திருவெறும்பூர் அருகேயுள்ள பெரிய சூரியூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 15-ஆம் தேதி தமிழக துணைமுதல்வர் திறந்து வைத்தார். 

Advertisment

திருவெறும்பூர் அருகேயுள்ள பெரியசூரியூரில் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோவில் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

Advertisment

இந்த ஜல்லிக்கட்டு விழா நடத்து வதற்கு வாடிவாசல், கேலரி அமைப் பதற்கு பெரிய அளவில் செலவாவதால் ஒரு நிரந்தரமான வாடிவாசல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரியுடன் கூடிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்துத் தரவேண்டுமென தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் -ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டது.

மாட்டுப் பொங்கலன்று வழக்கம் போல் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தவேண்டும் என்பதற்காக புதிதாகக் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை பொங்கலன்று தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Advertisment

jalikattu1

விழாவில் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “"துணைமுதல்வரிடம், சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கவேண்டும் எனக் கூறினேன். அவர் தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. இன்னும் 40 நாட்களில் திராவிடர் மாடல் 2.0 ஆரம்பம். அதற்கு நீங்கள் ஆதரவளிக்கவேண்டும்''’எனக் கூறியதோடு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள காங்கேயம் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசாகக் கொடுத்தார். 

இந்த விழாவுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமைவகித்தார்.  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் எம்.பி., திருச்சி சிவா, எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, அப்துல்சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக துணைமுதல்வர் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்துவைத்து, கோவில் காளைகளைத் திறந்து விட்டுப் பேசும்போது, “"திராவிட மாடல் தமிழக முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானத்தைத் திறந்துவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு வந்துள்ள அனைவ ருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். தமிழர்களின் வீர விளை யாட்டாக உள்ள ஜல்லிக்கட்டுக்கு பேர்போன சூரியூரில் பொங்கல் திருநாளில் மைதானத்தை திறந்துவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சிக்குப் பெருமை மலைக்கோட்டை, காவிரி ஆறு என்றால் சூரியூர் ஜல்லிக்கட்டு தமிழக அளவில் பெருமைசேர்ப்பதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் முன்பு ஊருக்குள் நடந்தது, மந்தையில் நடந்தது, குளத்தில் நடந்தது, தற்பொழுது நிரந்தர அரங்கத்தில் நடக்கவுள்ளது. இந்த விளையாட்டு மைதானம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 10 மாதத்தில் பணிமுடிந்து போட்டிக்கு தயாராகியுள்ளது. இந்த மைதானத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்பதற்கு சிறு உதாரணம் இது. 

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்த பகுதியில் 150 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரிங் ரோடு பணி தற்பொழுது முடிவடைந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு முயற்சியால் பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தமிழகமே போற்றுகிறது.

jalikattu2

நேருவும், மகேஷும் திருச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக சூரியூரில்தான் அரசு மைதானம் அமைத்துக் கொடுத்துள்ளது'' என்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடுகளை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பாக வழங்கும் கார் சாவியை, துணைமுதல்வர், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியிடம் வழங்கினார். அப்பொழுது ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் அடுத்த ஆண்டில் சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசு ஏற்று நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

விழாவில் திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பாலாஜி ஆர்.டி.ஓ. தவவளவன், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி உட்பட அரசு அதிகாரிகளும்... சூரியூர், அதன் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

ஜனவரி 16ஆம் தேதி வழக்கம்போல் 7 மணிக்கு பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.