Advertisment

ராங்கால் உச்சநீதிமன்ற குட்டு! பணிந்த கவர்னர்! ஆர்.கே.சுரேஷ் சொன்ன சீக்ரெட்! அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள்!

ff

"ஹலோ தலைவரே, சண்டைக் கோழியாக தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது தன் நிலையில் இருந்து சரசரவென இறங்கி வந்திருக்கிறார்.''”

Advertisment

"ஆமாம்பா, அவர் ஆட்டத்தை எல்லாம் பார்த்து நீதித்துறையே, எரிச்சலாகி இருக்குதே?''”

Advertisment

governor

"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசோடு தொடர்ந்து ஃபைட் சீனை அரங்கேற்றி வந்த கவர்னர் ரவி, சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானங்களை எல்லாம் கிடப்பிலே போட்டுவந்தார். இதை எதிர்த்து பலவிதமாய்ப் போராடிய தமிழக அரசு, கடைசியாக உச்ச நீதிமன்றத்திடம் முறை யிட, நீதிமன்றம் கவர்னர் மீது எரிச்சல் பார்வையை வீசியது. அந்த நிலையிலும் தமிழக அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய தீர் மானங்களையும் ஏற்காத கவர்னர், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட் டார். இதனால் கொதித்துப் போன தமிழக அரசு, கவர்னரின் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில், ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, கடும் விமர்சன வாதங்களை வைக்கத் தயாரானது. இதற்கிடையே, கவர்னரின் போக்கைக் கண்டித்த உச்சநீதிமன்றம், "கவர்னரும் தமிழக முதல்வரும் மனம்விட்டுப் பேசி சுமூகமுடிவை எடுக்கட்டும்'’ என்று எச்சரிக்கும் குரலில் அறிவுறுத்தியது. நெருக்கடியைப் புரிந்துகொண்ட கவர்னர், தன் நிலையில் இருந்து சட்டென்று இறங்கி வந்து, முதல்வர் ஸ்டாலினுடன் கலந்துரையாட அவருக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்பதாக அரசு சார்பிலும் தற்போது சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.''”

"திறமையான செயல்பாடுகள் அவரை எல் லோர் மனதிலும் உயர்த்தும் என்பதை, அமைச் சர் உதயநிதியிடம் பார்க்க முடிகிறதே?’''’

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் உதயநிதி, கட்சியிலும் ஆட்சியிலும் சில பொறுப்புகளைத் தாமாக ஏற்றுக் கொண்டு சாதுர்யமாகவும் திறம் படவும் அதைக் கவனித்து, முதல்வரின் சுமையில் ஒரு பகுதியைக் குறைத்திருக் கிறாராம். மேலும் மழை வெள்ளத்தின் போது, இரவுபகல் பாராமல் அவர் ஆற்றிய நிவாரணக் களப்பணிகளைப் பார்த்து முதல்வரே மகிழ்ந்துபோய், அவர் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அவர் பரிந்துரைத்ததன்

"ஹலோ தலைவரே, சண்டைக் கோழியாக தமிழக அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது தன் நிலையில் இருந்து சரசரவென இறங்கி வந்திருக்கிறார்.''”

Advertisment

"ஆமாம்பா, அவர் ஆட்டத்தை எல்லாம் பார்த்து நீதித்துறையே, எரிச்சலாகி இருக்குதே?''”

