இன்டர்நேசனல் லெவலில் செயல்படுகிறோம் என சொல்லிக் கொண்டு பி.ஏ.சி.எல். (பேகல்) நிறுவனம் கடந்த 2008-ல் டெல்லி பீடத்தைத் தலைமையாகக் கொண்டு தேசத்தின் அத்தனை மாநிலங்களையும் குறிவைத்து, ஆயுள் இன்சூரன்ஸைப் போன்ற காப்பீடு மற்றும், ஃபைனான்ஸ், சம்பந்தப்பட்ட " டூயல் சிஸ்டம்" என்ற கவர்ச்சியான தேன்தடவிய விளம்பரத்துடன் தனது றெக்கைகளை அகலமாகவே விரித்தது.
டெபாசிட் செய்கிற முதலீடுகளைக் கொண்டு அந்தந்த ஏரியாக்களில், அல்லது எல்லைதாண்டி நிலங்கள் வாங்கப்படும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு வழக்கம்போல் நிலத்தின் மதிப்பு உயரும். அப்போது நிலங்களை லாபத்தில் விற்று உங்களுக்கான முதிர்ச்சித் தொகைகள் போனசுடன் தரப்படும். முதலீட்டிற்கான பாதுகாப்பு இன்சூரன்சும் உண்டு. அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று கிளம்பியது. ஒரு மடங்கு டெபாசிட்டிற்கு இரு மடங்கு பணம் என்று வலைவிரித்தது.
இவ்வளவு போதாதா... இந்தியாவில் தோராயமாகப் பல ஆயிரம் கோடிகளை முதலீடாக ஈர்த்தது பி.ஏ.சி.எல். நிறுவனம் ஆரம்பித்து நான்கைந்து வருடங்கள் வரை, முதலீட்டாளர்களின் முதிர்
இன்டர்நேசனல் லெவலில் செயல்படுகிறோம் என சொல்லிக் கொண்டு பி.ஏ.சி.எல். (பேகல்) நிறுவனம் கடந்த 2008-ல் டெல்லி பீடத்தைத் தலைமையாகக் கொண்டு தேசத்தின் அத்தனை மாநிலங்களையும் குறிவைத்து, ஆயுள் இன்சூரன்ஸைப் போன்ற காப்பீடு மற்றும், ஃபைனான்ஸ், சம்பந்தப்பட்ட " டூயல் சிஸ்டம்" என்ற கவர்ச்சியான தேன்தடவிய விளம்பரத்துடன் தனது றெக்கைகளை அகலமாகவே விரித்தது.
டெபாசிட் செய்கிற முதலீடுகளைக் கொண்டு அந்தந்த ஏரியாக்களில், அல்லது எல்லைதாண்டி நிலங்கள் வாங்கப்படும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு வழக்கம்போல் நிலத்தின் மதிப்பு உயரும். அப்போது நிலங்களை லாபத்தில் விற்று உங்களுக்கான முதிர்ச்சித் தொகைகள் போனசுடன் தரப்படும். முதலீட்டிற்கான பாதுகாப்பு இன்சூரன்சும் உண்டு. அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று கிளம்பியது. ஒரு மடங்கு டெபாசிட்டிற்கு இரு மடங்கு பணம் என்று வலைவிரித்தது.
இவ்வளவு போதாதா... இந்தியாவில் தோராயமாகப் பல ஆயிரம் கோடிகளை முதலீடாக ஈர்த்தது பி.ஏ.சி.எல். நிறுவனம் ஆரம்பித்து நான்கைந்து வருடங்கள் வரை, முதலீட்டாளர்களின் முதிர்வுத் தொகைகளை பழுதின்றிச் செலுத்திவந்ததால், அந்த நம்பிக்கையினடிப்படையில் முதலீடுகள் ஏராளம் குவிந்திருக்கின்றன.
இதையடுத்த ஒருசில வருடங்களில் பார்ட்டிகளின் முதிர்வுத் தொகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பத் தரமுடியாமல் போனதால் சாக்குப்போக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறது. ஒரு லெவலுக்குமேல் "திவாலாகிப்போனதாக' அறிவித்துவிட்டது.
மத்திய அரசு 2015-ன்போது பி.ஏ.சி.எல். விவகாரத்தை விசாரிக்கும்படி ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தது. அதேநேரத்தில் பி.ஏ.சி.எல், விவகாரங்களைச் சமாளிக்கமுடியாமல் அப்பாவி மக்களின் முதலீடுகளை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவையும் சுரண்டிக்கொண்டு மீதமுள்ள தனது நிறுவனத்தின் அசையா சொத்துகள், வாங்கப்பட்ட நிலங்களின் ஆவணங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டதால் முதலீட்டாளர்களைச் சமாளிக்கவும், அவர்களுக்கானவைகளை, ஈடுசெய்யப்பட்ட நிலங்களின் மூலமாக திரும்பத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்தச் சூழலில் பி.ஏ.சி.எல். தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டியும், புலன்விசாரணை நடத்திய டெல்லி சி.பி.ஐ.யும். நாடு முழுவதிலும் பி.ஏ.சி.எல். நிறுவனத்தால் வாங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முடக்கியதுடன், "அவை மற்றவர்களால் பாராதீனமோ, பத்திரப் பதிவுசெய்யவோ முடியாத அளவுக்கு ஆணை பிறப்பித்ததுடன், உரிய ஆர்டர் மற்றும் லோதா கமிட்டியின் என்.ஓ.சி.யில்லாமல் பத்திரப் பதிவு கூடாது' என்று ஸ்டாண்டிங் ஆர்டரே பிறப்பித்திருக்கிறது.
இருந்தும் ஆக்கிரமிப்பில் ருசி கண்டவர்கள், தமிழகத்தின் அந்தந்தப் பகுதியின் நில புரோக்கர்களைத் தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டு, பேகல் நிறுவனத்தின் சர்வே நம்பர்களை எடுத்தவர்கள், அந்த சர்வே எண்ணில், உதாரணமாக, ஒரு சர்வேயில் வரும் மூன்றோ, அல்லது பத்து ஏக்கர் அடங்கிய நிலத்தில் ஒருவர் ஒரு பகுதியைத்தான் பேகல் நிறுவனத்திற்குக் கொடுத்திருப்பார். அவரிடமே ஒரு சிறிய தொகையைக் கொடுத்து அவரின் பவரைப் பெற்று (யாருக்கேனும் விற்றுக்கொள்ளலாம்) அதை பத்திரமாக்கி, பின் பட்டா மாற்றம் செய்து, தொடர்புடைய ஏரியா சார்பதிவாளரை வசமாக்கிக்கொண்டு தங்களின் பெயருக்கு பத்திரம் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழிகளில் அப்பாவி மக்களுக்குச் சேரவேண்டிய பல நூறு ஏக்கர் நிலங்களை மார்க்கெட் ரேட்டில் நல்லதொரு விலையில் கைமாற்றிக் கோடிக்கணக்கில் பார்த்துள்ளனர். குறிப்பாக சுரண்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் சார்பதிவாளரின் துணையோடு பி.ஏ.சி.எல்.லின் முடக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வேற்று நபர்களால் பதிவுசெய்யப்பட்டிருப்பது வெளிப்பட்டது. பத்திரப் பதிவு ஐ.ஜி., சுரண்டை சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து, பின் அரசு ஆணைப்படி அவரை பதவியிலிருந்தே டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.
ஜன-21 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முருகன் உள்ளிட்ட மூன்று பேர்கள் வந்திருக்கின்றனர். தெற்குச் சங்கரன்கோவில் கிராமத்தின் நிலங்களின் சில சர்வே நம்பர்களை சார்பதிவாளர் ஈஸ்வரனிடம் கொடுத்தவர்கள், அதனை ஆவணப் பதிவுசெய்ய வேண்டுமென்றிருக்கிறார்கள். தொடர்ந்து நடந்தவைகளையும், தடைசெய்யப்பட்ட நிலத்தை ஆவணப்படுத்த முயன்றதையும் பற்றி முருகனுடன் வந்தவர்களின் மீது காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகார்செய்திருக்கிறார் சார்பதிவாளரான ஈஸ்வரன்.
நாம் ஈஸ்வரனிடம் பேசியதில், “""முருகனுடன் வந்தவர்கள் ஏழு சர்வே நம்பர்கள் கொடுத்து ஆவணப் பதிவுசெய்யச் சொன்னதில், அவர்கள் கொடுத்த அத்தனை ஏக்கர்களும் பி.ஏ.சி.எல்.லின் தடை செய்யப்பட்ட சொத்துக்கள். அதன்பொருட்டு நீதிபதி லோதா கமிட்டியின் என்.ஓ.சி.யும் அவர்கள் தாக்கல்செய்யவில்லை. தடையாணையை பற்றிச் சொல்லி மறுத்தேன். பதிவுசெய்ய வற்புறுத்தி ரகளை, தகராறில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்து பத்திரப் பதிவுத்துறை தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளேன்''’என்றார்.
புகாருக்குள்ளான ரவியோ, “""நாங்கள் கொடுத்த சர்வே நம்பர்களில் தடை செய்யப்பட்டதை விடுத்து, மற்றவைகளை ஆவணப் பதிவு செய்யச் சொன்னோம். சார்பதிவாளர் மறுத்தார். நாங்கள் விவரத்தைத்தான் சொன்னோமே தவிர ரகளை செய்யவில்லை''’என்றார்.
ஒருபுறம் அப்பாவிகளின் உடைமைகளை அட்டைபோல் கார்ப்பரேட்கள் உறிஞ்ச, மறுபுறமோ ‘டான்களின்’ பகாசுரக் கொள்ளை.