தமிழக பி.ஜே.பி. தலைவர் மாற்றமா? முற்றுப்புள்ளி வைத்த டெல்லி சோர்ஸ்

aa

னது 15 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகும்கூட அண்ணா மலையின் பயணப் பின்னணி குறித்த அரசல் புரசல்களுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல். "பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவும் அண்ணாமலையுடன் அமெரிக்கா சென்றது ஏன்?'’என்ற கேள்விக்கு அக்கட்சியின் முக்கியப் புள்ளிகளே பதில் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலைக்குப் பதிலாக வேறு ஒருவரை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்க கட்ச

னது 15 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகும்கூட அண்ணா மலையின் பயணப் பின்னணி குறித்த அரசல் புரசல்களுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல். "பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவும் அண்ணாமலையுடன் அமெரிக்கா சென்றது ஏன்?'’என்ற கேள்விக்கு அக்கட்சியின் முக்கியப் புள்ளிகளே பதில் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாமலைக்குப் பதிலாக வேறு ஒருவரை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் றெக்கை கட்டி பறக்கத் துவங்கியுள்ள நிலையில், இதுகுறித்து நமக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸ் சிலரிடம் பேசினோம்.

aa

பள்ளிக் குழந்தைகளோட தனித்திறமைகளை வளர்ப்பதற்காகவும், அவர்களிடம் தலைமைப் பண்புகளை உருவாக்கவும் புதுடெல்லியிலுள்ள வசந்த் விஹாரில் 1988-ஆம் ஆண்டு வாக்கில் மஞ்சு பரத்ராம் என்ற பெண்மணியால் உருவாக்கப்பட்டது தான் தி ஸ்ரீராம் ஸ்கூல். அதனுடைய ஒரு பிரிவு தான் ஆனந்தா ஆஸ்பென் சென்டர். குழந்தைகளுக்குப் பதிலாக சமூகத்தில் ஏதேனும் ஒரு துறையில் உச்சத்தை எட்டியுள்ள இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களின் தலைமைக் குணங்களை பட்டை தீட்டு வதுதான் இதனுடைய நோக்கம். அதில், கல்யாண் பஜாஜ் ஃபெல்லோஷிப் என்ற திட்டத்தின்கீழ் தலைமைப் பயிற்சிக்காக பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகியிருந்தார் அண்ணாமலை. அந்த பயிற்சியின் அங்கமாகவே அமெரிக்கா சென்றார்.

தலைமைப் பயிற்சிக்கான பயணமாக இருந்தாலும் அமெரிக்காவில் அவருடைய பயணத்தின் பெரும்பகுதியைத் திட்டமிட்டது, "ஓவர் சீஸ் ஃபிரண்ட்ஸ் ஆஃப் பி.ஜே.பி.'’என்ற அமைப்பு தான். இதனுடைய முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் ஏற்பாட்டின் படிதான் அங்குள்ள தமிழர்களையும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து அண்ணாமலை உரையாற்றினார் என்ற அவர்களிடம், ‘"அண்ணா மலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன், பேராசிரியர் மதுரை சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவர் தமிழக பி.ஜே.பி. தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறதே?''’என்றோம்.

அதற்குப் பதிலளித்த அவர்கள், "கட்சியின் இமேஜை உயர்த்துவதற்குப் பதிலாக தன்னுடைய இமேஜை டெவலப் செய்வதில் மட்டுமே அண்ணாமலை அதிக கவனம் செலுத்துகிறார் என்பது உட்பட அவருடைய சில நடவடிக்கை கள் டெல்லி தலைமைக்கு நெருடலைத் தந்தாலும், கோவை வெள்ளியங்கிரி மலையைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவரின் பலமான ஆசி இருப்ப தால் அந்த நெருடல்களும், நெருக்கடிகளும் தற்போது குறைந்துள்ளன. எனவே, இப்போ தைக்கு எந்த மாற்றமும் இல்லை''’என உறுதிபடக் கூறுகிறார்கள்.

nkn151022
இதையும் படியுங்கள்
Subscribe