Advertisment

உக்ரைன் களத்தில் உயிர் மீண்ட மாணவர்கள்! டாக்டராக முடியுமா?

ff

ஷ்யா -உக்ரைன் இடையே தொடர்ந்துவரும் போரில் இந்தியர்கள், அதிலும் பெரும்பான்மை தமிழ் மாணவர்கள் சிக்கியிருப்பது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உக்ரைனிலிருந்து தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் சூழலில், படிப்பை பாதியிலேயே விட்டு வந்துள்ள மாணவர்கள் செலுத்தியுள்ள கட்டணம், அவர்களின் மருத்துவக்கனவு இந்த போர்ச்சூழல் காரணமாக வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் இந்தியாவி லேயே மருத்துவப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருப்பது, உக்ரைனிலிருந்து திரும்பியுள்ள மாணவர்களின் முகத்தில், பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏற்கெனவே, உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதில் தென்னிந்திய மாணவர்களிடம் பாரபட்சம் பார்ப்ப தாக புகார்கள் எழுந்தன. அதேபோல, மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மீட்டு வருவதில் ஒன்றிய அரசின் அதிகாரிகள் எவ்வித முனைப் பும் காட்டவில்லையென்றும், தாங்க ளாகவே நடந்தும், பதுங்கியும், பசி பட்டினியோடும் வந்து சேர்ந்தோம் என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எனவே மாணவர் களின் பெற்றோரின் வேண்டுகோளுக் கிணங்க தமிழக அரசு இப்பிரச்சனை யில் தீவிரமான முனைப்பு காட்டி, மாணவர்களை மீட்பதற்காக எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உக்ரைனி லுள்ள தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

Advertisment

gg

ஆனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை தமிழக பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அத

ஷ்யா -உக்ரைன் இடையே தொடர்ந்துவரும் போரில் இந்தியர்கள், அதிலும் பெரும்பான்மை தமிழ் மாணவர்கள் சிக்கியிருப்பது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உக்ரைனிலிருந்து தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் சூழலில், படிப்பை பாதியிலேயே விட்டு வந்துள்ள மாணவர்கள் செலுத்தியுள்ள கட்டணம், அவர்களின் மருத்துவக்கனவு இந்த போர்ச்சூழல் காரணமாக வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் இந்தியாவி லேயே மருத்துவப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருப்பது, உக்ரைனிலிருந்து திரும்பியுள்ள மாணவர்களின் முகத்தில், பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏற்கெனவே, உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதில் தென்னிந்திய மாணவர்களிடம் பாரபட்சம் பார்ப்ப தாக புகார்கள் எழுந்தன. அதேபோல, மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மீட்டு வருவதில் ஒன்றிய அரசின் அதிகாரிகள் எவ்வித முனைப் பும் காட்டவில்லையென்றும், தாங்க ளாகவே நடந்தும், பதுங்கியும், பசி பட்டினியோடும் வந்து சேர்ந்தோம் என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எனவே மாணவர் களின் பெற்றோரின் வேண்டுகோளுக் கிணங்க தமிழக அரசு இப்பிரச்சனை யில் தீவிரமான முனைப்பு காட்டி, மாணவர்களை மீட்பதற்காக எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உக்ரைனி லுள்ள தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

Advertisment

gg

ஆனால் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை தமிழக பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர், மீட்கப்பட்ட மாணவர்களின் அடுத்தகட்ட பிரச்சனையான, மருத்துவப் படிப்பைத் தொடர்வது குறித்த விஷயத்தில் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனில், இந்திய மாணவர் கள், மருத்துவம் படிப்பதற்காக மட்டுமே பெருமளவில் சென்றிருப்பது குறித்து விசாரித்ததில், பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களைப் பொறுத்த வரையில், வீட்டுல ஒருத்தராவது டாக்டராகணும் என்ற கனவு பெரும் பாலான குடும்பங்களில் இருக்கிறது. இது பல தலைமுறைகளின் தாகம் என்றே சொல்லலாம். அதனால், இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரி களில் இடம் கிடைக்காமல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்வதற் கான நிதி வசதி இல்லாதவர்கள், இங்குள்ள தனியார் கல்லூரி களைவிடக் குறைவான கட்ட ணத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ள வெளிநாடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இதற்கு வழிகாட்டுவதற் காகப் பல்வேறு நிறுவனங்கள் வர்த்தகரீதியாகச் செயல்படுகின்றன. எந்தெந்த நாடுகளில் என் னென்ன படிப்புகளைக் குறைந்த செலவில், ஓரளவு தரமாகவும் கற்க முடியும் என்பதை அவர்களே தெளிவுபடுத்துவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று தங்கி, படிப்பதற்கான மொத்த பொறுப்புகளையும் உரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு செய்து தருவார்கள்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, ஜார்ஜியா, அர்மீனியா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறார்கள். உக்ரைனில் மருத்துவப்படிப்புக்கான கட்டணம் குறைவு, நன்றா கப் படித்துவிட்டால் தேர்ச்சி பெறுவது உறுதி. இதற்காகவே அங்கே படிக்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் உக்ரைனில் படிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. உக்ரைனின் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டது. ரஷ்ய மொழியில் தான் பாடத்திட்டம் இருக்குமென்பதால் ரஷ்ய மொழி கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். அதேபோல, உக்ரைன் தட்பவெப்பத்தில் ஏற்படும் நோய்களும், அதற்கான சிகிச் சைகளும் இந்தியாவிலிருந்து மாறுபட்டி ருக்கும். எனவே இந்தியாவுக்கு வந்த பின்பு, இங்குள்ள சூழலுக்கேற்ப கல்வியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

