"ஹலோ தலைவரே, தமிழக அரசின் நீட் விலக்குத் தீர்மானத்தை ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது தமிழக மக்களை அதிரவைத்திருக்கிறது.''”
"ஆமாம்பா, நீட் விவகாரத்திலும் தமிழகத்தின் உணர்வை டெல்லி மதிக்கவில்லை.''”
"உண்மைதாங்க தலைவரே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மோடியின் ஒன்றிய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 9 ஆம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் கூட்டி யிருக்கிறார். தமிழக அரசின் இதுபோன்ற முயற்சிகள் பலனளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், இதுகுறித்து அதிகாரிகள், கல்வியாளர்கள் தரப்பில் விசாரித் தோம். ’இந்த கூட்டத்தில், ஒன்றிய அரசையோ, ஜனாதிபதியை யோ மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம். ஆனாலும் இது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக இருக்குமே தவிர, அதில் பெரிய பயன் விளை யும் என்று சொல்லமுடியாது. வேண்டுமானால் உச்சநீதிமன்றத் தில் சட்டரீதியாக போராடி, நீட் சட்ட மசோதாவை உடைக்க முடியுமா? என்பதை ஆராயலாம். ஆனால், அதை உடைப்ப தற்கும் வலிமையான பாயிண்டுகள் தேவை’ என்கிறார்கள். எனினும் நீட் விரட்டப்படும் என தமிழகம் நம்புகிறது.''”
"ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க.வால் எடப்பாடி டென்ஷனில் இருப்பதாகக் கூறுகிறார்களே?''”
"அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டுவருவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். அதன்பின், இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் களமிறங்கினார். அவர் நோக்கமே வேற. அவர், அ.தி.மு.க.வின் இன்னொரு சேனலாக, செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்துப் பேசிய நிலையில், சென்னை சோழா ஓட்டலிலும் செங்கோட்டையன் உட்பட அ.தி.மு.க.வினர் சிலரை சந்தித்து, காய் நகர்த்தினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் போட்டுக்கொடுக்கும் ரூட்டில்தான் அவர் அ.தி.மு.க.வுக்குள் மூக்கு நுழைக்கிறார் என்கிறார்கள். இந்த வானதியை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறதாம். இப்படி பா.ஜ.க.வில் ஆளாளுக்கு களமிறங்கி தங்கள் கட்சியை ஆட்டி வைக்கத் துடிப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம் எடப்பாடி. இந்த நிலையில் தங்கிய
"ஹலோ தலைவரே, தமிழக அரசின் நீட் விலக்குத் தீர்மானத்தை ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது தமிழக மக்களை அதிரவைத்திருக்கிறது.''”
"ஆமாம்பா, நீட் விவகாரத்திலும் தமிழகத்தின் உணர்வை டெல்லி மதிக்கவில்லை.''”
"உண்மைதாங்க தலைவரே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மோடியின் ஒன்றிய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 9 ஆம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் கூட்டி யிருக்கிறார். தமிழக அரசின் இதுபோன்ற முயற்சிகள் பலனளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், இதுகுறித்து அதிகாரிகள், கல்வியாளர்கள் தரப்பில் விசாரித் தோம். ’இந்த கூட்டத்தில், ஒன்றிய அரசையோ, ஜனாதிபதியை யோ மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம். ஆனாலும் இது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக இருக்குமே தவிர, அதில் பெரிய பயன் விளை யும் என்று சொல்லமுடியாது. வேண்டுமானால் உச்சநீதிமன்றத் தில் சட்டரீதியாக போராடி, நீட் சட்ட மசோதாவை உடைக்க முடியுமா? என்பதை ஆராயலாம். ஆனால், அதை உடைப்ப தற்கும் வலிமையான பாயிண்டுகள் தேவை’ என்கிறார்கள். எனினும் நீட் விரட்டப்படும் என தமிழகம் நம்புகிறது.''”
"ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க.வால் எடப்பாடி டென்ஷனில் இருப்பதாகக் கூறுகிறார்களே?''”
"அ.தி.மு.க.வை தங்கள் பக்கம் கொண்டுவருவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். அதன்பின், இதில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் களமிறங்கினார். அவர் நோக்கமே வேற. அவர், அ.தி.மு.க.வின் இன்னொரு சேனலாக, செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்துப் பேசிய நிலையில், சென்னை சோழா ஓட்டலிலும் செங்கோட்டையன் உட்பட அ.தி.மு.க.வினர் சிலரை சந்தித்து, காய் நகர்த்தினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் போட்டுக்கொடுக்கும் ரூட்டில்தான் அவர் அ.தி.மு.க.வுக்குள் மூக்கு நுழைக்கிறார் என்கிறார்கள். இந்த வானதியை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறதாம். இப்படி பா.ஜ.க.வில் ஆளாளுக்கு களமிறங்கி தங்கள் கட்சியை ஆட்டி வைக்கத் துடிப்பதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம் எடப்பாடி. இந்த நிலையில் தங்கியிருந்த ஓட்டலிலேயே பா.ஜ.க.வின் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை தன்னிச்சையாக நடத்தி, தங்கள் கட்சி தமிழக நிர்வாகியையும் டென்ஷனாக்கியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.''”
"சசிகலாவுக்காக எடப்பாடியிடம் தூது போகும் முயற்சி நடக்கிறதே?''”
"அண்மையில் அ.தி.மு.க. மாஜிக்களான வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோரை மணல் வணிகரான புதுக்கோட்டை எஸ் ராமச்சந்தி ரன் சந்தித்திருக்கிறார். அப்போது, அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்வது குறித்து ராமச்சந்திரன் கேட்க, அதற்கு, மாஜிக்கள் இருவரும், எங்கள் விருப்பம் சசிகலா அ.தி.மு.க.வுக்குள் வருவதுதான். ஆனால், எடப்பாடிதான் பயப்படுகிறார். கட்சிக்குள் அனுமதித்தால் ஆறே மாதத்தில் அ.தி.மு.க.வை சசிகலா கபளீகரம் செய்துவிடுவார் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால் எடப்பாடியிடம் நீங்களே பேசுங்கள் என்றார்களாம். இதை ஏற்றுக்கொண்ட ராமச்சந்திரன், ’விரைவில் எடப்பாடியை சந்தித்து, கட்சியில் சேர்க்க, நீங்கள் போடும் எல்லா கண்டிசன்களையும் சசிகலா ஏற்றுக்கொள்வார். ஜெ.’ மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவியைப் பெற நீங்கள் செய்த செலவுகளையும் அவர் கொடுத்து விடுவார். அந்த பணத்துக்கு நான் கேரண்டி. எனவே அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்’ என்று உறுதியான குரலில் சொல்லியிருக்கிறா ராம். இதில் மனம் குளிர்ந்துபோயிருக்கிறார்களாம் மாஜிக்கள்.''”
"மாநில நிர்வாகியை மாற்றும்படி பா.ஜ.க.விடம் எடப்பாடி நிர்பந்தித்ததன் நோக்கமே வேறு என்கிறார்களே?''”
"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அமித்ஷாவிடம் பல்வேறு நிபந்தனைகளை வைத்திருந்தார் எடப்பாடி. அதில், தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரை நீக்க வேண்டும். அவர் அப்பதவியில் இருந்தால் சீட் ஷேரிங்கில் சிக்கல் உருவாகும் என தெரிவித்தார் என்கிறார்கள். அ.தி.மு.க.வையும் எடப்பாடியையும் மாநில தலைவர் மோசமாக விமர்சித்ததால் தான், அவரை மாற்ற வேண்டும் என எடப் பாடி துடிப்பதாக அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மையில்லையாம். கொங்கு வேளாளர் சமூகத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் தலை தூக்கக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் பாலிசியாம். பா.ஜ.க. மாநிலத் தலைவரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால்தான் அவரை எடப்பாடி எதிர்க்கிறாராம். இதை ஒரு காரண மாக அமித்ஷாவிடம் சொல்லமுடியாது என்பதால்தான்,அந்த நிர்வாகி ஜெ.’வை இழிவுபடுத்திவிட் டார் என்றாராம். இதற் கிடையே, பா.ஜ.க. தலைவ ராக தஞ்சை கருப்பு முருகா னந்தம் அல்லது நாடார் பிரதி நிதித்துவத்திற்காக நடிகர் சரத்குமாரை தேர்ந் தெடுத்தால் பா.ஜ.க.வுக்கு அரசியல் லாபம் கிடைக் கும் என்றும் சொல்லி வருகிறாராம் எடப்பாடி''.”
"பா.ஜ.க.வுக்குள் இன்னும் என்னென்னவோ நடக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஓபிஎஸ்.ஸை பா.ஜ.க.வில் சேருமாறு பா.ஜ.க. தரப்பு அழுத்தம் கொடுத்துவருகிறதாம். நடிகர் சரத்குமார் பாணியில் உங்கள் எல்லா நடவடிக்கையையும் நிறுத்திவிட்டு, எங்கள் கட்சியில் வந்து சேருங்கள் என்கிறார்களாம். அப்படி சேர்ந்தால் அவர் மகனுக்கு அமைச்சரவை யில் இடம் தருவதாக டீலிங்கும் நடக்கிறது. இதற்கிடையே பா.ஜ.க. மாநில நிர்வாகியின் பதவி ஊசலாடிவரும் நிலையில், அவர் அவசர அவசரமாக மணல் தரப்பிடமிருந்து பெரிய தொகையை வாங்கியிருக்கிறாராம். இதை மோப்பம் பிடித்த கமலாலயத் தரப்பு எதற்கு இவ்வளவு பணம்? தனிக்கட்சியை ஆரம்பிக்கப் போகிறாரா? என்று டவுட்டைக் கிளப்புகிறார்கள்.''”
"பகுதி நேர ஆசிரியர்கள் பரிதவிக் கிறார்களே?''”
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி வருகிறது பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு. நம்மிடம் பேசிய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், "பணி நிரந்தரம் செய்வதாக எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, வாழ்க்கைக் கல்வி, கட்டிடக்கலை, தோட்டக்கலை ஆகிய பாடங்களை கற்றுத் தருகின்றார்கள். சம்பளம் வெறும் 10 ஆயிரம் ரூபாய்தான் தரப்பட்டது. நான்காண்டுகளுக்குப் பின் சம்பள உயர்வாக ரூ.2,500 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகூட, பணி நிரந்தரம் கேட்டு 2023ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 25 ந்தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் கிடைத்தது. மேலும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று யாரை கேட்பது என்றே தெரியவில்லை.’என்கிறார் ஆதங்கத்தோடு.''’
"எடப்பாடியை நம்பி பா.ஜ.க.வைப் பகைச்சிக்கிட்டேன்னு ஒரு அ.தி.மு.க. மாஜி மந்திரி புலம்பறாராமே?''
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வந்தவர் மாஜி மந்திரி ஜெயக்குமார். எடப்பாடி டெல்லிக்குச் சென்று அமித்ஷாவிடம் இணக்கமாக பேசிவிட்டுத் திரும்பியிருக்கும் நிலையில், அப்செட்டாகவே இருக்கும் அவர், "எனக்கும் பா.ஜ.க.வுக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு எதுவும் இல்லை. என் மகனுக்கு மாநிலங்களவை சீட் தர்றேன்னு சொல்லிச் சொல்லியே, பா.ஜ.க.வை தொடர்ந்து அட்டாக் பண்ண வச்சார் எடப்பாடி. அவரும் பா.ஜ.க. எதிர்ப்பில் உறுதியாக இருப்பார்னு நினைச்சி, நானும் அந்தக் கட்சியைப் பொளந்து கட்டி, டெல்லிக்கு எதிரியா ஆயிட்டேன். இப்ப எடப்பாடி என்னடான்னா, டெல்லியோட கள்ளத்தனமா நட்பு வச்சிக்கிட்டு டிராமா போடுறார். யாரை நம்புனாலும் சரி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கிற எடப்பாடிய மட்டும் இனி யாரும் நம்பிறாதீங்க'னு சக அ.தி.மு.க. சீனியர்களிடம் புலம்பியபடியே இருக்கிறாராம்.''”’
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக யாருக்கு ஆதரவு ? என்ற ஒரு சர்வே, நக்கீரன் வெப் சார்பில் எடுக்கப்பட்டது. அதில், 44 சதம் பேர் நடிகர் சரத்குமார் வர வேண்டும் என வாக்களித்துள்ளனர். சரத்துக்குக் கிடைத்த இந்த வாக்கு சதவீதத்தை உற்று நோக்குகிறதாம் தமிழக பா.ஜ.க.''”
___________
மோடி சொன்ன பொய்!
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, "2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒதுக்கியதை விட 3 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒதுக்கியுள்ளது'' என்று பேசியிருந்தார். அதற்கு தனது எக்ஸ் தளப் பதிவில் பதிலடி கொடுத்த முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "கடந்த 2004-14ஆம் ஆண்டுகளில் வழங்கிய நிதியை விட 2014-2024 ஆண்டுகளில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதாரம் படிக்கும் முதலாண்டு மாணவி யிடம் போய் கேளுங்கள். பொருளாதார அளவீடுகள், முந்தைய ஆண்டைவிட அடுத்தடுத்த ஆண்டுகளில் எப்போதும் அதிகமாகவே இருக்குமென்பதைக் கூறுவார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி. முன்பைவிட தற்போது அதிகமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டின் அளவும், மொத்த செலவீனமும்கூட அதிகமாகவே இருக்கும். எனவே, "எண்கள்' அடிப்படையில், பார்த்தால் எண்ணிக்கை பெரியதாக இருக்கும். ஆனால், ஜி.டி.பி. விகிதாச்சாரம் அடிப்படையில் அல்லது மொத்த செலவின விகிதாச்சார அடிப்படையில் அதிகமாக உள்ளதா?' என்று கேள்வியெழுப்பி விமர்சித்துள்ளார்.
-கீரன்
___________
இறுதிச்சுற்று!
தி.மு.க.வுக்கு எதிராக ரெய்டு ஆயுதம்!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக ஏப்ரல் 7-ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
அவரது வங்கிக் கணக்கில் பண பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இவரது சகோதரரான ரவிச் சந்திரனுக்குச் சொந்தமான கோவை மசக்காளிபாளையம் பகுதியிலுள்ள டி.வி.ஹெச் (பழ்ன்ங் ஸ்ஹப்ன்ங் ட்ர்ம்ங்) என்னும் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை யினர் சோதனை செய்துவருகின்றனர். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான இடங்களும் அமலாக்கத் துறையின் ஆய்வுக்குத் தப்பவில்லை.
இந்த சோதனைக்கான முக்கிய காரணங் கள் குறித்து விசாரித்தபோது, தமிழக பா.ஜ.க. மா.த. தி.மு.க.வுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளதும், அவருடன் தொடர்பிலிருக்கும் தி.மு.க. அமைச்சர்கள் குறித்தும், பா.ஜ.க. நிர்வாகியான கே.டி.ராகவன் மூலம் நிர்மலா சீதாரமனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில், அவரை மாநில பொறுப்பிலிருந்து மாற்றுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
2026 தேர்தல் வரை இதுபோல் தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகளைக் குறி வைத்து ரெய்டுகள் தொடருமென்றும் கூறப்படு கிறது.
-துரை.மகேஷ்