ப்கானிஸ்தானில், அந்நாட் டின் சிறப்பு படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த போர்க்காட்சிகளைப் பதிவுசெய்வ தற்காக ஆப்கானிஸ்தான்- பாகிஸ் தான் எல்லையில் இருந்த ராய்ட்டர் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், ஜூலை 16-ஆம் தேதி போர்த் தாக்குதலில் மரணமடைந்தார்.

dd

அமெரிக்க இரட்டை வணிக வளாகம் தாக்கப் பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க சிறப்புப் படைகள் இருபது வருடங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அகற்றி விட்டுஅதிபர் ஹமீத் கர்சாய் ஆட்சியை அமைத்தன. இதையடுத்து வணிக வளாகம் தாக்கப்பட்டதற்குக் காரணமான பின்லேடனும் பாகிஸ்தானில் அமெரிக்க சிறப்புப் படையால் கொல் லப்பட்டார். எனினும் தாலி பான்களை அமெரிக்காவால் முற்றிலும் ஒழிக்கமுடிய வில்லை.

படையை வாபஸ் பெறும் அமெரிக்காவின் முடிவையடுத்து ஆப்கானிஸ் தானில் மீண்டும் தாலிபான் களின் கை ஓங்கி வருகிறது.

Advertisment

ஆப்கானில் தாலிபான் களுக்கும் சிறப்பு படை களுக்கும் நடைபெற்று வரும் மோதலைப் பதிவுசெய்ய, ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் சார்பாக இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் செய்தியாளருமாகிய டேனிஷ் சித்திக், பாகிஸ்தான்- ஆப்கான் எல்லையில் ஆப்கான் சிறப்புப் படையினருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் ஜூன் 16-ஆம் தேதி ஸ்பின் போல்டாக் எனும் சந்தைப் பகுதியைக் கைப்பற்ற தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் சிறப்புப் படை தளபதி ஒருவரும், டேனிஷ் சித்திக் கும் பலியாகியதாக தெரியவந்துள்ளது. ஆப்கன் அதிபர் சித்திக் கனி, டேனிஷ் சித்திக் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பலியான டேனிஷ் சித்திக்கின் உடலை தாலிபான்கள் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். காபூலில் உள்ள இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

Advertisment

dd

டேனிஷ் சித்திக் மகா ராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடம் படித்தவர். இந்திய செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த டேனிஷ், பின் புகைப்பட பத்திரிகையாளராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றிபெற்றார்.

2018-ஆம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான புலிட் சர் விருது பெற்றவர் டேனிஷ் சித்திக். ஆப்கான் போர், ஈராக் போர், சமீபத்திய ஹாங்காக் போராட்டங்கள், ரோஹிங்கிய விவகாரம், நேபாள நிலநடுக்கம் போன்றவற்றை தனது அபூர்வ புகைப்படத் திறமையால் மறக்கமுடியாத செய்திகளாகத் தந்தவர். மேலும், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்போது டெல்லியில் ஏற்பட்ட மரணங்கள், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவற் றையும் தனது காமிராவின் கண்கொண்டு, உலகத்துக்கு காட்சிப்படுத்தியவர்.

உண்மைகள் பலவற்றைத் தனது மூன்றாவது கண்ணால் சாட்சியமாக்கிய 38 வயதான டேனிஷ் சித்திக்கின் உயிரை வேட்டையாடி, போர்வெறியின் சாட்சியமாகியிருக்கிறது தாலிபான்.