Advertisment

ராங்கால் தள்ளிப் போகும்  தமிழக தேர்தல்? தி.மு.க. வுக்கு  எதிராக டெல்லி வியூகம்!

rang

"ஹலோ தலைவரே.. தி.மு.க.வும் காங்கிரஸும் சீட் ஷேரிங் சம்பந்தமா நிறைய விவாதிச்சிருக்காங்க.''”

Advertisment

"விவாதத்துல என்ன முடிவாகியிருக்குன்னு சொல்லு.''”

"ஸ்டாலினை வந்து சந்திச்சி விவாதிச்சிட்டு கேரளாவுக்குப் பறந்தாரு கே.சி.வேணுகோபால். கேரளாவுலயும் சட்டமன்றத் தேர்தல் நடக்க விருப்பதால், தேர்தல் பணிகள் தொடர்பாக ரெண்டு நிகழ்ச்சிகளில் வேணுகோபால் கலந் துக்கிறதா இருந்தது. ஆனா, ராகுலிடமிருந்து அவசர அழைப்பு வந்ததால ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செஞ்சிட்டு டெல்லிக்குப் போனாரு. ராகுலை சந்திச்சப்போ, இருவரும் நிறைய விசயங்களை விவாதிச் சிருக்காங்க. ஸ்டாலினைச் சந்திச்சப்போ, பவர் ஷேரிங் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. கூடுதல் சீட்டுக்கும் வாய்ப்பில்லை. நாங்க கொடுக்கிற சீட்டை வாங்கிக்குங்க, அத்த னையும் வின்னிங் சீட்டுன்னு ஸ்டாலின் அழுத்தமா சொன் னதை வேணு கோபால் விவரிச் சிருக்காரு. ஸ்டா லினுடன் 45 நிமிடம் பேசிய முழு விவரங் களையும் கேட்டு அப்செட்டாகிவிட்டார் ராகுல். தி.மு.க.வோட பேச்சு, கூட்டணியிலிருந்து நாமே வெளியேற ணும்ங்கிற தொனியில இருக்கு. தி.மு.க. கூட்டணியா? த.வெ.க. கூட்டணியா? தீர்க்கமாக ஒரு முடிவை எடுங்கன்னு வேணுகோபால் வலியுறுத்தியிருக்காரு.''”

Advertisment

"அப்புறம்?''”

"அம்மாவும் (சோனியா) கார்கேவும் தி.மு.க.வைவிட்டு நகரக்கூடாதுன்னு சொல்லிக் கிட்டே இருக்காங்க. அம்மா வழியாக தி.மு.க. அரசியல் செய்யுது. என்ன முடிவெடுக் கிறதுன்னே தெரி யல! பார்லி மெண்ட் தேர்தல்னா கூட யோசிக்க லாம். ஆனா, அசெம்ப்ளி தேர்தலிலும் ரிஸ்க் எடுக்கலைன்னா கட்சியை எப்ப டித்தான் வளர்க் கிறது? மாநில நிர்வாகிகளின் கருத்துக்கு மதிப்புக்கொடுக்காமல் அரசியல் முடிவை எடுத்தால், கட்சி வளரலைன்னு அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்கமுடியும்னு ஆதங்கப்பட்டு பேசியிருக் காரு ராகுல்காந்தி.''”  

rang1

"தமிழகத்துல ஏப்ரல் மாசம் தேர்தல் நடக்கும்னு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாசத்துக்கு தள்ளிப்போகுதாமே? ஏதேனும் காரணம் இருக்காப்பா?''”

"தமிழகம் உள்பட அஞ்சு மாநிலத்துல தேர்தல் நடக்கவிருக்குது. இதில் மேற்கு வங்கமும், அஸ்ஸாமும் அடக்கம். இந்த மாநிலங்களுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கும். அந்த ஐந்தாம் கட்டத் தேர்தல்ங்கிறது மே மாசம் முதல் வாரத்துல நடக்கும். அதனால கடைசியா நடக்கிற ஐந்தாம்கட்டத்துல தமிழகத் துக்கு தேர்தலை நடத்தலாம்னு சொல்றாங்க. இதுக்கு என்ன காரணம்னா, மகளிருக்கு தி.மு.க. கொடுத்த 5,000 ரூபாய் நிதியுதவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ஒரு ரிப்போர்ட் போட்டிருக்கு. அதைப் பார்த்து டென்ஷனான டெல்லி, ஏப்ரல் ஆரம்பத்துலயே தேர்தல் நடந்தா 5,000 ரூபாயின் தாக்கம் மக்களிடம் எதி ரொலிக்கும். கொஞ்ச நாட்களைத் தள்ளிப் போட்டா அந்த தாக்கம் மக்களிடம் குறைஞ் சிடும்னு கணக்குப் போட்டுத்தான் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்.''”

