ஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரான மாஜி சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகரின் மகள் திருமண விழா கடந்த 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இத்திருமணத் தில் கலந்துகொள்ள தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமாருக்கு அழைப்பு கொடுக்கப்பட் டிருந்தது. அதையொட்டி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துஜி, அ.தி.மு.க. மா.செ. சேகரிடம், "எங்கள் தலைவர் வருவதால் சாலை ஓரங்களில் கட்சிக்கொடி, பேனர்கள் வைக்க வேண்டும். நாங்களே வைத்துக்கொள் கிறோம்'' என்று கேட்டபோது, "தாரா ளமா வச்சிக்கோங்க'' என்று சேகர் கூறி யுள்ளார். இதையடுத்து, சனிக்கிழமையே கே.கே.செல்வக்குமார் படத்துடன் எடப்பாடி படமும் இணைந்த வரவேற்பு பதாகைகளை சாலையோரங்களில் அவர்களின் கட்சிக் கொடியோடு நட்டி ருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி வருகை யையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அக்கொடிகளைப் பிடுங்கியெறிந்துவிட்டு, அ.தி.மு.க. கொடிகளை அ.தி.மு.க.வினர் நட்டுள்ளனர்.

ee

இதனால் கொதிப்படைந்த தமிழர் தேசம் கட்சியைச் சேர்ந்த முத்தரையர் இளைஞர்கள், பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். அப்போது அவ்வழியாக வந்த எடப்பாடியின் வாகனத்தை வழிமறித்தவர்கள், "எங்கள் கட்சிக் கொடியைப் பிடுங்கி எறிந்த அ.தி.மு.க.வினரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும். உங்கள் படம் வைத்த பதாகைகளையும் தூக்கி எறிந்துவிட்டனர். எங்கள் தலைவர் உங்களுடன் கூட்டணி வைத்தால் நாங்கள்தான் உங்களுக்காக ஓட்டு கேட்க வேண்டியிருக்கும்'' என்று மிரட்டாத குறையாகக் குமுறித் தீர்க்க, அனைத்தையும் கேட்ட எடப்பாடி, "இப்ப கார்ல வரும்போதுதான் எனக்கு தெரியும். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்ததில் சமாதானமாகி, அவருக்கு சால்வை அணிவித்து அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தமிழர் தேசம் கட்சியின் தஞ்சை தெற்கு மா.செ. முத்துஜி நம்மிடம், "எங்கள் தலைவர் கே.கே.எஸ். ஸுக்கு, சி.வி.சேகர் கல்யாண அழைப்பிதழ் கொடுத்ததும் என்னி டம் தகவல் சொன்னார். அதன் பிறகு அ.தி.மு.க. மா.செ. சேகரிட மும் பேசியதும் அவரும் ஓ.கே. சொன்னார். அதன் பிறகுதான் பதாகைகள் வைத்தோம். 50 கொடி களை நட்டோம். ஆனால் நள்ளிரவில் எங்கள் கொடிகளை அகற்றியவர்கள், எங்களை மிரட்டவும் செய்தனர். இந்த சம்பவம் எடப்பாடியாருக்குப் போக வேண்டுமென்றே மறியல் செய்தோம். எடப்பாடியாரிடம் விவரங்கள் சொல்லியிருக் கிறோம். நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறோம். இல்லத் திருமண விழாவுக்கு அழைத்துவிட்டு இப்படி நடந்துகொள்வது முறையல்ல. இதை அ.தி.மு.க. மா.செ. புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

Advertisment