வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கிக்கிடந்தாலும், பொருட்கள் வாங்கும் நேரத் திலும் காய்கறிச் சந்தையிலும், மீன் மார்கெட்டிலும், இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் கூடத் தான் செய்தது. அதனை ஒழுங்கு படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அந்த வகை யில்தான் மீன் மார்க்கெட்டு களுக்கும் கட்டுப்பாடுகள் பிறப்பித்து வருகிறார்கள். இதில் பாரபட்சமான அணுகுமுறையை அரசு கடைப்பிடிக்கிறது எனக் குமுறுகிறார்கள் மீனவர்கள்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு இங்குள்ள போலீசார் தடை விதித்திருகிறார்கள். புதுச்சேரி மீனவர்களுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், வெளிமாநில மீன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதித்திருக்கும் நிலையில், இங்கே மீன் பிடிக்க மட்டும் ஏன் தடை போட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கொந்தளிக்கிறார்கள்.
சென்னையை அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தை சேர்ந்த கருணாகரன் நம்மிடம

சென்னையை அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தை சேர்ந்த கருணாகரன் நம்மிடம் பேசியபோது, ""நாங்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. மழைக்காலம் வந்தால் புயலைக் காரணம் காட்டி கடலுக்கு தொழில் செய்யப்போக கூடாது என்று தடை போடுகிறார்கள். வெயில் காலத்தில் மீன்களின் இன விருத்திக்காக தடை போடுகிறார்கள். இப்போது கொரோனாவை காரணம் காட்டி தொற்று வரும் என்று மீன் பிடிக்க தடை போட்டுவிட்டார்கள்.
பொன்னேரி- பழவேற்காடு அருகே ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், காட்டுப்பள்ளி கப்பல்கட்டும் தளம், துறைமுகம் பகுதி நடுவுல உலகின் இரண்டாவது நீண்டகடற்கரை சுற்றுலாதளம் மெரினா, நெம்மேலி கடல்நீர் குடிநீர் ஆக்கும் பிளான்ட், கல்பாக்கம் அணுமின்நிலையம் தொடங்கி தமிழகத்தின் கடைசி எல்லை முடியுமிடம் கூடங்குளம் அனல் மின்நிலையம் வரைக்குமான பகுதிகளில் ஏற்கனவே மீன் பிடிக்க தடை. இதனால், தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும்நிலையில், இப்போது புதுசா வந்த கொரோனாவினால் ஒட்டுமொத்தமாகவே கடலுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது.
மார்ச் 23ஆம் தேதிதான் கடைசியாக கடலுக்கு போனோம். அதுக்கு பிறகு கடலுக்கு போக போலீஸ்காரங்க அனுமதிக்க வில்லை. ஆனால், பக்கத்துல இருக்கிற பாண்டிச்சேரி மீனவர்கள் கடலுக்கு போக அம்மாநில அரசு ஜி.ஓ போட்டிருக்கிறது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரத்தில் உள்ள மீனவர்களுக்கு மட்டும் உதவிகள் செய்கிறார். மற்ற மாவட்ட மீனவர்களை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. புதுவையிலும், கேரளாவிலும் மீன் பிடிக்க தடை இல்லை. எங்களுக்கு மட்டும் ஏன் தடை? கடலுக்கு போனால்தானே நாங்க சாப்பிட முடியும்?’’என்று வேதனையுடன் கேட்கிறார்.
அவர் மேலும், ‘’நாங்க கடலுக்கு போகவில்லை. ஆனால், மார்க்கெட்டில் மீன் வரத்து இருக்குது. கேள்வி கேட்டால் அதிகாரிகளிடம் இருந்து பதிலே இல்லை. முதல்வர் இதில் உடனே தலையிட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி தரக்கூடாதா?''’என்று கேட்டு கண்ணீர் வடிக்கிறார்.
தென்னிந்திய மீனவ நலசங்க தலைவர் கே.பாரதி நம்மிடம் பேசியபோது, ""மீனவர்களின் நலனில் சற்றும் கருணை காட்டாமல் உள்ளது தமிழக அரசு. மீன்பிடிக்க தடை, மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசாரால் தமிழக மீனவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
சென்னையில் முக்கியமான பத்து மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. அதை தடை செய்யாமல், காய்கறி சந்தை போலவே பொது வெளியில் வைக்க அனுமதிக்கலாமே. அதைவிட்டுவிட்டு எல்லாம் மார்க்கெட்டையும் மூடும்படி போலீசாரை வைத்து மிரட்டப்படுவது ஏன்?
கடைசியாக காசிமேடு மீன்சந்தையும், சிந்தாதிரிபேட்டை மீன் சந்தை மட்டும் இயங்கிவந்தது. அங்கேயும் கூட்ட நெரிசல் என போட்டோ எடுத்து பேப்பரில் போட்டு காசிமேட்டையும் மூடிவிட்டார்கள். ஆனால், அரசியல் பின்பலத்துடன் உள்ள சிந்தாதிரிபேட்டை மார்க்கெட்டு மட்டும் அதிகாலை 3 மணி முதல் 7மணிவரை மொத்த சந்தை நடத்த மட்டும் காவல் துறை அனுமதிப்பது ஏன்?
சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட் மீன்களை வாங்கி விற்பனை செய்யுமிடம். ஆனால், காசிமேடு, நெச்சிக்குப்பம் மார்க்கெட் எல்லாம் மீன் நேரடியாக வந்து இறங்குமிடம். இதை தடை செய்து விட்டு, கடைசியாக 144 தடைசட்டம் போடும் போது மட்டும் மாநிலம் விட்டு மாநிலம் மீன் கொண்டு செல்ல அனுமதி வாங்கிவிட்டு, தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்காமல், வெளிமாநில மீன்களை விற்பனை செய்ய மட்டும் எப்படி அனுமதிக் கிறார்கள்?
அதே போல ஆந்திராவில் இருந்து பண்ணை இரால்களை நாள் ஒன்றுக்கு நாற்பது டன் அளவுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இங்குள்ள மீனவர்கள் பசியால் செத்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா?
கேரளா, புதுவையில் மீன்பிடிக்க அனுமதிக்கும் போது , தமிழக மீனவர்கள் பிடித்தால் மட்டும் நோய் தொற்று என்று சொல்லுவது ஏன்?''’’என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
மீனவர்களின் கேள்வி களுக்கும், கண்ணீருக்கும் என்ன தான் பதில் சொல்லப்போகிறது அரசு?
-அரவிந்த்