"அதிகாரத்தில் இருப்பவங்களுக்கே இந்த நிலையான்னு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புலம்பியிருக்கா

"அதிகாரத்தில் இருப்பவங்களுக்கே இந்த நிலையான்னு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புலம்பியிருக்காங்களே, என்ன விஷயம்?''”

"சென்னை கோயம்பேட்டில் இருக்கிற தெற்காசிய விளையாட்டு கிராம வளாகத்துல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காக  அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு. இதுல கிட்டத்தட்ட 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடும்பத்தோடு வசிக்கிறாங்க. ஆனா, இந்த வளாகத்துல எந்த பராமரிப்பும் சரியில்ல; பாதுகாப்பும் கேள்விக்குறியா இருக்கு. குறிப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கார் டிரைவர்களாக டெக்ஸ்கோ நிறுவனத்துல இருக்கும் எக்ஸ் சர்வீஸ்மேன் களைத்தான் நியமிச்சிருக்காங்க. இந்த டிரைவர்களில் சிலர், மொட்டை மாடிவரை போய் அங்கே அரட்டை அடிக்கிறார்களாம். இதனால், மொட்டை மாடிக்குச் செல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெண் பிள்ளைகள் பயந்துபோய் வீட்டுக்கு ஓடி வந்திடுறாங்க. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்குன்னு அதிகாரிகள் புலம்புறாங்க.''”

"தி.மு.க. கூட்டணில இணைஞ்சாலும், சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா போட்டியிடமாட்டார்னு தகவல் வருதே?''”

rang3

"நிஜம்தான் தலைவரே, என் காதுக்கும் அப்படியொரு சேதி வந்துச்சு. இந்த முறை அவர் விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் என தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பான தொகுதிகளில் போட்டியிடுவார் என கட்சியினர்  பேசிக்கொள் கின்றனர். தொண்டர்கள் பலரும் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கும்போது பிரேமலதா போட்டியிடணும்னு பணம் கட்டி விருப்பமனு கொடுத்துள்ளனர். ஆனால் பிரேமலதா கட்சியினரிடம் "எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. நமது கட்சியில் பல கோஷ்டிகள் உருவாகியுள்ளன. முதலில் கோஷ்டிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவாங்க. அதன்பிறகு போட்டியிடுவது பற்றி யோசிக்கலாம்' என்று கட்சிப் பொறுப்பாளர்களிடம் சொல்லியிருக்காராம்.''”

"விராலிமலையில விஜயபாஸ்கர் தேர்தல் ஆட்டத்தைத் தொடங்கிட்டார் போலிருக்கே?''’

"ஆமா, 2021-ல் கட்சி ஆட்சிக்கு வரலைன் னாலும் விராலிமலையில விஜயபாஸ்கர் ஜெயித்திருந்தார். இந்தமுறையும் எப்பாடு பட்டாவது ஜெயிக்கணும்னு வியூகம் வகுத்துக் கிட்டிருக்கிறார். இதற்கிடையில தி.மு.க.வின் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரான செல்லபாண்டியன், "தி.மு.க. செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கிட்டிருக்கார். கூடவே, அமைச்சராக இருப்பதற்கு முன்னால் விஜயபாஸ்கரின் சொத்து, அமைச்சராக ஆன பிறகு சம்பாதித்த சொத்து என ஒரு பட்டியலையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். பார்த்தார் விஜயபாஸ்கர், தனது பினாமியான வெடிமருந்து வியாபாரி பாபுவின் மூலமாக, தி.மு.க.வின் இலுப்பூர் பேரூராட்சி நகர பொருளாளர் கருப்பையாவை போதை யேற்றிப் பேசவைத்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு மா.செ. செல்லப்பாண்டியன் செயல்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அழுகுணி ஆட்டம் ஆடிவிட்டார். தொலைக்காட்சி வரை போய் விஷயம் ஒளிபரப்பான நிலையில், மறுநாள் போதை தெளிந்து தெளிவானதும் "அய்யயோ... நான் தவறா பேசிட்டேன்" என பொருளாளர் கருப்பையா பதறியிருக்கிறார்.''” 

"அமைச்சர் முத்துச்சாமி தொகுதி மாறலாமான்னு யோசிக்கிறதா செய்தி வருதே, உண்மைதானா?''”

"இந்த முறை ஏற்கனவே வெற்றிபெற்ற ஈரோடு மேற்கினை விடுத்து, சிறிய தொகுதியான ஈரோடு கிழக்கிலேயே போட்டியிடலாம். தொகுதி மாறினால் நல்லதா? என தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் அமைச்சர் முத்துச்சாமி ஆலோசித்ததாக தகவல் வருகிறது. ஈரோடு கிழக்கு சிறிய தொகுதி என்றாலும் இந்த ஆட்சியில் மட்டும் இரண்டு இடைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. அதுபோக, "2011ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கிலே நீங்கள் தோல்வியுற்றீர்கள். ஆதலால் தொகுதி மாறும் அந்த யோசனை வேண்டாம் என அவரது நம்பகமான ஆலோ சகர்கள் தெரிவித்திருந்தார் கள். ஆனால், இவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? எனத் தெரிந்தால் அதனைத் தவிர்த்து வேறொரு தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்கமுடியும்..? ஆகையால் சீக்கிரம் முடிவெடுங்கள் அமைச்சரே' என பேசிவருகின்றனர் ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர்.''”

