கர்நாடகத்தில் வெற்றி பெற்ற தமிழக தேர்தல் வியூகம். அண்ணாமலைக்கு தயாராகும் ஆப்பு!

ff

டந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெறும் என நக்கீரன் எழுதியது. கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு காரணம் தமிழகத்தில் தி.மு.க. அடைந்த வெற்றியின் பார்முலாவையும் அ.தி.மு.க. எடப்பாடி 75 தொகுதிகளில் வெற்றிபெற்ற பார்முலாவையும் சேர்த்து அமல்படுத்தியதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுக்க முழுக்க கன்னடர்களால் நிர்வகிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாறிவிட்டது. பி.எல்.சந்தோஷ் என்கிற கன்னட பிராமணர் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கக்கூடிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக பொறுப் பேற்றதுதான் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனை. அவர் எடியூரப்பாவை வீழ்த்தி விட்டு முதல்வராக விரும்பினார். அதற்காக எட்டு பா.ஜ.க. அமைச்சர்களை ஹனி டிராப் எனப்படும் ஆபாச வலையில் வீழ்த்தி தமிழகத்தில் கே.டி. ராகவனை பி.எல்.சந்தோ ஷின் சிஷ்யரான அண்ணாமலை வீழ்த் திய ஸ்டைலில் வீழ்த்தினார். பா.ஜ.க.வை தென்னிந்தியாவில் நிலைநிறுத்திய ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா, தற்போதைய காங்கிரஸ் தலைவரான சித்த ராமையாவுடன் ஒன்றாக ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா தளத்தில் சமகாலத் தில் பயணித்தவர். இருட்டில் எரிகிற ஒற்றை விளக்காக கர்நாடக மக்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருந்த எடியூரப்பாவை ஊதித் தள்ளினார் பி.எல்.சந்தோஷ். எடியூரப்பா தனது சிஷ்யனான பசவராஜ் பொம்மையை தனக்குப் பதிலாக முதல்வராக்கினார். பொம்மையை முதல்வர் பதவியில் நீடிக்க விடாமல் கர்நாடகாவை சேர்ந்த பிராமண வகுப்பினரான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை முதல்வ ராக்க முயற்சி செய்தார் பி.எல்.சந்தோஷ். அத் துடன் நிற்காமல் பொம்மை அமைச்ச ரவ

டந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெறும் என நக்கீரன் எழுதியது. கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு காரணம் தமிழகத்தில் தி.மு.க. அடைந்த வெற்றியின் பார்முலாவையும் அ.தி.மு.க. எடப்பாடி 75 தொகுதிகளில் வெற்றிபெற்ற பார்முலாவையும் சேர்த்து அமல்படுத்தியதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுக்க முழுக்க கன்னடர்களால் நிர்வகிக்கக்கூடிய ஒரு அமைப்பாக மாறிவிட்டது. பி.எல்.சந்தோஷ் என்கிற கன்னட பிராமணர் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கக்கூடிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக பொறுப் பேற்றதுதான் கர்நாடக அரசியலில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனை. அவர் எடியூரப்பாவை வீழ்த்தி விட்டு முதல்வராக விரும்பினார். அதற்காக எட்டு பா.ஜ.க. அமைச்சர்களை ஹனி டிராப் எனப்படும் ஆபாச வலையில் வீழ்த்தி தமிழகத்தில் கே.டி. ராகவனை பி.எல்.சந்தோ ஷின் சிஷ்யரான அண்ணாமலை வீழ்த் திய ஸ்டைலில் வீழ்த்தினார். பா.ஜ.க.வை தென்னிந்தியாவில் நிலைநிறுத்திய ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா, தற்போதைய காங்கிரஸ் தலைவரான சித்த ராமையாவுடன் ஒன்றாக ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா தளத்தில் சமகாலத் தில் பயணித்தவர். இருட்டில் எரிகிற ஒற்றை விளக்காக கர்நாடக மக்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருந்த எடியூரப்பாவை ஊதித் தள்ளினார் பி.எல்.சந்தோஷ். எடியூரப்பா தனது சிஷ்யனான பசவராஜ் பொம்மையை தனக்குப் பதிலாக முதல்வராக்கினார். பொம்மையை முதல்வர் பதவியில் நீடிக்க விடாமல் கர்நாடகாவை சேர்ந்த பிராமண வகுப்பினரான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை முதல்வ ராக்க முயற்சி செய்தார் பி.எல்.சந்தோஷ். அத் துடன் நிற்காமல் பொம்மை அமைச்ச ரவையில் இருந்த அனைத்து அமைச் சர்களையும் ஊழல் செய்த பணத்தை தனக்கு தர வேண் டும் என உத்தரவிட் டார். இதனால் ஊழல் பெருகியது.

kk

அத்துடன் நில்லாமல் இந்தியாவில் இந்துத் துவத்தின் முன்மாதிரி மாநிலமாக கர்நாடகாவை உருவாக்க வேண்டும் என பி.எல்.சந்தோஷ் உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த கட்டளையை ஏற்று பசுவதை தடைச் சட்டம், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியத் தடை, திப்பு சுல்தானின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கியது, விவசாயிகள் போராட்டத்தால் மத்திய அரசு வாபஸ் பெற்ற விவசாயச் சட்டங்களை கர்நாடக அரசின் திட்டங்களாக கர்நாடகத்தில் அமல்படுத்தியது, இறுதியாக, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்து அதை லிங்காயத்துகளுக்கும் ஒக்கலிகர்களுக்கும் பிரித்துக் கொடுத்தது என குஜராத்தை விட, உ.பி.யை விட, இந்துத்துவத்தில் சிறந்த மாநிலம் கர்நாடகா என பி.எல்.சந்தோஷ் உருவாக்க நினைத்தார்.

இது எதிர் விளைவுகளை உருவாக்கியது. பி.எல்.சந்தோஷினால் அவமானப்படுத்தப்பட்ட லிங்காயத்து பிரிவைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தேர்தலில் போட்டியிடுவதற்கு பி.எல்.சந்தோஷ் தடை விதிக்க முயன்றார். அதேபோல் kkபழுத்த ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெகதீஷ் ஷெட்டரை பி.எல்.சந்தோஷின் சிஷ்யர் அண்ணாமலை மூலம் அவமானப்படுத்தினார். அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப் பட்டது. லிங்காயத் மடங்கள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்பின. பெல்லாரி பகுதியில் ஜனார்த்தன ரெட்டி என்கிற பா.ஜ.க. ஆதரவாளரை பி.எல்.சந்தோஷ் அவமானப்படுத்த, அவர் தனிக்கட்சி தொடங்கி பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்பினார். மிச்சமிருந்தது ஒக்கலிகா சமூகம். இந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் கர்நாடக காங்கிரஸ் கட்சித்தலைவர் சிவக்குமார்.

தமிழகத்தில் இருந்து கர்நாடகா வுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வேலைகளை கவனிக்க சுனில் என்கிற தேர்தல் வியூக அமைப்பாளர் அனுப்பப் பட்டார். அவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முழுவதுமாக ஆராய்ந்தவர். தமிழகத்தில் தி.மு.க.வின் அலையை தடுத்து நிறுத்த எடப்பாடி “"நான் கவுண்டர், அ.தி.மு.க. வெற்றிபெற்றால் கவுண்டர் முதலமைச்சர் ஆவார்''”என ஒரு பிரச்சாரத்தை துவக்கி நடத்தினார். அதை திட்டமிட்டுக் கொடுத்தது சுனில்தான். அதேபோல் சிவக்குமார் “காங்கிரஸ் வெற்றிபெற்றால் ஒக்கலிகா முதலமைச்சராவார்” என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இது ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த தேவகவுடாவின் வாக்குகளில் ஒரு பெரிய சரிவை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த தேர்தலில் தேவகவுடாவின் வாக்குகள் ஐந்து சதவீத வீழ்ச்சியை சந்தித்ததுதான் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் 36 சதவீத வாக்குகளைக் கொண்ட பா.ஜ.க. வாக்கு சதவீதத்தை அதிகரிக் காமல் இருக்க சுனில், தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற தேர்தல் வியூகங்களை அமுல்படுத்தினார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் 2000 ரூபாய் ஊக்கத்தொகை, ரேஷனில் இலவச அரிசி, வேலையற்றவர்களுக்கு உதவித்தொகை ஆகியவை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைத்தார். ஒரு வருட காலம் கர்நாடகத்தில் தேர்தல் பணியாற்றிய சுனில் மற்றும் அண்ணாமலை போலவே தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சிக் காக களம் இறங்கிய சசிகாந்த் ஐ.ஏ.எஸ். இருவரும் சேர்ந்து மாதம் ஒருமுறை கர்நாடகாவில் மக்கள் மனநிலையை படம் பிடித்து தேர்தல் வியூகங்களை வடிவமைத்தனர். அண்ணாமலை போலவே ‘இணையதள வார் ரூம்களை கர்நாடகாவில் உருவாக்கி நவீன தொழில் நுட்ப உத்தியான சமூக வலைத்தள பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

பே.டி.எம். என்பதை மாற்றி பே.சி.எம் என முதல்வருக்கு ஊழல்களில் உள்ள பங்கை வெளிப்படுத்தினர். "நாற்பது சதவிகித சர்க்காரா?' என ஒரு கோஷத்தை உருவாக்கி அதை பிரச்சாரத்துக்கு வந்த பிரியங்கா மூலம் சொல்ல வைத்தனர். மல்லிகார்ஜுன் கார்கே என்கிற கன்னட தலித் தலைவர், காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டது கர்நாடக தலித்து களை காங்கிரஸ் கட்சி பக்கம் அணி திரள வைத்தது. சகித்துக்கொள்ளவே முடியாத இந்துத்துவா மாடல், இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வைத்தது. இப்படி லிங்கா யத்துகள், ஒக்கலிகர்கள், மைனாரிட்டிகள், தலித்து கள், இது தவிர ஊழலை எதிர்க்கும் பொதுமக்கள், வறுமையில் வாடும் மக்கள் என சமூகத்தில் அனைத்துப் பிரிவினரையும் வெற்றிகரமாக காங்கிரஸ் அணி திரட்டியது.

இதனால் பா.ஜ.க. மிரண்டு போனது. பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். மூலம் வகுப்புவாத வெறியை ஊட்டி திரட்டி வைக்கப்பட்டிருந்த மக்கள் திரள் அந்த போதையில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் என்பதைக் கண்டு பா.ஜ.க. அஞ்சி நடுங்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட ஒட்டுமொத்த பா.ஜ.க.வையும் கர்நாடகத்தில் களம் இறக்கியது. நகர்ப்புற வாக்காளர்களை குறி வைத்து மோடி பிரச்சாரம் செய்தார். எடியூரப்பாவை சமாதானப்படுத்தி “"தேர்தலுக்குப் பிறகு பி.எல்.சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர் பா.ஜ.க.வில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்' என மோடி அளித்த kkவாக்குறுதியின் அடிப்படையில் கடைசிக் கட்டத்தில் எடியூரப்பா களம் இறங்கினார். அண்ணாமலை போன்ற சந்தோஷின் சிஷ்யர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப் போய்விட்டது.

ஜெகதீஷ் ஷெட்டரை பா.ஜ.க. தோல்வி அடைய வைத்தது. ஆனால் சந்தோஷின் முக்கிய சிஷ்யரான தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி உட்பட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். சந்தோஷ் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட 70 சட்ட மன்றத் தொகுதிகளில் ஐம்பதில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. அண்ணாமலை பிரச்சாரம் செய்த சிவமோகா மாவட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப் படுத்தப்பட்டது. அங்குள்ள ஏழு தொகுதிகளில் ஐந்தில் பா.ஜ.க. தோற்றது. அண்ணாமலை எஸ்.பி.யாகப் பணியாற்றிய உடுப்பி மாவட்டத் திலும் பா.ஜ.க. தோற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழக மாடல் பிரச்சாரத்துடன் கூடிய காங்கிரசின் தேர்தல் வியூகம் வெற்றிபெற்றது. இந்துத்துவமும் அதன் கொடூரமுகத்தை வெளிக்காட்டிய பி.எல். சந்தோஷின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமும் படுதோல்வி அடைய எடியூரப்பாவின் கடைசிக்கட்ட வேலைகளால் தனது அடிப்படை வாக்கு வங்கி குறையாமல் “தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம்” என பா.ஜ.க. நிற்கிறது.

காங்கிரசின் கர்நாடக வெற்றியை அடுத்து, தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அந்தக் கட்சிக்கும் பா.ஜ.க. எதிர்ப்பு கட்சிகளுக்கும் பெரும் ஊக்கத்தை அளித் துள்ளது. இந்நிலையில் திராவிட மண்ணில் பா.ஜ.க.வின் பெருந்தோல்விக்கு வழிவகுத்த பி.எல்.சந்தோஷ் அவரது சிஷ்யர்களான தமிழகத்தின் அண்ணாமலை, கேரளாவில் சுரேந்தர், தெலுங்கானாவில் பா.ஜ.க. தலைவர் ஆகியோரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க.வில் வலுத்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் யார் முதல்வர் என்கிற போட்டி சிவக்குமாருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே கடுமையாக நடக்கிறது. யார் முதல்வராக வந்தாலும் ஒருவர் காலை இன்னொருவர் வாரி விடுவார் என்கிற நப்பாசையோடு வாயில் எச்சில் ஊறக் காத்திருக்கும் நரியைப் போல பா.ஜ.க. காத்திருக்கிறது.

nkn170523
இதையும் படியுங்கள்
Subscribe