Advertisment

தமிழ் சங்கங்களை அரவணைக்கும் தமிழ் வளர்ச்சி துறை!

tt

லகம் முழுதும் வாழும் தமிழர்கள், அந்தந்த பகுதிகளில் நம்முடைய அடை யாளத்தை உயிரோட்டத் துடன் வைத்திருப்பதற்காக தமிழ்ச் சங்கங்களைத் தொடங்கி நடத்திவருகிறார்கள். அதன்மூலம், தமிழர்களின் தனித்துவ பண்பாடுகளை வெளிப் படுத்துவதோடு, இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் இணைந்து பல நற்பணிகளைச் செய்துவருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்காக நம் முடைய தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பல்வேறு சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Advertisment

மும்பை

மும்பை மாநகரத்தின் தொடர்ச்சியாக உள்ள நவி மும்பையில், நவி மும்பை தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த தமிழ்ச் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென்ற எண்ணத்தில், நிலம் வாங்கி, கட்டடம் கட்டும் பணியில் இறங்கினர். அவர்களது கட்டடப் பணிக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் சங்கக் கட்டடப் பணிகளுக்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கியது.

tt

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த இரண்டு வருடங்களில் இதுபோன்று பிற மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கச் செயல்பாடுகளுக்கும், பல நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்க அமைப்புகளுக்கும், பல்வேறு திட்டப் பணிகளுக்கும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தாராளமாக நிதி வழங்கப் பட்டிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு, நவிமும்பை தமிழ்ச் சங்கக் கட்டடக் கட்டுமானப் பணி நிறைவுற்று, அதன் திறப்பு விழா கடந்த 23ஆம் தேதி அங்கு நடந் தது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அத்துறையின் செயலர் செல்வராஜ், இயக்குனர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்ச் சங்கக் கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன், "நமது தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தொழில்புரிய, பல பயன்பாட்டுக்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களின் பாதுகாப்பில் அக்கறையுடன் நமது தமிழக முதல்வர், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக பல முன்னெடுப்புகளை, திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். இந்த நவிமும்பை கட்டிட புனரமைப்பு பணிக்காகவும் அரசின் சார்பாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பணிகள் சீரிய முறையில் தொடர்ந்து நடைபெறும்..'' என்றார்.

நவிமும்பை தமிழர்கள், "எங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் ஒரு மிகப்பெரிய உழைப்புக்கான கேந்திரமாக உள்ளது. இங்கே எங்கள் தமிழ்ச் சங்கக் கட்டடத்துக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்கியது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது" என்றனர். தமிழை வளர்த்தெடுக்க, தமிழ்ச் சங்கங்களை அரவணைப்போம்!

-ஜீவாதங்கவேல்

nkn300823
இதையும் படியுங்கள்
Subscribe