"தேர்தலால் நயினார் நாகேந்திரன் காட்டில் வசூல் மழையாமே?''” 

"நயினார் நாகேந்திரனின் முன்னாள் உதவியாளர்கள் ஒரு டீம் அமைத்து கலெக்சன் வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். இதைத் தவிர முருகனும் ஒரு பக்கம் எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தருகிறேன் என்று கலெக்சன் செய்கிறார். நயினாரின் மகன் பாலாஜி, இதில் மும்முரம் காட்டிவருகிறார். பா.ஜ.க. தேர்தல் நிதியாக தமிழகத்துக்கு 1000 கோடி ரூபாய் தரத் திட்டமிட்டுள்ளது. அதில் எத்தனை முடியுமோ அவ்வளவு சுருட்டிக்கொள்ள ஆசைப் படுகிறார்கள். இதில் கேசவவிநாயகம் இல்லாதது வசதியாகப் போய் விட்டது இவர்களுக்கு. ஆர்.எஸ்.எஸ். ஸைச் சேர்ந்த செந்தில்தான் கேசவவிநாயகத்தின் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். அண் ணாமலையின் கூட்டாளியான இவரும் செல்வத்தில் கொழித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். முன்னாள் செம்மரக் கடத்தல்காரரான ஒருவருக்கு சீட் கொடுப்பதாக 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். அதேபோல தி.நகர் சீட்டுக்கு 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் அ.தி.மு.க.வினருக்கும் தலைமையிடம் பேசி சீட்டுக்கள் வாங்கித் தருவதாக கலெக்சன் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரம் எடப்பாடிக்குத் தெரியவர, தலையிலடித்துக்கொண்டாராம்.''”

"மடப்புரம் கோவில் காவலாளி வழக்குல டி.எஸ்.பி.க்கு மதுரை நீதி மன்றம் உத்தரவு பிறப்பிச்சிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, அஜித் குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரித்த நிலையில், தற்போது அதன் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவ்வழக்கில் ஏற்கெனவே தனிப்படைக் காவலர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட் டுள்ளனர். இந்த வழக்கில் மானா மதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ. சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர்கள் நால்வரையும் பிப்ரவரி 25-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டி ருந்தது. ரமேஷ், சிவக்குமார், இளையராஜா மூவரும் ஆஜரான நிலையில் டி.எஸ்.பி. சண் முகசுந்தரம் ஆஜராகாமல், விலக்களிக்கக்கோரி மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அசன்முகமது, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கை மறுநாளுக்குத் தள்ளிவைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.''”

"கமுதி கோட்டைமேட்டில் புதுக்கொடி அறிமுகம் செய்து பேசிய ஜெ.வின் உடன்பிறவா சகோதரி சசிகலா, எடப்பாடி மீது ஷாக்கிங் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்காரே?''”

"புதுக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து, மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய சசிகலா, பேச்சில் எடப்பாடி யின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை. ஆனால் அவர் செய்த துரோகங்களை அடுக்கி தனது குமுறலைத் தீர்த்துக்கொண்டார். "அவரை (எடப்பாடியை) முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றேன். இரு மாதங்களுக்குப் பின் நாலைந்து அமைச்சர்கள் வந்து சென்னை சிறைக்கு வரும்படி அழைத்தனர். சென்னை சிறைக்கு வந்தால், அ.தி.மு.க. ஆட்சியிலிருப்பதைப் பயன் படுத்தி நான் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டதா பேச்சுவரும்னு மறுத்துட்டேன். ஆனா பெங்களூரு சிறையிலும் கொடுமைகளை அனுபவித்தேன். அதுக்குக் காரணம் நான் முதல்வராக்கினவரோட அழுத்தம்தான்னு தெரியவந்து அதிர்ச்சியடைந்தேன். நல்ல வேளை, சாமி புண்ணியத்துல சென்னை சிறைக்கு செல்லவில்லை. அவர் கட்டுப்பாட்டி லிருந்த சிறைக்குச் சென்றிருந்தால் நான் இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கவே மாட்டேன். சிறையிலேயே என்னைக் கொல்ல சதி செய்தாங்க. என் கணவர் நடராஜன் இறந்தபோது பெங்களூர் சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் கொடுக்க முடிவுசெய்திருந்தது. ஆனால் நான் உருவாக்கிய முதலமைச்சரின் அரசு 5 நாள்தான் கொடுக்கமுடியும்னு சொன்னதாக சிறை அதிகாரி கூறினார். அத்துடன் சென்னையிலிருந்து போன் செய்த போலீஸ் அதிகாரியின் பேச்சை போனின் ஸ்பீக்கரில் போட்டு எனக்குக் காட்டினார். சென்னையிலிருந்து பேசிய அதிகாரி, “முதலமைச்சர்தான் 5 நாட்கள் மட்டும் கொடுங்கள் எனக் கூறினார்னு”சிறை அதிகாரியிடம் கூறினார். இதைக் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் ஆட்சி அமைத்த அரசு, மூன்றே மாதத்தில் எனக்கு இவ்வளவு துரோகம் பண்ணியும், நெஞ்சில் ஈட்டியைக் கொண்டு குத்தியும் கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் அமைதியாக இருந்தேன்னு எடப்பாடியின் வண்டவாளங் களை எல்லாம் தண்டவாளத்துக்கு ஏத்திப் பேசியிருக்கார்.''”

