கொரோனாவுக்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்ற கண்டுபிடிப்பால் அது மூடப்பட்ட நிலையில், பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக மார்கெட் அமைத்தது அரசு. அது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சாதகமாக அமையவில்லை. அதனால், கோயம்பேட்டில் செப்டம்பர் 18 முதல் உணவு தானியக்கடைகள் திறக்க அனுமதி வழிக்கப்பட்டது. செப்டம்பர் 28ஆம் தேதி காய்கறி மார்க்கெட் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால், பழைய கோயம்பேடாக விலை நிலவரம் இல்லை என்கிறார்கள் சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்.
விலையேற்றம் தொடர்பாக நம்மிடம் பேசிய கோயம்பேடு சிறுவியாபாரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வர்த்தக அணி துணை தலைவருமான ஜான்சன், ""கோயம்பேடு காய்கறி மார்க்கெட் டில் மட்டும் மொத்தம் 1889 கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 2400 சதுர அடியில் 56 கடைகள், 1200 சதுர அடியில் 32 கடைகள், 600 சதுர அடியில் 80 கடைகள், இரண்டு வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றுக்
கொரோனாவுக்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்ற கண்டுபிடிப்பால் அது மூடப்பட்ட நிலையில், பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக மார்கெட் அமைத்தது அரசு. அது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சாதகமாக அமையவில்லை. அதனால், கோயம்பேட்டில் செப்டம்பர் 18 முதல் உணவு தானியக்கடைகள் திறக்க அனுமதி வழிக்கப்பட்டது. செப்டம்பர் 28ஆம் தேதி காய்கறி மார்க்கெட் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. ஆனால், பழைய கோயம்பேடாக விலை நிலவரம் இல்லை என்கிறார்கள் சிறுவியாபாரிகளும் பொதுமக்களும்.
விலையேற்றம் தொடர்பாக நம்மிடம் பேசிய கோயம்பேடு சிறுவியாபாரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வர்த்தக அணி துணை தலைவருமான ஜான்சன், ""கோயம்பேடு காய்கறி மார்க்கெட் டில் மட்டும் மொத்தம் 1889 கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 2400 சதுர அடியில் 56 கடைகள், 1200 சதுர அடியில் 32 கடைகள், 600 சதுர அடியில் 80 கடைகள், இரண்டு வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஏல குடோன் கடைகளையும் சேர்த்து மொத்தம் 196 கடைகள். இவை அனைத்தும் பெருவியாபாரிகளுக்கானவை.
சிறுவியாபாரிகளுக்காக 300 சதுர அடியில் 404 கடைகள், 150 சதுர அடியில் 848 கடைகள், நடைபாதை வியாபாரத்திற்காக 445 கடைகள் என 1697 கடைகள் உள்ளன.
திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் திறந்தபோது பெரிய வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயம்பேட்டில் இருந்த 1697 சிறு வியாபார கடை உரிமையாளர்கள் மற்றும் அதில் வேலை செய்யும் தொழிலாளிகள் 3000 குடும்பத்தினரும் கடந்த ஆறுமாத காலமாக வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம். கோயம்பேடு திறந்தால் நல்லகாலம் பிறக்கும் என எதிர்பார்த்திருந் தோம். ஆனால் இப்போதும் பெருவியாபாரிகளுக்கே சாதகமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
மாலை ஆறு மணிக்கு மேல், காய்கறி ஏற்றி வந்த வெளியூர் லாரிகளை அனுமதிக்கின்றனர், நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் காய்கறிகளை வாங்க சிறுகடை வியாபாரிகளை உள்ளே அனுமதிக்கின்றனர், காலை 9 மணிக்கு மூடிவிடுகின்றனர். முந்தி வருபவர்களுக்கே காய்கறி கிடைக்கின்றது, அதே போல பெருவியாபாரிக டம் மூட்டை மூட்டையாக தான் கொள்முதல் செய்ய முடியும் சில்லரையாக தருவதில்லை, இதனால் அதை ஒருவர் மூட்டை மூட்டையாக கொள்முதல் செய்து மற்றவர்களுக்கு சில்லரையாக கொடுக்கிறார். இதனால் விலை அதிகமாகிறது. சிறுவியாபாரிகளை அனுமதித் தால்தான், நடைபாதை கடையினருக்கும் பொதுமக்க ளுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும்.
மேலும் நேரப் பற்றாக்குறையால் லாரிகளை திருச்சி, திண்டிவனம், பெங்களூர் போன்ற இடங்களுக்கு திருப்பிவிடுவதால், காய்கறி பற்றாகுறை ஏற்படுகின்றது பெருவியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, அவர்கள் சொல்வதே விலையாக அமைகிறது. சில்லரை வியாபாரி களால் இப்படி சிண்டிகேட் அமைக்க முடியாது. கோயம்பேடு மார்கெட்டை மூடியபோது பெரும் வியாபாரிகள்-சிறிய வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர்காகவும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால் தற்போது மூவாயிரம் குடும்பத்தை மறந்து விட்டு, பெரியவியாபாரிகளை மட்டும் அனுமதிக் கின்றனர். இதனால், பொதுமக்களும் விலையேற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சுமார் 2500 முதல் 3000 லாரிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரும். ஆனால் அதிகாரிகள் கெடுபிடிகள், சிண்டிகேட் முறைகேடுகலால் 1500 முதல் 1800 லாரிகள்தான் வருகின்றது, அதிகாரிகளை கேட்டால் மொத்தத்தையும் திறந்துவிட்டால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள், ஆனால் மார்க்கெட் உள்ளே சமூக இடைவெளியும் இல்லை, மாஸ்க் அணிவதும் குறைவு தான். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. வானகரம்-சிந்தாதிரிபேட்டை மீன் மார்கெட்டுகள், பல்லாவரம் சந்தை இங்கெல்லாம் சிறுவியாபாரிகள் இருக் கிறார்கள். கோயம்பேட்டில் மட்டும் சிறுவியாபாரிகளை அதிகாரிகள் அழிப்பதேன்?'' என்றார் வேதனையுடன்.
மார்கெட்டுக்கு வந்த சிறுகடை வியாபாரி கற்பகத்திடம் பேசினோம் ""என்னோட கடைல பச்சைகாய்கறி நாள் ஒன்றுக்கு ஐந்துகிலோ வரைதான் விற்பனை செய்ய முடியும். ஆனால், மூட்டையாகத்தான் விற்போம் என இப்போது சொல்வதால், பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எல்லாக் காய்களும் எக்கசக்க விலை. என் கடை கஸ்டமருக்கும் விலை ஏத்திதான் விற்பனை செய்ய முடியும், அரசு உடனே தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் தான் நடுத்தர குடும்பம்மெல்லாம் பொழப்பு நடத்த முடியும்'' என்றார்.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் எம்.எம்.சி. அதிகாரியான டி.ஆர்.ஓ கோவிந்தராஜனிடம் பேசினோம் ""இது தொடர்பாக எனக்கும் புகார் வந்திருக்கு விசாரணை நடத்திகிட்டு இருக்கேன். உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஒரு சிலரின் லாபாத்திற்காக எத்தனையோ நடுத்தர குடும்பங்கள் சொல்ல முடியாத பாதிப்புக்குள்ளாகின்றார் என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் வணிகர்கள்.
-அரவிந்த்
படங்கள்: அசோக்