வெளிநாடுகளில் எந்த நாட்டில் மருத்துவம் படிப்பவர்களாக இருந்தா லும், இந்தியாவுக்குள் வரும்போது, எஃப்.எம்.ஜி. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும். அடுத்து ஹவுஸ் சர்ஜனாகப் பணியாற்ற வேண்டும். அதற்கு விண்ணப்பிக்க, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

dd

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், இக்கட்டணத்தை 29,400 ரூபாயாகக் குறைத்து, பெற்றோரின் சுமையைக் குறைத்தார். தற்போது, தேசிய மருத்துவ ஆணையம் (சஙஈ), கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக் கையில், வெளிநாட்டில் பயின்றுவந்த மாணவர்கள் ஹவுஸ் சர்ஜன் பயிற்சிபெற எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று கூறியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், "உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1200-க்கும் மேற் பட்ட மருத்துவ மாணவர் கள் தமிழகம் திரும்பியுள்ளனர். தற் போதைய சூழலில் நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பை தொடர்வது சாத்திய மில்லை. எனவே அவர்கள் இந்தியா வில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு ஆதரவு தரும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கூறியுள்ளதுபோல் உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர் கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பைத் தொடர்வது முடியாது என் றும், அதற்கான தகுதி அம்மாணவர் களுக்கு இல்லையென்றும் முரண்பட்ட கருத்துகள் எழுப்பப்படுகின்றன. இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத் துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்ட போது, "நீட் தேர்வில் தேர்வு பெற்ற பிறகுதான் மருத்துவம் பயிலச் சென்றிருக்கிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்ல முடியாது. அதனால் இம்மாணவர்களின் தகுதி குறித்து குறைகூறுவது தவறு. மத்திய அரசு நினைத்தால் உக்ரைனில் படித்து, போர் காரணமாக படிப்பை விட்டு விட்டு இந்தியா திரும்பியுள்ள அனைத்து மருத்துவப்படிப்பு மாணவர் களுக்கும் படிப்பை இந்தியாவில் தொடர வாய்ப்பளிக்க முடியும். இந்தியாவில் கிட்டத்தட்ட 60 டீம்டு யுனிவர்சிட்டியும் 250க்கு மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இவை அனைத்திலும் பகிர்ந்து வாய்ப்பளித்தாலே அனைவரும் படிப்பைத் தொடர இயலும்.

அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசாங்கம் நிர்ணயிப்பதோடு அதனை ஏற்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள கட்டணத்தைக் கட்டும் நிதி வசதி இல்லாமல் தான் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். குறைந்தபட்சம் உக்ரைனி லிருக்கும் கட்டணத்துக்கு நிகராகவோ அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ நிர்ணயிக்கலாம். இந்த கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து ஏற்பதாக இருந்தாலும் ஏற்கலாம். போர்ச்சூழல் காரணமாகத் திரும்பி வந்திருப்பதால், ஏற்கனவே கட்டணம் முழுமையாகச் செலுத்தியவர்கள் திரும்பவும் செலுத்துவதோ, கூடுதலாகச் செலுத்துவதோ கடினமாக இருக்கலாம். கட்டணத்தை நிர்ணயம் செய்யாமல் இந்தியாவில் கல்வி பயில மட்டும் வாய்ப்பளிப்பதும் மாணவர்களின் பெற்றோருக்கு சுமையாகவே இருக்கும்.

இதில் இன்னொரு வாய்ப்பாக, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நாடு திரும்பியுள்ள இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே தங்கள் நாட்டில் படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப் பளித்தாலும் நல்ல முடிவாக இருக்கும். இதுகுறித்து இந்திய அரசுதான் ரஷ்யாவுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். அல்லது, ஜார்ஜியா, போலந்து, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் கல்வியைத் தொடர வாய்ப்பினைப் பெறலாம். இதற்குத் தேவை யான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு தான் கொண்டுவர வேண்டும். அதேபோல், உக்ரைனிலிருந்து திரும்பியுள்ள மாண வர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை உக்ரைனிலிருந்து பெறமுடியாத சூழல் இருப்பதால், சான்றிதழ் நகல்களை மட்டுமே பெற்றுக்கொண்டு இடமளிக்கலாம். இங்கே படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கான அங்கீ காரத்தையும் மத்திய அரசே செய்துதர வேண்டும்'' என்றார்.

உலகமயமாக்கப்பட்டுள்ள சூழலில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பணி செய்வதுபோல, கல்வி கற்கவும் பல நாடுகளுக்குச் செல்வது தவிர்க்கமுடியாதது தான். இப்படியான சூழலுக்கு யார் காரணம் என்ற விவாதத்துக்குள் செல்வதைவிட, சிக்கலைத் தீர்ப்பதில் மாநில அரசுகளோடு கரம்கோர்த்து, மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

nkn120322
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe