Advertisment

திருச்சி கல்லூரியில் மாணவி மர்ம மரணம்!

trichy woman college student

திருச்சி சமயபுரம் அருகே செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertisment

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த பாலாஜியின் மகள் தாரணி, விடுதியில் தங்கி பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், தாரணிக்கு காய்ச்சல் வந்ததால் கல்லூரி வளாகத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச

திருச்சி சமயபுரம் அருகே செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertisment

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த பாலாஜியின் மகள் தாரணி, விடுதியில் தங்கி பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், தாரணிக்கு காய்ச்சல் வந்ததால் கல்லூரி வளாகத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். காய்ச்சலுக்கு விடுப்பு எடுப்பதற்காக பேராசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் விடுப்பு எடுக்கக்கூடாது என்றும், நிர்வாகத்திடம் கேட்டுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கியுள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மீண்டும் விடுதிக்கு வந்தபோது, அறை உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருந்ததாகக் கூறப்படுகிறது

முன்னதாக, தாரணிக்கு காய்ச்சல் வந்ததுமே தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்திருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜியை, நெடுநேரமாகியும் அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். அதன் பின்னரே தாரணி இறந்துவிட்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்து விட்டனர் எனக்கூறி உறவினர்களுடன் இணைந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

trichy woman college student

Advertisment

மாணவி இறந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இதை அரசியலாக்கி, ஏற்கெனவே இந்த கல்லூரியில் எட்டுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது மர்மமாக இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, "கல்லூரியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் ஏதாவது ஒரு மாணவி இப்படி தற்கொலை முடிவுக்கு செல்வது கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதையே கல்லூரிக்கு எதிராக அரசியலாக்குகின்றனர். இதுபோன்று எதாவது காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்'' என்கிறார்கள் நிர்வாகத்தினர்.

nkn290624
இதையும் படியுங்கள்
Subscribe