திருச்சி! தி.மு.க. மா.செ. ரேஸ் விறுவிறு!

ss

ரு காலத்தில் அமைச்சர் கே.என்.நேரு மட்டுமே திருச்சி மாவட்ட தி.மு.க. என இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் ஆதரவு வட்டாரம் அதிகரித்துவந்தது. இதனால், அந்த இரு அமைச்சர்கள் மத்தியில் பனிப்போர் நடந்து வந்ததையும் யாரும் மறுக்க முடியாது. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த திருச்சி மாவட்ட தி.மு.க., கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டம் என மூன்றாகப் பிரிக்கப்பட்ட போது, அந்த மூன்றிலும் அமைச்சர் நேருவின் விருப்பப்படியே மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போதும், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய 3 சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்ட தி.மு.க.வில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களே அதிகமாக இருந்தனர். தவிர, திருச்சி மாவட்டம் முழுக்கவே கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில், "நேரு ஆதரவாளர் - மகேஷ் ஆதரவாளர்' என்ற கோஷ்டி கானமும் காதைப் பிளந்தது.

dmk

திருச்சி மாநகர மேயர் தேர்

திருச்சி மாநகர மேயர் தேர்தலின்போது கூட அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் மேயர் வேட்பாளராக மாநகர தி.மு.க. செயலாளரான அன்பழகன் முன்வைக்கப்பட்டார். அதே நேரத்தில், பகுதிச் செயலாளரான மதிவாணன் அல்லது எக்ஸ் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் ஆகிய இருவரில் ஒருவர் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் அன்பழ கனை எதிர்த்து களம் இறங்குவார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், ஒருவழியாக சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டு திருச்சி மாநகரத் தந்தை யானார் அமைச்சர் நேருவின் ஆதரவாளரான அன்பழகன். வரக்கூடிய உட்கட்சித் தேர்தலின் போது அன்பழகன் வகித்துவந்த மாநகரச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற, அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் அவருக்கு கொம்பு சீவி விட்டு வந்தனர். இந் நிலையில்தான், உட் கட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வின் பகுதிகளும், மத்திய மாவட்ட தி.மு.க.வின் 6 பகுதிகளும், திருச்சி மாநகர தி.மு.க.வின் எல்லைக்குள் இருந்த நிலையில், மாநகரச் செயலாளர் தேர்தலில் அன்பில்மகேஷ் -கே.என்.நேரு ஆகிய இருவருமே பலத்தோடு இருப்பதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள 6 பகுதிகளிலிருந்து சில வார்டுகளைப் பிரித்து திருவெறும்பூர் பகுதியை புதிதாக உருவாக்கி. கட்சித் தலைமையிலிருந்து சீர்திருத்தம் ஒன்று திடீரென அறிவிக்கப்படவே, முழுக்க முழுக்க அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் நிறைந்துள்ள தெற்கு மாவட்ட தி.மு.க.வின் பலம் அதிகரித்தது. இதனால், மேயர் தேர்தலில் விட்டுக்கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களில் ஒருவரே மாநகரச் செயலாளராக வருவார் என எதிர்பார்க்கிறார்கள். அதே நேரத்தில், ஒன்றி ணைந்த மாவட்ட தி.மு.க.வை மூன்றாகப் பிரித்தது போல, திருச்சி மாநகர தி.மு.க.வையும் இரண்டாகப் பிரித்து, ஒன்றில் அமைச்சர் நேரு வின் ஆதரவாளரும், மற்றொன்றில் அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளரும் வெற்றி பெற லாம் எனவும் தகவல்கள் பரபரக்கத் துவங்கியுள்ளன.

நிலவரம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்ததில், "இந்தப் பகுதி சீர்திருத்தம் பொதுவான நடைமுறைதான். 60 வார்டுகள் மட்டுமே இருந்த திருச்சியில் கூடுதலாக ஐந்து வார்டுகள் சேர்க்கப்பட்ட போது திருவெறும்பூர் பகுதி திருச்சி மாநகரின் பகுதிகளில் ஒன்றாகிவிட்டது. அதனால்தான் திருவெறும்பூர் பகுதி திருச்சி மாநகர தி.மு.க.விற்குள் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட அமைச்சர்களைப் பொறுத்தவரை இருவரும் சகோதரர்களாகக் கட்சிப் பணியாற்றிவருகிறார்கள்'' என்றவர், "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளையும் தலா 3 தொகுதிகள் என உள்ளடக்கி அமைப்புரீதியாக திருச்சி மாவட்ட தி.மு.க. பிரிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகரும் அடங்குகிறது. பிற மாவட்டங்களில் உள்ளதுபோல திருச்சி மாநகருக்குத் தனியாக செயலாளர் தேவையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது'' எனக் கூறினார். ஆக, வரவிருக்கும் உட்கட்சித் தேர்தலில் 'திருச்சி மாநகர தி.மு.க.' என்ற வார்த்தை காணாமலும் போகலாம்.

________________

வைரமணிக்கு கல்தா?

dmkதிருச்சி மாவட்ட தி.மு.க. மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் பொறுப்பாளராக லால்குடியைச் சேர்ந்த வைரமணியை கே.என்.நேரு நியமித்தார். நேரு கிழித்த கோட்டைத் தாண்டாமல் இருந்துவந்த வைரமணி, சமீப காலமாக தனி ஆவர்த்தனம் செய்துவருவதாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள். அதை உறுதிசெய்வது போல சமீபத்தில் தனது பிறந்த நாளை அமர்க்களமாகக் கொண்டாடிய வைரமணி, திருச்சியிலிருந்து லால்குடி வரை தனது படம் பொறித்த பதாகைகளை சாலையின் இருபுறமும் வைத்த விஷயம் அமைச்சர் நேருவை கடுப்பேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது சொந்த ஊரான லால்குடியில், பல கோடியில் அவர் கட்டியிருக்கும் புதிய பங்களா, தி.மு.க. தொண்டர்களையும், பொது மக்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. வைரமணியின் நடவடிக்கைகளும், அவரது திடீர் பகட்டும் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் வரவிருக்கும் உட்கட்சித் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

nkn300722
இதையும் படியுங்கள்
Subscribe