"நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாளை கொண்டாடுவதா? அல்லது அதை மாற்றி ஜூலை 18-ஐ கொண்டாடுவதா?' என்ற வாதம், பிரதிவாதம் நடைபெறுகிறது.

இவ்விரண்டு தேதிகளில் எது சரியானது? ஏக இந்தியாவை உருவாக்கியவன் ஆங்கிலேயன். பாபர் என்ற முகலாய மன்னன் 1526-இல் இந்தியா மீது படையெடுத்து வந்தபொழுது, வடநாடு சிறு சிறு நாடுகளாக சிதறிக் கிடந்தது. அவன் இந்தியாவை வென்றான். மொகலாயர் ஆட்சி 1526-ல் தொடங்கி 1857-இல் முடிவுற்றது.

ஆங்கிலேயர், 1600-ல் ஜஹாங்கிர் காலத்தில் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்ய அனுமதி பெற்றனர். அடுத்து, இந்திய மன்னர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்து, படிப்படியாக நாட்டைப் பிடித்தான். ஆக... ஆங்கிலேயர் ஆட்சி 1600 முதல் 1947-வரை எனலாம்.

tt

Advertisment

மொழிவழி தேசிய இனங்கள்!

உலகில் பல்வேறு நாடுகள் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளாக விடுதலை பெற்றன. இந்தியா தேசிய இனங்களைக் கொண்ட, மொழிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாக இன்று விளங்குகின்றது. வட இந்தியாவில் பீகார், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தி மாநிலங்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறப்படுவது தவறு என்பதை அங்கு நிலவிவரும் பல்வேறு மொழிகள் உணர்த்துகின்றன. எப்படித் தென்னிந்தியத் திராவிட மொழிகள் வட மொழியிலிருந்து வேறுபட்டு உள்ளனவோ, அதைப்போல் வட மாநிலங்களிலிருந்தும் பல்வேறு இன மொழிகள் நின்று நிலவிவருகின்றன.

மொழிவாரி மாநிலங்களின் தோற்றம்!

Advertisment

1911-12இல் பீகார் மாநிலம் வங்களாத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இதற்கு காரணம். இந்தி மொழி பேசுபவர்களுக்கு தனி மாநிலம், நிர்வாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் இது.

ஆந்திரா: தர்பங்கா பகுதியில் சமஸ் கிருதத்திற்குப் பதிலாக இந்தியை அலுவல் மொழியாக ஆக்கினர். இதற்கு வித்யாபதி (1350-1450) காரணமாக இருந்தார்.

உத்திரப்பிரதேசம்: உ.பி. மேற்கு பகுதியில் கிருஷ்ண பரமாத்மாவின் மாமா ஹம்சன் இருந்த பகுதியை பிராஜ் பூமி என்று தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதைப்போல பாரத்பூர், தவல்பூர் ஆகியவற்றைக் கொண்ட தெற்கு அரியானா, செல்லி, மதுரா சாலை இவற்றை உள்ளடக்கியதே பிராஜ் பூமியாகும்.

tt

மத்தியப்பிரதேசம்: மாயாவதி கட்சி பண்டய்கன்ட் மாநிலப் பிரிவை ஆதரிக்கிறது. தெற்கு உத்திரப்பிரதேசம்... அதாவது, ஜான்சி முதல் பாண்யாவரை அதையொட்டிய மத்தியப்பிரதேசப் பகுதிகள் அதாவது பண்டரி மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு தனி இந்தி மாநிலம் கோரிக்கை உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டப் பேரவையில் அம்மாநிலத்தை நான்கு மாநிலங் களாகப் பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அனைத்துப் பிரிவுகளுக்கும் மொழி அடிப்படையாகும்.

உத்திரகாண்ட் மாநிலம்: இந்தி பேசும் 3 மாநிலங்களை 6 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

எப்படி ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டதோ அதைப் போலவே மற்ற மாநிலங்களையும் பிரிக்க வேண்டுகின்றனர். எடுத்துக்காட்டாக உத்தர்காண்ட் உ.பி.யில் இருந்து பிரிக்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம்: 2000-இல் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இது மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம்: ஜார்கண்ட் என்றால் குகைகளைக் கொண்டது என்று பொருள். இம்மாநிலம் 2000-ல் பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இமாச்சல், டெல்லி, அரியானா, இராஜஸ்தான் ஆகியவை இந்தி மாநிலங்கள் என்பர்.

2001 மக்கள்தொகைப்படி இவர்கள் தொகை 42 கோடியாகும். ஆக, மீதமுள்ளவர்களின் தாய்மொழி இந்தி இல்லை. எனவே, இந்தி தேசிய மொழி என்று அழைக்க முடியாது. அதற்கு வரலாறு சான்றாக இல்லை.

இராபர்ட் கால்டுவெலின் ஒப்பிலக்கணம்:

இராபர்ட் கார்டுவெலின் திராவிட இலக்கண ஒப்பாய்வு நூல் 1856-இல் "திராவிடம்' என்ற சொல்லைத் தாங்கி வந்ததும், தென்னாட்டில் மிகப்பெரிய இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் தோன்றக் காரணமாயின.

1949-இல் தோன்றிய தி.மு.க., "திராவிட நாடு திராவிடருக்கே' என்ற முழக்கத்தை அறிஞர் அண்ணா முன்வைத்தார். பின்னர், அது 1962-க்குப் பிறகு கைவிடப்பட்டது.

பொட்டி ஸ்ரீராமுலு:

ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் தேசிய அடிப்படையில் ஆந்திராவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தார். 1953-இல் ஆந்திரா பிரிந்தது என்றாலும், 1956-இல் இந்தியா மொழிவழி தேசிய அடிப்படையில் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதன்பிறகு, இந்தியாவில் மொழிப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. இதற்கு அடிப்படைக் காரணம் ஏறத்தாழ 1652 தாய்மொழிகள் இந்தியாவில் உள்ளன.

இந்தி தாய்மொழி அடிப்படையில் வங்காளத்திலிருந்து பீகார் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து பல்வேறு வட மாநிலங்கள் தாய்மொழியில் பிரிக்கப்பட்டதும் பொட்டி ஸ்ரீராமுலுவிற்கு காரணமாக அமைந்தது.

சங்கரலிங்கனார் "தமிழ்நாடு' பெயர் கோரிக்கை:

தந்தை பெரியார் 1937-இல் இந்தியை எதிர்த் துப் போராட்டம் நடத்திய பொழுது, அனைத்துத் தமிழர்களையும் ஓரணியில் இந்தி மொழிக்கு எதிராக திரட்டினார். "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன் வைத்தார். இதன் விளைவாக தமிழ், தாய்மொழி தேசிய உணர்வு வெளிப் பட்டது.

tt

78 வயதில் 78 நாட்கள் சங்கர லிங்க நாடார் என்பவர் "உனது நாட்டை உன தாக்கு' என்ற கொள்கையை செயல்படுத்தும் வழியில் முதற்படி யாக சென்னை இராஜ்யத்திற்கு "தமிழ்நாடு' என்று பெயரிட வேண்டி போராடி, 13-10-1953-இல் உயிர்விட்டார்.

இந்த தியா கத்தை, காமராஜ ரின் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க.வை பெரிதும் பாதித்தது. அறிஞர் அண்ணா, அதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.

தமிழ்நாடு நாள்:

அதன் விளைவாக 1967 ஜூலை, 18-ஆம் நாள் மதறாஸ் மாநிலத்திற்கு "தமிழ்நாடு' என்ற பெயரை முதல்வரான அறிஞர் அண்ணா தீர்மானமாக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றினார். இந்நாளே தமிழக வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்பட்ட நாளாகும்.

1956-இல் தென் மாநிலங்கள் ஆந்திரா, கன்னடம், மலையாளம், தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டாலும் தமிழ் மாநிலத்திற்கு "மதறாஸ்' அரபிமொழி பள்ளிப் பெயரே நீடித்தது. அது தமிழ் இல்லை. மேலும் "தமிழ்நாடு' என்ற பெயர் வைக்க பலத்த எதிர்ப்பு இருந்தது. அதாவது மதறாஸ் பட்டினத்தை வடக்கு, தெற்காகப் பிரித்து வடக்கே ஆந்திராவிற்கும் தெற்கே தமிழ்நாட்டிற்கும் கொடுப்பதாக பிரேரணை கொடுக்கப்பட்டது. ஆந்திரர்கள் "மதறாஸ் மனதே' என்ற முழக்கத்தை முன்வைத்தனர். இதில் இராஜாஜியின் பங்கு குறிப்பிடத்தக்கது. திருப்பதியை ஆந்திராவிற்கு கொடுத்து விட்டு, மதறாஸ் பட்டிணத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க உதவினார். மதறாஸ் மாகாணம் பல சேதாரத்துடன் உருவாக்கப்பட்டது. பீர்மேடு, பெரியகுளம் கேரளாவிற்குச் சென்றது. பல தமிழ்ப்பகுதிகள் நெல்லூர் உட்பட ஆந்திராவிற்குப் போய்விட்டது.

ம.பொ.சி., நேசமணி போன்றவர்களின் எல்லைப் போராட்டத்தால் திருத்தணி, கன்னியாகுமரி தமிழகத்திற்கு கிட்டின.

இராஜாஜிக்கு தமிழ் பிடித்தாலும் "நாடு' என்ற சொல் பிடிக்காது. ஏனெனில் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடென்று பொருளாகிவிடும் என்று எதிர்த்தார். அதனால் அறிஞர் அண்ணா "தமிழ்நாடு' என்று பெயர் அறிவித்தபொழுது இராஜாஜி அவர்கள் "நாட்' (சஆஉ) என்று இருக்கவேண்டும் என்றார். 'ம' ஆங்கில எழுத்தை தவிர்க்கக் கூறினார். ஆனால் அண்ணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜூலை 18-ஆம் நாள் 1967-இல் "தமிழ்நாடு' என்ற பெயரை சேதாரம் இல்லாமல் ஒரு நாட்டிற்குரிய பொருளுடன் குறிப்பிட்டார். ஆக.... 18-07-1967-இல் அண்ணா மதறாஸ் மாநிலத்திற்கு சூட்டிய பெயர் நிறைவேற்றப்பட்ட நாளே தமிழர் கொண்டாடப்பட வேண்டிய திருநாள். அதாவது, "தமிழ்நாடு நாள்' 18-07-1967 என்பதே சரியானது.

இச்சிறு வரலாற்றுப் பின்னணியில்தான் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான 01-11-56-ஐ மாற்றி, 18-07-1967-ஐ "தமிழ்நாடு நாள்' என அறிவித்துள்ளார்.

இது வரலாற்று ரீதியில் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும். இந்நாளை எதிர்ப்பதில் மறைந்திருப்பது சனாதன வருணாசிரம கொள்கையாகும்.

அண்ணா தந்த "தமிழ்நாடு நாள்' தமிழனுக்கு முகவரி.

ஈழவேந்தன் கூறுவார், "மொழியை அழித்தால், இனத்தை அழித்துவிடலாம்' என்பதாகும். அதைத்தான் அறிஞர் அண்ணா உட்கொண்டு "தமிழ்நாடு' என்ற பெயருக்குத் தமிழனுக்கு அழியா முகவரியையும், இன அடையாளத்தையும் கொடுத்துள்ளார்.