ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக உணர வைத்திருக்கிறது அரசு. இதில் அகதிகளாக இங்கு வந்து பிழைத்திருப்போரின் தற்போதைய நிலையைப் பார்த்தால் ரத்தக்கண்ணீரே வழியும்.
தமிழகம் முழுவதும் இருக்கும் 109 அகதி முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை புழல் பகுதியில் இருக்கும் காவாங்கரை முகாமில் 390 குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பேர் இருக்கிறார்கள். தெருவோரக் கடைகள், கட்டிடம் மற்றும் பெயிண்டிங் ப
ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக உணர வைத்திருக்கிறது அரசு. இதில் அகதிகளாக இங்கு வந்து பிழைத்திருப்போரின் தற்போதைய நிலையைப் பார்த்தால் ரத்தக்கண்ணீரே வழியும்.
தமிழகம் முழுவதும் இருக்கும் 109 அகதி முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை புழல் பகுதியில் இருக்கும் காவாங்கரை முகாமில் 390 குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பேர் இருக்கிறார்கள். தெருவோரக் கடைகள், கட்டிடம் மற்றும் பெயிண்டிங் போன்ற கூலி வேலைகள்தான் இவர்களின் அன்றாட பிழைப்புக் கான ஆதாரம். இன்று ஊரடங்கால் அதற்கும் வழியில்லாத நிலையில், பத் துக்கு பத்து தகர சீட்டு அறைகளில், குழந்தைகளுடன் வெந்து கொண்டி ருக்கிறார்கள் வாழ வழியின்றி.
முகாம்களில் தங்கியிருப்பவர் களுக்கு பதினைந்து வயது நிரம்பியிருந்தால் மாதம் ஆயிரம் ரூபாயும், குழந்தைகளுக்கு 750 ரூபாயும் வழங்கப்படும். ஒரு கிலோ ரேசன் அரிசி 57 பைசாவுக்கு தரப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா நிதியும் உண்டு என்கிற நிலையில், அரசின் உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இலங்கை அகதியான நித்திய ஜெமுனா, ""இதுவரை அரசு எந்தவித சலுகையும் செய்து தரவில்லை. நாங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலிவேலை செய்து வந்தோம். தற்போது கோயம்பேடு மார்க்கெட் தொற்றுநோய் மையமாக மாறியிருக்கும் நிலையில், இன்றுவரை எங்கள் முகாமில் மருத்துவப் பரிசோதனை கூட செய்ய வில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த புழல் நாராயணன் சில உதவிகள் செய்து கொடுத்தார். அரசுக்கோ எங்களைப் பற்றி துளியும் கவலையில்லை'' என்றார் வேதனையுடன்.
அரசு விடுதிகள், முகாம்களில் இருப்பவர்களின் நிலை, மற்றவர்களை விடவும் மோசமானது. ஆனால், இந்த அரசு மதுக்கடைகளைத் திறப்பதில் தான் முனைப்பாக இருக்கிறது என்று குற்றம்சாட்டும் திரை இயக்குனர் கோபி நயினார், “ஏ.சி. இல்லாமல் சிறு பொழுதையும் கழிக்க முடியாத அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில், கத்திரி வெயிலில் தகரக் கொட்டகை யில் தவிக்கும் இந்த மக்களுக்கு உடன டியாக அரசு அனைத்து உதவிகளை யும் செய்து தரவேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.
இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத் துறை இயக்குனர் அலிவர் பொன் ராஜிடம் இதுபற்றி கேட்டபோது, ""அனைத்து சலுகைகளும் வழங்கியிருக் கிறோம். கொரோனா காலத்து நிதி யான ஆயிரம் ரூபாய் வழங்கியதோடு, மருத்துவ முகாம்களையும் நடத்தி இருக்கிறோம்'' என்கிறார்.
-அ.அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின்