ்வரி இருந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உடனடியாக 1 லட்சம் மைப்படிகளில் 13 ஆயிரம் கல்வெட்டுக்களை டிஜிட்டல் செய்திருந்த காரணத்தால், முதலில், 2022 நவம்பர் மாதம் மைசூரிலிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளில் டிஜிட்டலான மைப்படிகள் மட்டும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வந்துசேர்ந்தன.

இந்த சூழ்நிலையில் 2023-ஆம் ஆண்டு மகேஸ்வரி ஓய்வுபெற்ற நிலையில், அந்த இடத்திற்கு அப்போதைய மத்திய கலாச்சார அமைச்சரான கிஷன் ரெட்டிக்கு நெருக்கமான முனிரத்னம் ரெட்டி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதற்கும் முன்பாகவே பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அழுத்தத்தின் காரணமாக தமிழகத்திற்கு கல்வெட்டுக்கள் சென்றுவிட் டால் ஒட்டுமொத்த வரலாறும் மாறிவிடும் என்பதால் ஒட்டுமொத்த ஆவணங்களையும் கிடப்பில்போட்டு மூடிமறைப்பதற்கான வேலையைச் செய்துவருகின்றனர்.

தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆயிரம் கல்வெட்டுக்களையும் பராமரிப்பதற்கு மத்திய அரசு இதுவரை நிதியளிக்கவில்லை. தமிழக அரசே அதற்கான தட்பவெட்ப நிலை யை உருவாக்கி பேணிக் காத்துவரும் சூழ் நிலையில், தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள இந்த 13 ஆயிரம் கல்வெட்டுக் களையும் மீண்டும் இந்திய தொல்லியல்துறைக்கு கொண்டுபோகத் திட்டம் தீட்டி, இயக்குனர் முனிரத்னம் மூலம் காய்நகர்த்தியுள்ளது ஒன்றிய அரசு.

அதன்படி 08-11-2024 அன்று, மைசூரில் இயங்கும் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்னம், இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மைசூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட கல்வெட்டுப் படிகள் மோசமான வானிலையைச் சந்திக்கும் சென்னை யின் பழமையான ஆங்கிலேயர் காலத்துக் கட்டடத்தில், இட வசதிகள்கூட இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூல மாக உறுதியான காரணங்கள் ஏதுமில்லாமல் இக் கல்வெட்டுப் படிகள் முழுமையாக டிஜிட்டல் செய்யப்படுவதற்குமுன்பே 2022 நவம்பர் மாதம், அப்போது கூடுதல் பொறுப்பிலிருந்த மகேஸ்வரி எந்தவித அவதானிப்பும் செய்யாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து கல்வெட்டுப் படிகளை சென்னைக்கு மாற்றிவிட்டார். அந்த கல்வெட்டுப் படிகள் மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு, மொழிவாரியாக கல்வெட்டுகளை மாநிலத்திற்குத் தரவேண்டும் என்று தமிழ்நாட்டைப் போல ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் கேட்கத்தொடங்கினால் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு உடைந்துபோகும். ஆகவே உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும், கல்வெட்டுப் படிகளை ஆராய்ந்து அதன் உண்மை நிலையைக் கண்டறிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் தலைமைக்கு பரிந்துரைக் கடிதமும் எழுதியுள்ளார்.

இப்படி கடிதம் எழுதிய இதே முனிரத்னம்தான், 2021-ஆம் ஆண்டு தமிழக கல்வெட்டுக்கள் பல காணாமல் போயுள்ளன... சில சிதைந்தும் போயுள்ளன... இந்திய தொல்லியல்துறை பல மைப்படிகளை தொலைத்துவிட்டதாகவும் தமிழ்நாடு விரைந்து நடவடிக்கை எடுத்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தவரும் அறிக்கையளித்தவருமாவார்.

இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. என்.ஆர் .இளங்கோ ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

கல்வெட்டுத்துறையில் அமைச்சர், துறை தலைமை அதிகாரி, முனிரத்தினத்துக்கு மட்டுமே தெரிந்த இந்த விவகாரம் எப்படி வெளியில் கசிந்தது என அத்துறை யியிலுள்ள சிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாம் ஒன்றிய அரசு. உள்நாட்டிலுள்ள நமது வரலாற்றுப் பொக்கிஷங்களைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

nkn211224
இதையும் படியுங்கள்
Subscribe