நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்வது, அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப்படிப்பில் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு, கலந்தாய்வு நடத்தி பணிநியமனம் மற்றும் பணி மாறுதல் வழங்குதல், சம்பள உயர்வு என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களுக்குமேலாக போராடிய அரசு மருத்து வர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை அமைச்சர் போராட்டத்தை முன்னெடுத்த டாக்டர்களை பணிமாறுதல் செய்து பழிவாங்கியிருப்பது போராடிய அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

dd

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் சாந்தி நம்மிடம், ""நான்குவிதமான கோரிக்கைகளுமே அரசு மருத்துவமனையை நம்பிவரும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் கோரிக்கைகள்தான். எங்குமே சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியாத நோயாளிகளை அரசின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளடக்கிய மருத்துவமனைக்குத்தான் அழைத்துவருவார்கள். இங்கேயே, மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தால் எப்படி காப்பாற்ற முடியும்? 4 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு 1 பேராசிரியர் என்று ddஇருந்ததை தற்போது 8 மாணவர்களுக்கு 1 பேராசிரியர் என்றாக்கிவிட்டார்கள். அதேபோல், 1 முதுகலை மாணவருக்கு 1 பேராசிரியர் என்று இருந்ததை 3 மாணவருக்கு என்று எம்.சி.ஐ. விதியை தவறாக புரிந்துகொண்டு இப்படி மாற்றிவிட்டார்கள். இதனால், மருத்துவக்கல்வியின் தரம் குறைந்து அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிருக்குதான் ஆபத்தாக முடியும்.

தமிழக அரசு டாக்டர்கள் பே பேண்ட் ஃபோர் (Pay Band 4) 20-வது வருடத்தில் பெறுகிறார்கள். மத்திய அரசு டாக்டர் களோ 13 வருடத்திலேயே பெற்றுவிடுவார்கள். "தமிழக அரசு டாக்டர்களுக்கு 12 வருடங்களிலேயே பே பேண்ட் ஃபோர் அடிப்படையில் சம்பளம் வழங்கப் பரிசீலிக்கலாம்' என்று கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே ஆணை பிறப்பித்துவிட்டது. ஆனால், 10 வருடங்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை. இதனால், ஒரேமாதிரி படிப்பை முடித்து விட்டு மத்திய அரசுப்பணியில் சேர்பவர் களுக்கும் மாநில அரசுப்பணியில் சேர்பவர் களுக்கும் பல மடங்கு சம்பளத்தில் வித்தி யாசம் ஏற்படுகிறது. அதாவது, எம்.பி. பி.எஸ். முடித்த மத்திய அரசு டாக்டர் களுக்கும் மாநில அரசு டாக்டர்களுக்கும் 46,000 ரூபாய் சம்பளத்தில் வித்தியாசம். அதேபோல், எம்.டி. முதுகலை மருத் துவப்படிப்பு முடித்தால் 75,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வித்தியாசப்படுகிறது.

Advertisment

எம்.சி.ஐ. விதிப்படி அரசுப்பணியி லுள்ள டாக்டர்களுக்கான கோட்டா இல்லை. இதனால், 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேரமுடியாது. மேலும், சலுகை மதிப்பெண்களும் கிடையாது. மலைகள் மற்றும் ரிமோட் ஏரியாக்களிலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரி யும் மருத்துவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று தீர்ப்பளித்துவிட்டது உயர்நீதிமன்றம். இதனால், தமி ழகத்தில் சுமார் 1500 ஆரம்ப சுகாதாரநிலையங்களில், 70 ஆரம்ப சுகாதாரநிலையங்கள்தான் ddமலை மற்றும் ரிமோட் ஏரியாக்களில் உள்ளன. மீதமுள்ள, 90 சதவீத அரசு ஆரம்ப சுகாதாரநிலை யங்கள் நகர்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் உள்ளன. அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பொது ஒதுக்கீடாக மாற்றியதால்… தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் தனியார் மருத்துவமனைகளுக்கே போய்விடுவார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஏழை எளிய நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்காமல் போய்விடும். அரசு மருத்துவமனையிலுள்ள சர்வீஸ் பி.ஜி.க்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவந்தால் அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமே பயன் அடைவார்கள்.

அடுத்தது, பணம் வாங்கிக்கொண்டு பணி மாறுதல் கொடுப்பதும் பணம் கொடுக்காதவர்களை குக்கிராமங்களுக்கு தூக்கி அடிப்பதும் தொடர் கிறது. அதனால், பொது கவுன்சிலிங் வைத்து பணிமாறுதல் செய்யவேண்டும்'' என்கிறார் 4 அம்ச கோரிக்கைகளை சுட்டிக்காட்டி.

இந்நிலையில், போராட்டத்திற்கு தீர்வு சொல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்த 500 அரசு மருத்துவர்களை பணிமாறுதல் என்கிற பெயரில் பழிவாங்கியது குறித்து, போராட்டத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் நாம் பேசியபோது, ""இது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். டாக்டர்களை அவமானப் படுத்தும் செயல். போராடுற டாக்டர்களை அழைத்துப் பேசாமல் வேறு ஒரு மைனாரிட்டி டாக்டர்கள் சங்கத்தை அழைத்து பேசுவது ஏமாற்றுவேலை, பிரித்தாளும் சூழ்ச்சி. போராட்டத்தால் ஸ்தம்பிக்கப்பட்ட சூழலில் வெளிநாடு செல்வதற்கு முன் ஆகஸ்டு 27-ந்தேதி எங்கள் அமைப்பிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். செந்தில்ராஜா ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைத்து 6 வாரத்தில் தீர்வு காணப்படும் என்றார். ஆனால், 9 வாரம் ஆகியும் தீர்வு கிடைக்காத சூழலில்தான் போராட்டத்தில் இறங்கினோம். தீர்வு எட்டப்படாதவரை போராட்டம் தொடரும்'' என்றார்.

Advertisment

இதுகுறித்து, விளக்கம் கேட்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ஆகியோரை தொடர்புகொண்டபோது விளக்கம்பெற முடியவில்லை. ""தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைதான் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் அமைச்சர். இச் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் அமைச்சரின் ஆதரவாளர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டபிறகும், போராடிய மருத்துவர்களை பழிவாங்கி மிரட்டிவிட்டு அவர்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்'' என்று குமுறிவெடிக் கிறார்கள் போராடும் டாக்டர்கள். அரசின் பிடி வாதத்தால் பறிபோவது என்னவோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டி ருக்கும் ஏழை எளிய மக்களின் உயிர்தான்.

-மனோசௌந்தர்