உரிமை கேட்டால் சஸ்பெண்ட்! போராடும் பேராசிரியர்கள்!

mm

ரலாற்றுத் தொன்மை வாய்ந்த பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியின் பேராசி ரியர்கள் தற்போது அற வழியில் போராட்டத்தில் இறங்கியிருப்பது, பாளை நகரைப் பரபரப்பாக்கி யிருக்கிறது. அறப்போராட்டத்திலிருந்த பேராசியர்களிடம் பேசினோம்.

mu

"எங்கள் பேராசிரியர்களின் கடும் உழைப்பால் சேவியர் கல்லூரி கடந்த 2019-ல் கணிதத்தில் அகில இந்திய அளவில் டாப் ரேங்க் வாங்கியது. இப்படிப்பட்ட பேராசிரியர்களை போராட் டத்தில் இறங்கும் சூழலுக்கு கல்லூரி நிர் வாகம் தள்ளியிருக்கிறது.

அரசிடமிருந் தும், யு.ஜி.சி.யிட மிருந்து நிதி உதவி பெறுவ தால், அரசு, யு.ஜி.சி., மற் றும் பல் கலைக் கழ கத்தின் விதி முறைகளைப் பின்பற்றி, கல்லூரி முதல் வர் மற்றும் துணை முதல்வர் கள் நியமிக்கப்பட வேண்டும் என்று, கடந்த 22.01.2020 அன்று மூட்டா தலைவர் பேராசிரியர் இருதயராஜ் தலைமையில் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தோம். ஆனால் நிர்வாகம், "அதை நீங்கள் கேட்க வேண்டியதில்லை. மைனாரிட்டி கல்லூரியான எங்களின் மைனாரிட்டி உரிமைகளின்படி செயல்படுகிறோம்" என்றது.

இதைய

இதையடுத்து, கோரிக்கை மனு அளித்த 73 பேராசிரியர்களுக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தது நிர்வாகம். இதில் 36 ஆசிரியர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். மீத முள்ள 37 பேராசிரியர் கள் நிர்வாகத்தின் தவறுகளை எதிர்த்து தொடர்ந்து அற வழியில் போராடி வருகிறோம்.

தன்னாட்சிக் கல்லூரியான எங்கள் கல் லூரியின் எக் ஸாமினேஷன் கண்ட்ரோலர் எனப்படும் பொறுப்பு, கல்லூரியின் வசம் தான் உள் ளது. முக்கியமான இந்தப் பொறுப் பின் தலைவரான எக்ஸாமினராக, கல்லூரியின் மூத்த பேராசிரியரைத்தான் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் நிர்வாகம், தன் வசதிக்காக ரிட்டயர்டு ஆனவரை நியமித்தது. இதை நாங்கள் எதிர்த்தால் இதற்கும், "மைனாரிட்டி உரிமை அடிப்படையில் செய்கிறோம்" என்கிறது நிர்வாகம்.

muta

ஒவ்வொரு துறையின் ஹெச்.ஓ.டி.யாக, அந்தந்த துறையின் மூத்த பேராசிரியரைத்தான் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் நிர்வாகம் தன் வசதிக்காக, தனக்கு வேண்டப்பட்டவரை, ஜூனியராக இருப்பவரை அப்பதவியில் நியமித்தது. உதாரணமாக பொருளாதாரத்துறையின் தலைவ ராக அத்துறையின் மூத்த பேராசிரியரை நியமிக் காமல், வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரை துறையின் தலைவராக நியமித்தார்கள். வரலாற்றுப் பேராசிரியரால் பொருளாதாரத்துறை எக்ஸாம் பேப்பர்களை எப்படித் திருத்த முடியும்? அதனால் நாங்கள் எக்ஸாம் பேப்பர்களை துறைத் தலைவரிடம் தராமல் நேரடியாகக் கண்ட்ரோலர் ஆப் எக்ஸாமினரிடம் கொடுத்து விட்டோம். இதனால் நான்கு பேராசிரியர்களின் இன்க்ரி மென்டை கட் செய்ததோடு மெமோவும் தரப்பட்டது. இதை விசாரிக்க, பல்கலைக் கழகம் அனுப்பிய விசாரணைக் கமிசனிடம் முழு விவரங்களையும் தெரிவித்துவிட்டோம்.