"கேரளத்தில் பெண் அமைச்சர் வீணா ஜார்ஜ் தாக்கப்பட்டிருக்கிறாரே என்ன காரணம்?''

rang2

"தலைவரே.. சுகாதாரத்துறையின் மோசமான செயல்பாடுகளுக்கு அமைச்சரே காரணம் என கேரள மாணவர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து கடந்த சில நாட்களாக கண்ணூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 25-ஆம் தேதி கண்ணூர் ரயில் நிலை யத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் கவுண்டர் அருகே வந்த அமைச்சர் வீணா ஜார்ஜை முற்றுகையிடும் முயற்சியில் இறங்கினர் போராட்டக்காரர்கள். அமைச்ச ருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து மாவட்ட அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், இதில் தனக்கு கழுத்திலும் கையிலும் காயம் ஏற்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் போராடவில்லை, குண்டர்கள் போல நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட வர்களோ, “"முதல்வரோ, அமைச்சரோ அந்த வீடியோவை வெளியிடவேண்டும். எங்களை காவல்துறை நெருங்கக்கூட அனுமதிக்க வில்லை'’என விளக்கமளித்துள்ளனர்.

"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன். தேர்தலை ஒட்டி போலீஸ் அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறார்கள். அதில் பெரிய அதிகாரிகளும் அடக்கம். டி.ஜி.பி.யே மாறுகிறார். டி.ஜி.பி.யாக சீமா அகர்வால் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என மூன்றாண்டு பதவி வகித்தவர்கள் எல்லாம் இப்படி கொத்தாக மாறுவது தி.மு.க.வுக்கு மைனஸ் பாயிண்டாக மாறலாம் என்கிறார்கள் தேர்தல் நோக்கர்கள்.''”

--------------------------------------------------------------------

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை யொட்டி இந்த இதழில் விளம்பரங்கள் சற்று கூடுத லாக இடம்பெற்றுள்ளன. வரும் இதழில் வழக்கம் போல் செய்திகள் இடம் பெறும் என்பதை வாசகர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.   

 (ஆர்.)

திருவிளக்கு பூஜையை தொடங்கிவைத்த துர்கா ஸ்டாலின்!

rangbox

கொளத்தூர் தொகுதியில் புதியதாக துவங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 24ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று, 2,100 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையை முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் 6வது மண்டலக்குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.     

-கீரன்

--------------------------------------------------------

இறுதிச் சுற்று!
திராவிட கட்சிகளுடன் கூட்டணி! -ராமதாஸ்

rangbox1

பா.ம.க.வின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் 26-ஆம் தேதி நடந்தது. தேர்தலை எதிர்கொள்வது, சின்னத்தை மீட்பது, தேர்தல் யுக்திகள், யாருடன் கூட்டணி என்பது உட்பட பல்வேறு பிரச் சினைகள் குறித்து விவாதித்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். கூட்டம் முடிந்ததும் பேட்டியளித்த அவரிடம் பல்வேறு கேள்வி கள் கேட்கப்பட்டன. அப்போது, "யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்லமுடியாது. ஆனால், திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி. அதைப் பற்றி 28-ஆம் தேதி சொல்கிறேன்'' என்று தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி அரசியலில் நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அதாவது,  அ.தி. மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி இருக்கிறார். அதனால் அங்கு ராமதாஸ் சேரமுடியாது. தி.மு.க. கூட்டணியில், "பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம்' என திருமாவளவன் சொல்லி வருவதால், தி.மு.க.வில் சேர்வதும் கடினம். அப்படி யிருக்க எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி வைப்பார்?' என்ற கேள்வி அதிக டெஸிப-ல் எதிரொலிக்கிறது.      

-இளையர்

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe