ந்திய தேர்தல் ஆணையத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான மோதல் உச்சநீதிமன்றம் வரை வந்துள்ளது.

இந்த வருடம் தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் ஒன்று பீகார். இதையொட்டி பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டது இந்திய தேர்தல் ஆணையம். அதாவது, வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் கூறும் 11 விதமான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து தாங்கள் இந்தியர் என நிரூபிக்கவேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சர்ச்சை கிளம்பியது. தேர்தலை நெருக்கமாக வைத்துக்கொண்டு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தங்களை திடீரென மேற்கொள்வது ஏனென, கேள்விகளை எழுப்பினர். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ், “தேர்தல் ஆணையத்தின் தற்போதைய முயற்சி நடைமுறை சாத்தியமற்றது, ஜனநாயகத்துக்கு எதிரானது. 8 கோடி வாக்காளர்களை 25 நாட்களில் சரிபார்ப்பது எப்படி சாத்தியம்? பீகாரின் 4 கோடி வாக்காளர்கள் பீகாருக்கு வெளியே பிற மாநிலங்களில் வேலைபார்க்கிறார்கள். அவர்கள் இந்த 25 நாட்களுக்குள் வந்து சான்றிதழ்களை அளித்து தகுதியானவர்கள் என எப்படி உறுதிப்படுத்த முடியும்?. தவிரவும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுப்பினர் அட்டை போன்றவற்றை ஆதாரங் களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது தேர்தல் ஆணையம்” எனக் குற்றம்சாட்டி இந்தியா கூட்டணியிலுள்ள 11 கட்சியின் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

Advertisment

அதேபோல ஜனநாயகச் சீர்திருத்தங் களுக்கான கூட்டமைப்பு தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. “இந்த முடிவு தவறான நேரத்தில், குறைந்தபட்ச கால அவகாசமளித்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நிர்ணயித்துள்ள கால கட்டத்தில் இடம் பெயர்ந்து வேலைபார்க்கும் தொழிலாளர்கள், முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்கள் உரிய நேரத்தில் சான்றிதழைத் தரமுடியாமல் போய்,  வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடுவார்கள். இது சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கு எதிரானதாகும்” எனத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் பீகார் நாளிதழொன்றில் தேவையான சான்றிதழ் இல்லா விட்டாலும் கணக்கீட்டுப் படிவத்தை மட்டும் நிரப்பி பூத்லெவல் ஆபீசரிடம் கொடுக்கும்படி செய்தி வெளியிட்டது. இதையடுத்து இது எதிர்க்கட்சிகளின் வெற்றி என சமூக ஊடகங்களில் செய்தி  வெளியாக, நாங்கள் குறிப்பிட்ட தேதியில் இல்லாவிட்டாலும் சற்று தாமதமாகவாவது தேர்தல் ஆணையம் கேட்கும் சான்றிதழ்களைத் தந்தாகவேண்டும் என ஆணையர் பல்டியடித்தார்.

இதையடுத்து பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணை யத்தின் தடுமாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில்,  முதலில் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தது.

ec1

தேர்தல் ஆணையத்தின், நாளிதழ் விளம்பரத்தில் இருக்கிறது சூட்சுமம் என்கிறார்கள். அதாவது படிவத்தை மட்டும் நிரப்பிக் கொடுத்துவிட்டு, பின்னால் சான்றிதழ்களைக் கொடுக்கலாம் எனச் சொல்வதால் பெரும்பாலானவர்கள் படிவத்தை நிரப்பிக்கொடுத்துவிடுவார்கள். இதுவரை தேர்தல் ஆணையம் 8 கோடி வாக்காளர்களில் 21.5 சதவிகித வாக்காளர்களின் விவரங்களையே சேகரித்துள்ளது. அந்த 21.5 சத வாக்காளர்களில் 7.25 சத வாக்காளர்களின் விவரங்களை மட்டுமே கணினியில் ஏற்றி தேர்தல் ஆணையத்தின் மத்திய போர்டலுக்கு மாற்றியுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பலாம் என்பதால், வெறுமனே படிவத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அதையும் சதவிகிதக் கணக்கில் சேர்த்து 60 சதவிகிதம் பேர் பதிவுசெய்யப்பட்டுவிட்டனர், 70 சதம் பேர் பதிவுசெய்துவிட்டனர் என உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துவிட்டு, வாக்காளர்களிடம் நாங்கள் கேட்கும் சான்றிதழ் கொடுத்தால்தான் பட்டியலில் பெயர் என வாக்காளர், நீதிமன்றம் என இரு தரப்பையும் சமாளிப்பது ஆணையத்தின் திட்டம் என்கின்றனர் ஒருதரப்பினர்.

இரண்டாவதாக, இப்படி வெறுமனே படிவம் மட்டும் அளிக்கும் வாக்காளர்களின் சதவிகிதத்தைக் கணக்கிட்டு, இத்தனை சதவிகிதம் பேர் சான்றிதழ்கள் அளிக்கவில்லை. இதில் எத்தனை சதவிகிதம் பேர் சந்தேகத்துக்குரிய அயல்நாட்டைச் சேர்ந்தவர்களோ என நீதிமன்றத்தில் சந்தேகமெழுப்பி, அதன்மூலம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்பெற முயலலாம் என மற்றொரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழக்கை கையிலெடுத்து, "குடியுரிமையை நிரூபிக்கக் கோருவது தேர்தல் ஆணையத்தின் பணியல்ல'…வெறும் 30 நாள் அவ காசத்தில் இந்தப் பணிகளை எப்படி முடிக்கமுடியும்? இந்தப் பணிகளை தேர்தல் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டியதுதானே என சரமாரியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கேள்வியெழுப்பி யுள்ளது. அத்துடன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு தடைவிதிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், ஆதார், ரேஷன், வாக்காளர் அட் டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.