டு திருடும் கும்பலால், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப்பட்ட கொடூரத்தின் கொதிப்பு அடங்குமுன்பே கரூரில், மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ், பணியிலிருந்தபோது வேன் மோதி பலியாகியுள்ளார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள வெங்கக்கல்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

mm

கனகராஜை இடித்த வேன் நிற்காமல் சென்ற நிலையில்... அந்த வேனை காவல்துறையினர் தேட ஆரம்பித்துள்ளனர். முதலில் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், பஞ்சப்பட்டியை சேர்ந்த வாகனம் ஒன்று நிற்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது தெரியவந்தது. கூடுதலாக சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் முக்கிய அடையாளங்களைக் கண்டறிந்து, அந்த வேனைப் பிடிக்க கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

களத்தில் இறங்கிய குழு, கனகராஜை மோதிவிட்டுச் சென்ற வேன் சென்ற வழித்தடங்கள் அனைத்திலும் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதால், பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த வாகனம், தோகைமலையை அடுத்த கழுகூர் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டது. அதை ஓட்டிவந்தவர் தோகைமலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தப்பிச்சென்ற ஓட்டுநர் சுரேஷ்குமாரை காவல்துறை யினர் தேடி வந்த நிலையில்... அவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார்.

Advertisment

இந்நிலையில், தன்னு டைய டுவிட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க. மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், "கரூரில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

வட்டாரப் போக்கு வரத்து ஆய்வாளர் இறப்புக்குக் காரணம் விபத்து மட்டுமே என்று சொல்லப்பட்டு வரும் நிலையில்... அவர் மீது வேனைக் கொண்டு மோதி விபத்தை ஏற்படுத்திய சுரேஷ் குமாரிடம், விசாரணை நடத்திய பிறகே அதை உறுதிப்படுத்த முடியும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கனகராஜ் குடும்பத் தாருக்கு முதலமைச்சர் கொடுத்த நிவாரண நிதியை அதிகமாகத் தரவேண்டும் என ஓ.பி.எஸ். கோரிக்கை வைத்த தும் கூட இந்த உயிரிழப்பு விவ காரத்தை பரபரப்பாக்கி யுள்ளது.

Advertisment