புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவையா? மருத்துவர்கள் வேதனை!

doctors' distress

மிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆலோசனைக்கூட்டம் கடந்த மே 6ஆம் தேதியன்று சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடந்தது. முதற்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டத்திலும், அடுத்ததாக பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் நம்மிடம், ""தமிழ்நாடு இன்று சுகாதாரக் கட்டமைப்பில் வலுவாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சுகாதாரத் துறையில், மருத்துவக்கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ.), ஊரக நலப்பணிகள் பிரிவு (டி.எம

மிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆலோசனைக்கூட்டம் கடந்த மே 6ஆம் தேதியன்று சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் நடந்தது. முதற்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டத்திலும், அடுத்ததாக பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் பணிகளை முடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் நம்மிடம், ""தமிழ்நாடு இன்று சுகாதாரக் கட்டமைப்பில் வலுவாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக சுகாதாரத் துறையில், மருத்துவக்கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ.), ஊரக நலப்பணிகள் பிரிவு (டி.எம்.எஸ்.), பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புப் பிரிவு (டி.பி.எச்) செயல்படுகிறது. 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 330 தாலுகா மருத்துவமனைகள், 2748 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன".

doctors

"தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 71 கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மட்டும் ஒவ்வொரு வருடமும் எம்.பி.பி.எஸ். 5,050 பேரும், எம்.டி, எம்.எஸ்., 2,197 பேரும், உயர் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்பு 390 பேரும், பல் மருத்துவம் 200 பேருமாக மொத்தம் 8 ஆயிரம் பேர்வரை படிக்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கணக்கிட்டால், ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் படித்துமுடிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்பதாகும். தமிழகத்தில் 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவுக்கு இருக்கிறார்கள்".

"இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதை சில ஆண்டுகளுக்கு கைவிட வேண்டும். இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் மேம்படுத்தவேண்டும். இப்போதுள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து வசதிகளும் உள்ளன. மற்றவற்றில் பல வசதிக் குறைபாடுகள் உள்ளன".

"உதாரணமாக, நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரியில் 50 சதவீத மருத்துவப் பேராசிரியர், சீனியர் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையே இதுவரை தொடங்கவில்லை. இந்த மருத்துவக் கல்லூரிக்கு வருபவர்களை வேலூர், புதுவை, திருச்சி, சென்னைக்கு அனுப்புகிறார்கள். பிறகெதற்கு மருத்துவக்கல்லூரி? இப்போது சுகாதாரத் துறையில் 19,866 டாக்டர்களும், 38,027 செவி-யர்களும், 60,181 இதர மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். இது இரு மடங்காக வேண்டும். 2019ல், மருத்துவமனைகளில் அதிகமாக மருத்துவர்கள் இருக்கிறார்கள் எனக்கூறி அதனை சீரமைக்கிறேன் என்கிற பெயரில் 4டி2 அரசாணை மூலம் 600 அரசு மருத்துவப் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. இதனால் மருத்துவக் கல்லூரிகளிலேயே கண் சிகிச்சை பிரிவில் 3, 4 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் தான் தினமும் ஓ.பி. பார்க்கவேண்டும், மெடிக்கல் கேம்ப் நடத்த வேண்டும், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும், உள்நோயாளிகளையும் பார்க்க வேண்டும். இப்படியிருந்தால் எப்படி சிகிச்சையளிக்க முடியும்?"

"உயர் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவதற்கான மருத்துவ பேராசிரியர்கள் பல மருத்துவக் கல்லூரிகளில் இல்லை. இதனால் மாணவர்களை சென்னைக்கு அனுப்பிவைத்து, ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடத்தை 2 வாரத்தில் கற்கச் செய்து எழுதுகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கு மெடிக்கல் கவுன்சில் ஆய்வுக்கு வரும்போதெல்லாம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செய்வதுபோலவே அரசு மருத்துவக் கல்லூரிகளும் டெபுடேஷனில் மற்ற கல்லூரிகளிலிருந்து டாக்டர்ஸ், நர்ஸ்களை ஆய்வு முடியும்வரை கொண்டுவந்து நிரப்புகிறோம். ஆய்வு முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்கே போய்விடுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து அமைச்சர் மற்றும் துறை செயலாளரிடம் முறையிட்டால், "கருவிகள் கேளுங்க, கட்டிடங்கள் கேளுங்க தர்றோம். புதிய மருத்துவர்களைக் கேட்கவே கூடாது' என்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ""புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு பதில், தற்போது இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மற்றும் உயர் சிறப்புத் துறைகளை தொடங்க வேண்டும். அனைத்து விதமான பரிசோதனைகளும் அரசு மருத்துவமனைகளில் செய்ய ஆய்வு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளை மேம்படுத்துவதை, போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்'' என்றார்கள்.

அரசு, சுகாதாரத்துறையை சீரமைக்குமா?

n
இதையும் படியுங்கள்
Subscribe