சுமார் ஒன்றரை லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறுமானம் உள்ள இந்த வெண்டிலேட்டர்களுடன் ஏற்கனவே தமிழக மருத்துவமனைகளில் இருக்கும் 3 ஆயிரம் வெண்டிலேட்டர்களை இணைத்தால்தான், ஒரு லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காலக்கட்டம் வரும்போது, உயிர் அபாயத்திற்கு உள்ளாகும் எட்டாயிரம் பேரை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
அவர்களிடம் ஏன் அமெரிக்கா கம்பெனியை நாடுகிறீர்கள்? இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள், தமிழ் நாட்டில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற் சாலைகள் இவற்றின் மூலம் பெறலாமே என கேட்டோம். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்களை கண்டுபிடிக்கும் கருவியை மைலேப் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்திடம் சோதனை செய்யும் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்தால் எங்களால் இப்பொழுது செய்ய முடியாது என கைவிரித்துவிட்டது. அதனால்தான் சுகாதாரப் பொருட்களை கொரோனா காலத்தில் வாங்கும் அதிகாரம் பெற்றிருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாநாத், சோதனைக் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் கொடுத் துள்ளார். இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் கருவிகள் வேண்டும் என சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு லட்சம் கருவிகளை தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. அந்த கருவிகளை அமெரிக்கா தனக்கு வேண்டும் என எடுத்துக்கொண்டு சென்றதால் சோதனைக் கருவிகள் தமிழகத்திற்கு வரவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ஆனால் இந்த வெண்டிலேட்டர் விவகாரத்தில் ஊழலும் இருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடிகள் பெறும் இந்த வெண்டிலேட்டர் ஆர்டர்களை பெறு வதற்கு இந்தியாவைச் சேர்ந்த பல கம்பெனிகள் போட்டிப் போடுகின்றன. அந்த கம்பெனிகளிடம் ஆனந்த் என்கிற தமிழக சுகாதாரத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அந்த பேச்சுவார்த்தையில் 30 சதவிகிதம் கமிசன் வேண்டும் என அரசு தரப்பிலிருந்து வலியுறுத்தப் பட்டதால் அந்த கம்பெனிகள் தலைத்தெறிக்க ஓடிவிட்டன. அதனால்தான் கமிசன் தொகைக்கு ஒத்துக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வெண்டிலேட்டர்களை பெறுவதற் கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.
வெண்டிலேட்டர் விசயத்திலும், சோதனைக் கருவிகள் விசயத்திலும், கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும் உடைகளை வாங்குவதிலும் பெரிய அளவு பேரங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆனந்த் யார்? என விசாரித்தபோது, அவர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர். ஆனால் முதல்வர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று சொல்கிறார்கள். சீனாவில் இருந்து சோதனைக் கருவிகள் வருவது தாமதம் ஆவதால் தமிழகத்தைச் சேர்ந்த அரசு நிறுவனமான டைசல் மூலமாக உற்பத்தி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களில் 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா இருக்கிறதா என்பதற்கான சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது அதனை விரிவுப்படுத்தி சோதனை செய்வதற்கு தமிழக அரசு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் கேரளாவைப் போல் நோய் பாதித்தவர்களை, அவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை தமிழக சுகாதாரத்துறையால் தெளிவாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த அளவிலும் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இவர்களைத்தான் நோயாளி களாக தமிழக சுகாதாரத்துறை கண்டுபிடித்துக் கொண் டிருக்கிறது. அதனால்தான் நரேந்திரமோடி ஊரடங்கு உத்தரவை அறிவிப்பற்கு முன்பே ஊரடங்கு உத்த ரவை ஏப்ரல் 30 வரை தமிழக அரசு அறிவித்தது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமானால் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பயப்படுகிறார்கள். அதைத் தவிர்க்க வேண்டு மென்றால் யார் யாருக்கு கொரோனா நோய் வந்திருக்கிறது. அவர்கள் யார் யாருடன் தொடர் பில் இருக்கிறார்கள் என தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் 30 வாரங்களில் தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவைப் போல் உயரும். அதற்காக அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்துவற்கான சோதனை கருவிகளை தமிழக அரசு பெற வேண்டும்.
உயிர் காக்கும் கருவி களான கொரோனா தடுப்பு உடைகள் மற்றும் வெண்டி லேட்டர்களை எவ்வித ஊழல் புகாருக்கும் ஆட் படாமல் உடனடியாக வாங்க வேண்டும் என அலறித் துடிக்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
இதுபற்றி அரசின் கருத்தறிய சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் இராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். உடனடியாக போனை அட்டன் செய்த இராதாகிருஷ்ணன், தனக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்றார். அதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்துறை இயக்குநரக அதிகாரியான குழந்தைசாமியை தொடர்பு கொண்டோம். அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேûஸ தொடர்பு கொண்டோம். அவரும் பேச மறுத்துவிட்டார்.
ஊழல், ஊழல் என அரசு துறைகளைப் பற்றி செய்திகள் வரும். பொதுமக்கள் உயிரோடு விளை யாடும் கொரோனா சிகிக்சையிலும் ஊழலா என கவலை தெரிவிக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்
- தாமோதரன் பிரகாஷ்
________________
முன்கூட்டியே ஓய்வூதியம்!
மேற்குவங்கத்தில் ஊரடங்கிற்கு சரியான ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டுகிறது. வழிபாடுகள் நடைபெற அனுமதித்து சமூக ஒழுங்கு சிதைக்கப்படுகிறது என்கிறது மத்திய உள்துறை.
முதல்வர் மம்தா தலைமையிலான அரசில் மாநிலத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், நிதிச்செயலாளர் ஆகியோர் தலைமையிலான மூன்று குழுக்கள் செயல்படுகின்றன. ஜூன் 10 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது..
மளிகைக் கடைகள் 10 மணிமுதல் 6 மணிவரை திறந்திருக்கும். மக்கள் கூட்டமாய் சாமான்கள் வாங்க அனுமதி இல்லை. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர் இருக்கும் வீதிகள், கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் சுத்தம் செய்யப்படும். அந்தக் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் ஆட்கள் நடமாட தடைவிதிக்கப்படும். குறைந்த ஆட்கள் எண்ணிக்கையுடன் விவசாயம் அனுமதிக்கப்படும்.
குழந்தைகளுக்கான சத்துணவும், மதிய உணவும் வீடுகளிலேயே நேரடியாக வழங்கப்படும் நிலையில், இரண்டு மாதங்களுக்கு உரிய ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் சார்பில் இந்த நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தங்கள் மீது குற்றம்சாட்டாமல் தேவையான மருத்துவக் கருவிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என்கிறார் மம்தா.
மூன்று நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்தின் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படையின் சந்திப்பு கூட்டங்கள் தேவைப்படுகின்றன என தெரிவித்துள்ள மம்தா, மாநில அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 36 ஆயிரம் கோடி ரூபாய் உள்பட பல நிதியையும் உடனடியாகத் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.