க்கீரன் மகளிரணி வாணியின் சொந்த ஊர் கோயமுத்தூர்தான். மலர் கண்காட்சியைக் காண ஆசைப்பட்டு வந்த நாச்சியாரை, பரணியை, காமாட்சியை, பவானியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்தார் வாணி. சிநேகிதி வீட்டில் நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை.

thinaikatchery

காமாட்சி: காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை எல்லா எடத்திலயும் வெய்யிலு எரிமலையா கொதிக்குது. ஆனா இங்கே ஸ்வெட்டர் போட்டும் வெடவெடப்பு நிக்கலை. குளிரு தாங்கலை. ஆமா... வாணி! அவசரமா எங்கே போயிட்டு வர்றே?

வாணி: (ஆவி பறக்கும் டீயை தோழிகளுக்கு கொடுத்துவிட்டு) சண்முகப் பிரியான்ற கொஞ்ச வயசுப் பொண்ணு நீலகிரி மாவட்டத்துக்கு காவல்துறை கண்காணிப்பாளரா வந்திருக்குதுங்க. எங்க நீலகிரிக்கு இவங்க 88-வது எஸ்.பி. அவங்களை கலெக்டரம்மா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாங்க. அந்த பங்ஷனுக்குத்தான் போய்ட்டு வர்றேன்.

Advertisment

நாச்சியார்: ஒங்க கலெக்டரம்மா இன்னோசென்ட் திவ்யாவுக்கு இங்கே ஏகப்பட்ட மரியாதை குடுக்குறாகள்ல?

வாணி: அதுல என்ன சந்தேகம். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தப்ப அவங்களோட துணைச் செயலாளரா இருந்தவங்க இந்தத் திவ்யா மேடம். ஜெ.வின் நம்பிக்கைக்குரியவங்க. அதனால அப்ப மந்திரிகளுக்கே இவங்களைப் பார்த்தா வெடவெடக்கும். மலர் கண்காட்சியைத் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி வந்தாருல்ல... அப்ப கலெக்டரம்மாட்ட என்ன பம்மு பம்முனாரு பார்த்தியா.

thinaikatchery

Advertisment

காமாட்சி: கலெக்டரை பார்த்து சி.எம். எதுக்கு பம்மோணும்?

வாணி: நாலஞ்சு தடவை சி.எம்.மை பார்க்க அப்ப திவ்யா மேடம் பர்மிஷன் வாங்கிக் கொடுத்தாங்களாம். அந்தப் பழைய பர்மிஷனுக்கு தான் இந்தப் பம்மு மரியாதை.

நாச்சியார்: செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லைனு வள்ளுவர் சொல்லிருக்காக.

பவானி: ஏனுங்க இந்தக் குறளை ஈரோடு மாநகர் மா.செ. கே.வி.ராமலிங்கத்திடம் சொல்லோணுமுங்க.

பரணி: அவிய எவிய செஞ்ச ஒதவியை மறந்தாவ?

பவானி: ஈரோடு மகளிரணி மா.செ. மல்லிகா பரமசிவம் தெரியும்லங்க?

நாச்சியார்: மாநகரத் தாயாக இருந்தாகளே... அவுகளா?

பவானி: ஆமாமுங்க... கே.வி.ராமலிங்கம் திருப்பூர் மாவட்டத்துக்காரருங்க. மன்னார்குடி குடும்பத்து ராவணன் கிருபையால ஈரோடு மாநகர் மா.செ. ஆனாருங்க. ஈரோட்டுக்காரங்க ராமலிங்கத்தை ஏத்துக்கலீங்க. மல்லிகா பரமசிவம்தான் ஃபுல் சப்போர்ட் குடுத்தாங்க. தர்மயுத்தத்தில ஓ.பி.எஸ். பக்கம் போனதால மல்லிகாவை பரம வைரியா நெனைச்சிட்டாருங்க ராமலிங்கம் மல்லிகாட்ட இருக்கிற மகளிரணி மா.செ. நாக்காலியை பிடுங்கி கொடுமுடியைச் சேர்ந்த ஒருத்தருக்கு குடுக்கத் தயாராயிட்டாரு ராமலிங்கம். பாவம்ங்க மல்லிகா "செய்நன்றி மறந்தவரு தன்னோட மனசாட்சிக்கு பதில் சொல்லியே தீரணும்'னு குமுறுதுங்க.

thinaikatcheryகாமாட்சி: வேலூர் மாவட்ட அ.தி.மு.க.விலயும் மகளிரணி மல்லுக்கட்டுதான் கூ...கூ...னு இருக்கு.

வாணி: ஆமா. வேலூர் கிழக்கு மா.செ. பார்த்திபன் எம்.எல்.ஏ. தலைமையில மகளிரணி மா.செ. சுகன்யாவும் இன்னும் பலரும் தினகரன் கட்சிக்கு பெயர்ந்தாங்களே...

காமாட்சி: அதேதான் சுகன்யா இருந்த நாக்காலியை கைப்பத்தணும்னு அரக்கோணம் முன்னாள் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன், ஆற்காடு முன்னாள் சேர்மன் ராதிகா, திருவலம் பிரவீணா மூணுபேரும் ரேஸ்ல இருந்தாங்க. தெர்மாக்கோல் தயவுல ராதிகாவுக்கு அந்த நாக்காலி கெடைச்சிருச்சு.

பரணி: ரன்னருக சும்மாவா விட்டாவ?

காமாட்சி: ஏமாந்த மகளிரெல்லாம் செல்லூர் ராஜுவை ரவுண்ட் கட்டீருக்காங்க. அமைதியா இருந்தா கூட்டுறவு சங்க மாவட்டச் சேர்மன் பதவி கிடைக்கும்னு சத்தியம் செஞ்சாராம்.

வாணி: இன்னைக்கி கச்சேரில எல்லாம் ஆளும்கட்சி மேட்டராவே இருக்குங்க?

நாச்சியார்: எனக்கிட்ட எதிர்க்கட்சித் தாக்கல் ஒண்ணு இருக்குத்தா.

பவானி: தாக்கலை ஏனுங்க சுமக்குறீங்க. கச்சேரில எறக்கி வைங்கங்க.

நாச்சியார்: ஆரோட தயவுமில்லாம மு.க.ஸ்டாலினை பார்த்து பேசுற அளவுக்கு அதிவேகமா வளந்தாரு தேவோட்டை ரூஸோ. அதுனாலேயே அவரை அநியாயமா வெட்டிக் கொன்னாக. இருந்திருந்தா அவருதான் மாவட்டம் ஆயிருப்பாரு. அப்புறம்தான் தா.கி. சிவாரிசுல பெரியகருப்பன் மாவட்டம் ஆனாக. ரூஸோ பொண்டாட்டி ஜோன்சுக்கு சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பையும் இன்னொரு பதவியையும் தலைமை குடுத்துச்சு.

காமாட்சி: இதெல்லாம் சைதை கிட்டுவும், தா.கி.யும் உசுரோட இருந்தப்ப நடந்தது. 2018 சூனுக்கு வாங்க நாச்சி.

நாச்சியார்: போன ஞாயித்துக்கெழமை காளையார் கோயில்ல ரூஸோ மகளுக்கு கல்யாணம். காரைக்குடியில வரவேற்பு. தி.மு.க. மாநில மகளிரணி கனிமொழி எம்.பி. கூட வரவேற்புக்கு வந்தாக. ஆனா மாவட்டம் பெரியகருப்பன்ல இருந்து காரைக்குடி நகரம் குணசேகரன் வரை தி.மு.க. நிர்வாகிகள் அத்தனைபேரும் ரூஸோ மகள் கல்யாண விழாவையும் வரவேற்பு விழாவையும் இதுகளுக்கு வந்த கனிமொழியையும் பாய்காட் பண்ணிப்பிட்டாக.

பரணி: ஜோன்ஸ் ரூஸோ ரொம்ப டென்ஷன் லேடி ஆச்சே?

நாச்சியார்: மாவட்டத்தை ரெண்டா பிரிக்கணும்னு கனிமொழிகிட்ட கோரிக்கை வச்சிருக்காக.

வாணி: சிறுவாணி சாட்சியா சொல்றேனுங்க. நம்ம மகளிரணியில எந்தக் காலத்திலயும் பிரிவு எண்ணமே வந்திறப்பிடாதுங்க. ரொம்ப குளிரா இருக்குங்க. எந்திரிங்கங்க சூடா டீ போட்டுத் தர்ரேனுங்க.

-ஜீவாதங்கவேல், து.ராஜா, அருள்குமார், நாகேந்திரன்