இதேபோல தாவரவியல் துறைத்தலைவர் நியமனத்திலும் நிர்வாகம் குளறுபடி செய்ததால், அத்துறைத்தலைவருக்கும், பிற பேராசிரியர்களுக்கு மிடையே பிரச்சினையாகிவிட்டது. இந்த விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ்வரை புகார் சென்று, சமரசப்பேச்சால் வாபஸ் பெறப்பட்டது. அத்துறையின் சகாய ஆண்டனி சேவியர், பெப்சி ஆண்டனிராயல் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். இதிலும் பல்கலைக் கழக விதிமுறை களைப் பின்பற்றவில்லை. இதை எதிர்த்து மூட்டா அமைப்பினர் போராடியதால், கல்லூரியின் மூட்டா அமைப்புத்தலைவர் இருதயராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்'' என்றனர்.

"பொருளாதாரத்துறையின் தலைவராக வரலாற்றுப் பேராசிரியரை நியமித்ததால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுமே என்று கேட்டதற்காக எனக்கு மெமோ தரப்பட்டு, இன்க்ரிமென்ட்டும் கட் செய்யப்பட்டது'' என்கிறார் பேராசிரியர் ஆல்வின். "எங்களின் தாவரவியல் துறைக்கு ஜூனியர்மோஸ்ட் பேராசிரியரை நிர்வாகம் நியமிக்க, அவரோ, சீனியர் பேராசிரியர் களிடம் வீண் தகராறு செய்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்காத நிர்வாகம், எங்களை சஸ்பெண்ட் செய்துள் ளது" என்கிறார் பேரா சிரியர் சேவியர் வேதனையுடன்.

ddபேராசிரியர் இருதய ராஜோ, "மைனாரிட்டி கல்லூரி என்றாலும், விதி முறைப்படிதான் துறைத் தலைவரை நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். பேராசிரியர்கள்மீதான நடவடிக்கை யை வாபஸ் வாங்குமாறு அறப்போராட்டம் நடத்தியதற்காகவும், சிறுபான்மை நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பார்வைக்கு விவகாரத்தைக் கொண்டுசென்றதற்காகவும் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்'' என்றார்.

இதுகுறித்து, கல்லூரியின் பிரின்சிபல் மரியதாஸ் மற்றும் செயலாளர் அல்போன்ஸ் மாணிக்கம் இருவரையும் கேட்டதில், "துறைத் தலைவரான ஹெச்.ஓ.டி. நியமன விவகாரத்தில் பிரச்சினை வந்தவுடன் சீனியர் பேராசிரியர்கள் தங்களின் கிரேடுகளை ரிசைன் பண்ணிட்டாங்க. அவர்களை வாபஸ் வாங்கச் சொன்னோம். வாபஸ் வாங்கலை. தாவரவியல் துறைத் தலைவராக ஜஸ்டின் கோவில் பிள்ளை நியமனத்தில் பேராசிரி யர்களோடு எழுந்த பிரச்சனையில், புகார் குறித்து விசாரிக்கும்போதே போலீஸ்வரை போய் விட் டார்கள். பிறகு ரிசைன் செய்த ஜஸ்டின் கோவில் பிள்ளை, தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதில் பாரபட்சமின்றி நிர்வாகம் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுத்தது. பேசித்தீர்க்க வேண்டி யதை ஆர்ப்பாட்டமாக நடத்தியதால், அமைப்புத் தலைவர் இருதயராஜ்மீது நடவடிக்கை எடுக்கப்பட் டது. இதுகுறித்து பேசித்தீர்க்க அழைப்புவிடுத்தும் எங்கள் அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை" என்றார்கள். பேராசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கு மான பிரச்சனையால் தற்போது மாணவர்களின் கல்விதான் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

nkn081221
இதையும் படியுங்கள்
Subscribe