சேலத்தை அடுத்த சூரியூர் பள்ளக்காடு வனக் கிராமத்தில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று திடுதிப்பென்று பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற வனத்துறையினர், கிராமத்திற்குள் இருந்த விவசாயிகளின் குடிசைகள், கீற்றுக் கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி, மஞ்சள், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களை நாசப்படுத்திவிட்டனர்.
வனத்தை ஆக்கிரமித்ததாகக் கூறித்தான், நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அம்மக்களை இப்படி நிர்க்கதியாக நிற்க விட்டிருக்கிறார்கள். ஆனால், சூரியூர் பள்ளக்காடு மக்களோ, இது வனத்துறைக்கு சொந்தமானது அல்ல; வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்று வாதிடுகிறார்கள்.
சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி இதை மறுக்கிறார். அவர், ""அ
சேலத்தை அடுத்த சூரியூர் பள்ளக்காடு வனக் கிராமத்தில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று திடுதிப்பென்று பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற வனத்துறையினர், கிராமத்திற்குள் இருந்த விவசாயிகளின் குடிசைகள், கீற்றுக் கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி, மஞ்சள், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களை நாசப்படுத்திவிட்டனர்.
வனத்தை ஆக்கிரமித்ததாகக் கூறித்தான், நீண்டகாலமாக வாழ்ந்து வரும் அம்மக்களை இப்படி நிர்க்கதியாக நிற்க விட்டிருக்கிறார்கள். ஆனால், சூரியூர் பள்ளக்காடு மக்களோ, இது வனத்துறைக்கு சொந்தமானது அல்ல; வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்று வாதிடுகிறார்கள்.
சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி இதை மறுக்கிறார். அவர், ""அந்த இடம், வனத்துறைக்குச் சொந்தமானது என்பதில் சந்தேகமே இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியும் வனத் துறை கையகப்படுத்துவதற்கு முன்பாக வருவாய்த்துறை வசம்தான் இருக்கும். 1889-ஆம் ஆண்டில் பிரிட் டிஷ் ஆட்சியின்போதே வனத்துறையின் காப்புக்காடு பகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது சூரியூரில் போராடுபவர்கள் எல்லோருமே 1987-ஆம் ஆண்டுவாக்கில்தான் அங்கே ஆக்கிரமித்து குடியேறி இருக்கிறார்கள் '' என்கிறார்.
சூரியூர் பள்ளக்காடு வனக்கிராம மக்கள் உரிமை களுக்காக போராடி வரும் முருகேசன் இப்பிரச்னை குறித்து நம்மிடையே விரி வாக பேசினார். ""எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, 1984-ல் வீட்டுக்கொரு மின்விளக்கு திட்டம் கொண்டுவந்தார். அத்திட்டத்தின் கீழ், மின்வசதி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை நாடினோம். அப்போதுதான், வருவாய்த்துறை அதிகாரிகள், "சேலம் மாவட்டத்தில் சூரியூர் பள்ளக்காடு கிராமமே இல்லை. இல்லாத ஊருக்கு எப்படி மின்வசதி செய்து தரமுடியும்' என்று புது குண்டை போட்டார்கள். பல தலைமுறைகளாக வசித்த ஊர், அரசு பதிவேடுகளில் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. "சிட்டிசன்' படத்தில் வரும் அத்திப்பட்டி போல எங்கள் ஊரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர்.
1905-ஆம் ஆண்டின் வருவாய்த்துறை யின் "அ' பதிவேட்டில், சேலம் மாவட்டத்தின் 126-ஆவது கிராமமாக சூரியூர் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1972-ஆம் ஆண்டில்தான் சேலம் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டது. அப்போது வெளியான ஆவணங்களிலும் சூரியூர் கிராமம் இருந்தது. மேலும், 1889-ல் ஜல்லூத்து மலை காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. அப்போது எல்லை வரையறை செய்யப்படும்போது, சூரியூர் கிராமத்திற்கு வடமேற்கு திசையில் ஜல்லூத்து மலை இருப்பதாக பதிவுசெய்யப்படுகிறது.
இத்தனை ஆவணங்களின் மூலம் சூரியூர் கிராமம் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். ஆனால், வருவாய்த்துறையினர் ஏதோ சதி செய்து, எங்கள் கிராமத் தையே தொலைத்துவிட்டார்கள். கடந்த 28 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் கிராமத்தை மீட்பதற்காகவும், எங்களின் வாழ்வுரிமைக்காகவும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
வனத்துறை அதிகாரிகள் சட்ட விரோத கும்பலுடன் சேர்ந்து கொண்டு, இங்குள்ள மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் இடையூறாக இருக்கி றோம். அதனால்தான் திட்டமிட்டு எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த துடிக்கின்றனர். எங்களுக்கு எங்கள் மண்ணில் வாழ்வதற்கான உரிமைகளை அரசு வழங்க வேண்டும். எங்கள் மண்ணை விட்டுத்தர மாட்டோம்,'' என்கிறார்.
சேலம் மாவட்ட ஜே.எம்.&1 கோர்ட் மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், சம்பவம் நடந்த சூரியூர் பள்ளக்காட்டில் நேரில் ஆய்வு செய்தார். எல்லாவற்றையும் பார்வையிட்ட அவர், ’’""சூரியூர் பள்ளக்காடு மக்களுக்கு சட்டப்படி என்ன தீர்வு கிடைக்க வழிசெய்ய முடியுமோ அதைச் செய்வோம்''’என்று மட்டும் கூறிவிட்டுக் கிளம்பினார். அவர் செல்லும்போது காரை வழிமறித்து வனக்கிராம மக்கள் தரையில் படுத்து புரண்டு கதறி அழுதனர்.
-இளையராஜா