புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்த-ல் மேயர் பதவி த-த் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துணை மேயர் பதவியைப் பிடிக்க பொது வேட்பாளர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
துணைமேயரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் என்பதால், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, மாவட்டச் செயலாளர் அமைச்சர் தாமோ.அன்பரசன், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களான எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோரிடையே தனக்கு வேண்டப்பட்டவர்களை வேட்பாள ராக்கவும் வெற்றிபெறச்செய்யவும் கடும் பனிப்போர் நடந்து வருகின்றது. இதனால் பாரம்பரியமாக கட்சியி-ருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்த-ல் மேயர் பதவி த-த் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துணை மேயர் பதவியைப் பிடிக்க பொது வேட்பாளர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
துணைமேயரைத் தேர்ந்தெடுப்பது வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் என்பதால், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, மாவட்டச் செயலாளர் அமைச்சர் தாமோ.அன்பரசன், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களான எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி ஆகியோரிடையே தனக்கு வேண்டப்பட்டவர்களை வேட்பாள ராக்கவும் வெற்றிபெறச்செய்யவும் கடும் பனிப்போர் நடந்து வருகின்றது. இதனால் பாரம்பரியமாக கட்சியி-ருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களில் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 70 வார்டுகளைக் கொண்ட தாம்பரம் மாநகராட்சி 7 மண்டலங்களைக் கொண்டுள்ளது. தாம்பரம் பகுதியில் எல்.ஆர்.செழியன், சம்பத், நாகூர்கனி ஆகிய முக்கிய வேட்பாளர்கள் அ.தி.மு.க. தரப்பின் அதிருப்தியால் ஒதுங்கிக்கொண்டனர். பம்மல் பகுதி 11-வது வார்டு தி.மு.க. தரப்பில் வே.கருணாநிதிக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் மா.செ.வின் தீவிர ஆதரவாளர் என்பதால் மண்டலக் குழுத் தலைவர் ஆகும் வாய்ப்புள்ளது. அதே வார்டில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் தண்டபாணி போட்டியிடுவதால் கடினமான மும்முனைப் போட்டி இருக்கும்.
பம்மல் பகுதி 5-வது வார்டில் தி.மு.க.வின் நகரச் செயலாளர் இளங்கோவனுக்கு சீட்டு மறுக்கப்பட்டு வே.ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டதில் அதிருப்தி கிளம்பியுள்ளது.
தாம்பரம் எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர். ராஜா, தன் மைத்துனர் காமராஜை துணைமேயராக்கும் கனவோடு 49-வது வார்டை ஒதுக்கியுள்ளார். எஸ்.ஆர்.ராஜாவின் அரசியல் எதிரியான மாஜி சபாநாயகர் முனுஆதியின் மகன் ஆதிமாறன் குடியிருக்கும் பகுதியை மட்டும் சமீபத்தில் 60-வது வார்டில் சேர்த்துவிட்டனர். இந்த வார்டு பெண்கள் வார்டு என்பதால் ஆதிமாறனின் தேர்தல் கனவு கலைந்துபோனது. 53-வது வார்டு ஆதிமாறனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான பார்ப்பனர்களின் வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் வார்டு என்பதாலும் இந்த வார்டுக்கும் ஆதிமாறனுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாலும் அவர் அதை மறுத்திருக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் கட்சியை வளர்த்த கன்னியப்பன் மகன் வ.க.ரவிக்கும் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் தீவிர விசுவாசியான பி.ஜி. பிரபுவுக்கு 26-வது வார்டை ஒதுக்காமல் அந்த வார்டுக்கு சம்பந்தமில்லாத ஜோசப் அண்ணாதுரைக்கு சீட்டை ஒதுக்கியதால், அவரை எதிர்த்து பிரபு கடினமான வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார்.
ம.ம.க. பிரமுகர் யாக்கூப்பிற்கு 50-வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது, பெருவாரியான இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி இருந்தாலும் உள்ளடி வேலையாக தி.மு.க.வின் மாஜி கவுன்சிலர் செல்வக்குமார் களத்தில் சுயேட்சையாக நிற்கிறார்.
மாடம்பாக்கத்தின் தி.மு.க. பிரமுகரான எல்.எஸ்.எஸ்.மோகன், அவரின் மனைவி மல்-காமோகன் கடந்த 1996--ருந்து தொடந்து பேரூர் கவுன்சிலராக இருந்து வருகின்றனர். வார்டுக்கு பரிட்சயம் இல்லாத ரமாதேவிக்கு சீட்டு வழங்கியதால் அவரின் ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர். 32-வது பொது வார்டில் போட்டியிடும் த-த் சமூகத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளரும் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவில் மேயர் வேட்பாளராகக் களம் காணுகிறார்.
ஜெகத்ரட்சகனின் மைத்துனரான காமராஜ் தனது செல்வாக்கில் தி.மு.க. சார்பில் 30-வது வார்டில் போட்டி யிடுகிறார். வென்றதும் தனது மாமா ஜெகத்ரட்சகன் செல்வாக்கில் துணைமேயர் எனும் நம்பிக்கை அவருக்கு. பல்லாவரம் மாஜி ச.ம.உ. ஆன தன்சிங் மனைவி தனம் மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் களம் காணுகிறார்.
முதல் மேயருக்குக் காத்திருக்கிறது தாம்பரம்!