Advertisment

governor

"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசோடு தொடர்ந்து ஃபைட் சீனை அரங்கேற்றி வந்த கவர்னர் ரவி, சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானங்களை எல்லாம் கிடப்பிலே போட்டுவந்தார். இதை எதிர்த்து பலவிதமாய்ப் போராடிய தமிழக அரசு, கடைசியாக உச்ச நீதிமன்றத்திடம் முறை யிட, நீதிமன்றம் கவர்னர் மீது எரிச்சல் பார்வையை வீசியது. அந்த நிலையிலும் தமிழக அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய தீர் மானங்களையும் ஏற்காத கவர்னர், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட் டார். இதனால் கொதித்துப் போன தமிழக அரசு, கவர்னரின் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில், ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, கடும் விமர்சன வாதங்களை வைக்கத் தயாரானது. இதற்கிடையே, கவர்னரின் போக்கைக் கண்டித்த உச்சநீதிமன்றம், "கவர்னரும் தமிழக முதல்வரும் மனம்விட்டுப் பேசி சுமூகமுடிவை எடுக்கட்டும்'’ என்று எச்சரிக்கும் குரலில் அறிவுறுத்தியது. நெருக்கடியைப் புரிந்துகொண்ட கவர்னர், தன் நிலையில் இருந்து சட்டென்று இறங்கி வந்து, முதல்வர் ஸ்டாலினுடன் கலந்துரையாட அவருக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்பதாக அரசு சார்பிலும் தற்போது சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.''”

"திறமையான செயல்பாடுகள் அவரை எல் லோர் மனதிலும் உயர்த்தும் என்பதை, அமைச் சர் உதயநிதியிடம் பார்க்க முடிகிறதே?’''’

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் உதயநிதி, கட்சியிலும் ஆட்சியிலும் சில பொறுப்புகளைத் தாமாக ஏற்றுக் கொண்டு சாதுர்யமாகவும் திறம் படவும் அதைக் கவனித்து, முதல்வரின் சுமையில் ஒரு பகுதியைக் குறைத்திருக் கிறாராம். மேலும் மழை வெள்ளத்தின் போது, இரவுபகல் பாராமல் அவர் ஆற்றிய நிவாரணக் களப்பணிகளைப் பார்த்து முதல்வரே மகிழ்ந்துபோய், அவர் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாராம். அவர் பரிந்துரைத்ததன் பேரில்தான், இப்போதைய நிதிச்சுமைக்கு இடையிலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக 6 ஆயிரம் வீதம் முதல்வர் அறிவித்தார் என்கிறார்கள் கோட்டைத் தரப்பினர். இதேபோல் சென்னை கமிஷனராக இருக்கும் சந்தீப்ராய் ரத்தோருக்கு பதில், மற்றொரு அதிகாரியை அமரவைக்கும் முயற்சி, சில அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதாம். அதற்காக ரத்தோர் மீது பல்வேறு புகார்களையும் கிளப்பினார்களாம். இதையும் கண்டுபிடித்து, முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று, ரத்தோரின் சேவை தேவையறிந்து, அதே பதவியில் தொடரச் செய்திருக்கிறாராம் உதயநிதி.''”

rr

"நிவாரண நிதி தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தவும் அமைச்சர் உதயநிதி, விரைவில் டெல்லி போகலாம்ன்னு சொல்லப் படுதே?''”

"தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயரதிகாரிகள் சகிதம் சந்தித்த முதல்வர் ஸ்டா லின், அவருடன் விவாதித்தார். அப்போது ஒன்றிய அரசு முதற்கட்டமாக ஒதுக்கிய நிவாரண நிதி போதாது என்று விளக்கினார். அதைக்கேட்ட ராஜ்நாத்சிங், தமிழ்நாட்டை நாங்கள் கைவிட மாட்டோம் என்று உறுதி தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட, மத்தியக் குழுவும் வந்து, ரிப்போர்ட்டுக்கான தரவுகளுடன் டெல்லி சென்றிருக்கிறது. இந்த சூழலில் தமிழகம் கோரியுள்ள முழு நிவாரணத் தொகையையும் ஒதுக்கும்படி, ஒன்றிய அரசை வலியுறுத்த, அமைச்சர் உதயநிதியை டெல்லிக்கு அனுப்பி வைக்கலாம் என்று இங்குள்ள சீனியர் அதிகாரிகள் முதல் வரிடம் வலியுறுத்தி இருக் கிறார்கள். முதல்வரும் இது குறித்து ஆலோசிக்கிறாராம். எனவே விரைவில் உதயநிதி டெல்லி செல்வார் என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"தி.மு.க. இளைஞரணி மாநாடு மீண்டும் தள்ளிவைக்கப்படலாம் என்கிறார் களே?''”

"தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்த மாதம் 17ஆம் தேதி சேலத்தில் நடக்க இருந்தது. மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், நிவாரணப் பணிகளில் உதயநிதி தீவிரமாகிவிட்டார். இதனால் இந்த மாநாட்டை இம்மாதம் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். தற்போது, இந்த மாநாட்டுத் தேதியும் தள்ளிப்போகலாம் என்கிறார்கள் இளைஞரணியினர். காரணம், 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் திருநாள் வருகிறது. இதை 24ஆம் தேதி நள்ளிரவில் இருந்தே கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். இதனால் இந்த மாநாட்டில் பங்கேற்பது தி.மு.க.வில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு சங்கடமாக இருக்கலாம் என்பதால், இந்தத் தேதியும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.''”

"ஆருத்ரா மோசடி விவகாரத்தில் சிக்கியிருக்கும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் விவகாரத்தில், பல்வேறு சீக்ரெட் தகவல்கள் கசியுதே?''”

rr

"ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் சிக்கி அரபுதேசம் ஒன்றில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், போலீஸ் நெருக்கிய நெருக்கில் தமிழகம் திரும்பி, விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருப்ப தால், காவல்துறை எதிர்பார்க்கும் சிலர் பற்றிய தகவல்களைச் சொல்லமறுத்து அவர் அடம்பிடிக்கிறாராம். அவர், பா.ஜ.க. தலைவர் களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டி, ஆருத்ரா இயக்குநரான ரூசோவிடம் இருந்து 13 கோடி ரூபாய் கமிஷன் வாங் கியதாகத்தான் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் அவர், முன்னர் கொடுத்த வாக்குமூலத்தில், மொத்தம் 20 கோடி ரூபாயை ஆருத்ரா தரப்பிடம் இருந்து வாங்கியதாகச் சொல்லியிருக்கிறாராம். மீதமுள்ள 7 கோடி ரூபாயை ஏன் கணக்கில் சேர்க்கவில்லை என்று விசாரித்தபோது, அதை செல்வாக் கோடு இருக்கும் ஆசிர்வாதமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியும், உதயமான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், புகழ்பெற்ற மால் ஒன்றின் பி.ஆர்.ஓ. மூலம் பெற்றுக் கொண்டதாக ஆர்.கே.சுரேஷ் சொன்னதால், அந்தத் தொகையை அவர் களால் கணக்கில் காட்ட முடியவில்லையாம்.''”

"பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் அவரது வலதுகரமாக இருந்த அமர்பிரசாத்துக்கும் இடையே உரசல் அதிகரித்திருக்கிறதே?''”

"பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும், அக்கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான அமர்பிரசாத் ரெட்டிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது. அண்ணா மலையின் சில பலவீனங்களை வைத்து, அவரை அமர்பிரசாத் மிரட்டியதால்தான், இவர்களுக்கிடையில் முட்டிக்கொண்டது என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர். பா.ஜ.க.வில் தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பி.எல்.சந்தோஷ் கொடுக்கும் செல்லத்தால்தான் அமர் ஆட்டம் போடுவதாக நினைக்கும் அண்ணாமலை, "நீ என் முகத்திலேயே முழிக்காதே' என்று அமரைத் துரத்தியடித்துவிட்டாராம். இதனால் தமிழகத்தில் யார் டீமில் இருந்துகொண்டு அரசியல் செய்வது என்று தனியாக பரிதவித்து வருகிறாராம் அமர்பிரசாத்.''”

"அ.தி.மு.க. மா.செ.க்கள் சிலர் மீது, எடப்பாடி கடும் அதிருப்தியில் இருக்கிறாரே?''”

"சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது, ஆளுங்கட்சித் தரப்பின் அளவிற்குத் தங்கள் கட்சியினர் களமிறங்கி, நிவாரணப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது எடப்பாடியின் கடுமையான ஆதங்கமாம். பாதிப்பிற்குள்ளான இந்தப் பகுதிகளுக்கு மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மூலம் 5 லாரிகளில் தலா 15 லட்ச ரூபாய் அளவிலான நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்து, கட்சித் தலைமையின் சார்பில் பொது மக்களுக்கு விநியோகிக்கும்படி, தங்கள் கட்சி மா.செ.க் களுக்கு அவர் உத்தரவிட்டாராம். அதை சென்னையில் இருக்கும் மா.செ.க்களான ராஜேஷ், பாலகங்கா, ஆதிராஜாராம் ஆகியோர் கூட சரிவர மக்களுக்கு விநியோகிப்பதில் ஆர்வம் காட்டவில்லையாம். இதில் கடுப்பான எடப்பாடி, அவர்களை அழைத்து, கடுமையாக டோஸ் விட்டாராம். கட்சியினரின் இந்தப்போக்கு அவருக்கு ஒருவித விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அவர் அருகில் இருக்கும் சீனியர்களே.''”

"முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தன் பெயரை மாற்றிக்கொண்டு இருக்கிறாரே?''”

dd

"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் செல்வாக்குப்பெற்ற அதிகாரியாக இருந்தவர் பீலா. இவரது கணவ ரான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸும் பரவலாக அறியப்பட்ட அதிகாரி ஆவார். இவ்வளவு நாளாகத் தன் கணவரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டிருந்தார் பீலா. இதற்கிடையே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்,இந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் புகாரைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது விழுப்புரம் நீதிமன்றம். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார் ராஜேஷ்தாஸ். இந்த நிலையில், இம்மாத இறுதியில் ஓய்வு பெறவிருந்த ராஜேஷ்தாஸை கட்டாய ஓய்வில் அனுப்பியிருக் கிறது தமிழக அரசு. இப்படிப்பட்ட பின்னணி யில்தான், ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு அளித்தால் அரசின் அத்தனை சலுகைகளும் அவருக்குக் கிடைக்கும். ஆனால், ஒழுங்கு நடவடிக்கை மூலம் நிரந்தர பணி நீக்கம் செய்தால், அவருக்கு எந்தச் சலுகையும் கிடைக்காது என, தன் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் பீலாராஜேஷ், தனது பெயரை பீலா வெங்கடேஷ் என மாற்றி நெருக்கடி கொடுக்கிறார் என முணுமுணுக் கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.''

"ரிசர்வ் வங்கியிடம் தமிழக அரசு புத்தம் புது சலவை 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கேட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, புதிய 500 ரூபாய் நோட்டுகளைக் கேட்டு ரிசர்வ் வங்கியை அணுகியுள்ளது தமிழக அரசு. அதாவது, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் வீதம் நிவாரண நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த வாரம், இந்த நிவாரண நிதியை, ரேசன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்க உள்ளனர். இந்த நிவாரண நிதி, குறைந்தபட்சம் 25 லட்சம் பேருக்கு கிடைக்கும் என்கிறது அரசுத் தரப்பு. இதற்காக, சுமார் 1,500 கோடி ரூபாய் தேவைப்படுகிறதாம். அந்த 1,500 கோடி ரூபாயையும், புத்தம் புது 500 ரூபாய் புதிய நோட்டுகளாக வழங்க முடியுமா? என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கிறதாம் தமிழக அரசு.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். ராஜ்பவனில் நடக்கும் பல திடுக்கிடும் சம்பவங்களையும், அரசியல் மூவ்களையும், நமது நக்கீரன் தொடர்ந்து எழுதி, வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ராஜ்பவனில் நடக்கும் ஏடாகூட சம்பவங்கள் ஊடகங்களுக்கு எப்படிப் போகிறது? இதற்கு காரணம் யார்? என்று தீவிரமாக விசாரித்து வருகிறாராம் கவர்னர் ரவி. இது குறித்து, ராஜ்பவனில் உள்ள முக்கிய அதிகாரிகளை மத்திய உளவுத்துறை மூலம் அவர் கண்காணிக்கவும் செய்கிறாராம். இந்தத் தகவலும் நமக்கு வந்துவிட்டது.''”

nkn161223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe