வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பா.ஜ.க., தி.மு.க.வின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்காக ஒரு தந்திரத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இதுபோன்ற தந்திர நடவடிக்கைகள் பீகார் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. பீகாரில் சம்பாஹரன் என்கிற மாவட்டத்தில் டாக்கா என்கிற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமார் எட்டாயிரம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்தது. அதை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் போராடி முறியடித்தனர். அந்த தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பைசல் ரகுமான் என்கிற இஸ்லாமியர் கடந்த தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போயிருந்தார். அந்த தொகுதியை குறிவைத்து இம்முறை பா.ஜ.க. வெற்றிபெற எஸ்.ஐ.ஆர். தந்திரத்தை பயன்படுத்தியது. எதிர்த்துப் போராடிய பைசல் ரகுமான் 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் போராட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரிசெய்ய வந்த அதிகாரியின் வீடு முற்றுகை யிடப்பட்டது. அவருக்கு ஆயுதம் தாங்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பா.ஜ.க., தி.மு.க.வின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்காக ஒரு தந்திரத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இதுபோன்ற தந்திர நடவடிக்கைகள் பீகார் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. பீகாரில் சம்பாஹரன் என்கிற மாவட்டத்தில் டாக்கா என்கிற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமார் எட்டாயிரம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பா.ஜ.க. முயற்சி செய்தது. அதை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் போராடி முறியடித்தனர். அந்த தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பைசல் ரகுமான் என்கிற இஸ்லாமியர் கடந்த தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போயிருந்தார். அந்த தொகுதியை குறிவைத்து இம்முறை பா.ஜ.க. வெற்றிபெற எஸ்.ஐ.ஆர். தந்திரத்தை பயன்படுத்தியது. எதிர்த்துப் போராடிய பைசல் ரகுமான் 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் போராட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரிசெய்ய வந்த அதிகாரியின் வீடு முற்றுகை யிடப்பட்டது. அவருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பை நிதிஷ்குமார் அரசு கொடுத்தது. ஆனாலும் இடைவிடாமல் போராடிய ஆர்.ஜே.டி. எட்டா யிரம் வாக்குகளை நீக்காமல் பாது காத்தது. அதனால் பைசல் ரகுமான் வெற்றி பெற்றார். இம்முறை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பா.ஜ.க.வின் எஸ்.ஐ.ஆர். சதியை கண்டுபிடித்து பைசல் ரகுமானுக்கு வாக்களித் தார்கள். ஆனாலும், அந்த தேர்தல் அதிகாரி பலரையும் நீக்கியதால் பைசல் ரகுமானால் வெறும் 178 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றிபெற முடிந்தது. இதுதான் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகக்கடுமையான போட்டி நிலவும் சட்டமன்றத் தொகுதிகளின் நிலை என்கிறார்கள் பா.ஜ.க.வின் தந்திரத்தை அறிந்தவர்கள்.
தமிழகத்தில் கடுமையான போட்டி நிலவும் அ.தி.மு.க.விற்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை பா.ஜ.க. கவனமாக எடுத்து வைத் துள்ளது. அந்த தொகுதிகளில் தி.மு.க.விற்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் தி.நகர் தொகுதி, மிக சொற்ப வாக்குகளில் தி.மு.க. ஜெயித்த தொகுதி. அந்த தொகுதியில் பா.ஜ.க.வும் வி.ஐ.பி. வேட்பாளரை நிறுத்தி எப்படியாவது வெற்றிபெற வைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக வெளி மாவட்டங்களில் இருக்கக்கூடிய தி.நகரைச் சேர்ந்த பா.ஜ.க. ஆதரவாளர்களை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த வாக்காளர்களை பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் கொண்டுவந்து பீகாரில் வாக்களிக்க வைத்துள்ளார்கள். அதே பாணியில் தி.நகரில் வாக்காளர்களை வெளியிலிருந்து கொண்டுவருவதற்கு தமிழக பா.ஜ.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
அதேபோல் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் நிறைந்த சோளிங்கநல்லூர் தொகுதியில் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற இடங்களில் பல பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் வசிக்கிறார்கள். ஒரு லட்சம் பேர் குடியிருக்கும் வீடுகளில் வெறும் இருபதாயிரம் வாக்காளர்கள்தான் பட்டியலில் இருக்கிறார்கள். அங்கு குடியிருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மிகக் கடினமான வேலை என தேர்தல் அதிகாரிகள் கைவிரிக்கிறார்கள். அங்கு போலி வாக்காளர்களை சேர்க்கும் முயற்சி நடை பெறுகிறது என பரவலாக புகார் எழுந்துள்ளது. அந்த தொகுதி பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. குறிவைக்கும் தொகுதிகளில் ஒன்று. தமிழக முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் 9000க்கும் அதிகமான போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனே அறிவித்திருக்கிறார். அங்கும் வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களை நீக்கிவிட்டு போலி வாக்காளர்களை சேர்க்கும் முயற்சி நடை பெறுகிறது என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/17/election1-2025-11-17-15-55-08.jpg)
இப்படி தமிழகம் முழுவதும் சுமார் அறுபது தொகுதிகளில் பீகார் பாணியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அவை பெரும்பாலும் தி.நகர், சோளிங்கநல்லூர் போல பா.ஜ.க. குறிவைக்கும் தொகுதிகள். இந்த தொகுதிகளில் பீகாரில் டாக்கா தொகுதியில் பைசல் ரகுமான் நடத்திய வீரம்செறிந்த போராட்டத்தைப் போல தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் மிகக் கவனமாக கண்காணித்து போராட்டம் நடத்த வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து விடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பீகாரில் காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் தேர்தல் பூத்துக்களில் உட்காரக் கூட ஆளில்லை. அந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்ற முடிவில் பா.ஜ.க. ஜெயித்து விட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க., த.வெ.க. போன்ற கட்சிகள் தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி கவலைப்படவே இல்லை. தி.மு.க.வினர் மட்டும் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிக்கிறார்கள். அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒரு சில எதிர்ப்புகளை தெரிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/17/election2-2025-11-17-15-55-22.jpg)
மத்திய தேர்தல் கமிஷன் நினைத்தால் அவர்களிடமுள்ள ஒரேயொரு சாப்ட்வேரை பயன்படுத்தி தவறான வாக்காளர்களை நீக்கிவிட முடியும். அதை பயன்படுத்தாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பேரில் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழையப் பார்க்கிறது பா.ஜ.க. என்கிறார் ராகுல்காந்தி.
"மத்திய தேர்தல் கமிஷன் தமிழகத்தில் பா.ஜ.க.வை வெற்றிபெற வைக்க என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டத் தோடு இருக்கிறது, அதை செயல்படுத்தியும் வருகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us