சொத்துக்களை காப்பாற்ற தி.மு.க .வுக்கு சப்போர்ட்! ஓ.பி.எஸ் மீது ர.ர.க்கள் அதிருப்தி!

ops

சில தினங்களுக்கு முன்பு தேனியில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திடீரென ஓ.பி.எஸ். விசிட் அடித்தது மட்டுமல்லாமல் அமைச்சரின் அருகிலேயே உட்கார்ந்து தடுப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வுப் பணிக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தபோதும் ஓ.பி.எஸ். வந்திருந்து கலந்துகொண்டதுடன், அமைச்சருடன் ஓ.பி.எஸ். தனியாக அரைமணி நேரத்துக்குமேல் ஆலோசித்து விட்டுச் சென்றார்.

ops

மாவட்டத்தில் உள்ள ர.ர.க்களோ, "கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். என்று சொல்லவே எங்களுக்கு அசிங்கமாக இருக்குதுங்க. 25 வருடமாக அ.தி.மு.க. கோட்டையாக இருந்த தேனி மாவட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணமே ஓ.பி.எஸ

சில தினங்களுக்கு முன்பு தேனியில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திடீரென ஓ.பி.எஸ். விசிட் அடித்தது மட்டுமல்லாமல் அமைச்சரின் அருகிலேயே உட்கார்ந்து தடுப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வுப் பணிக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தபோதும் ஓ.பி.எஸ். வந்திருந்து கலந்துகொண்டதுடன், அமைச்சருடன் ஓ.பி.எஸ். தனியாக அரைமணி நேரத்துக்குமேல் ஆலோசித்து விட்டுச் சென்றார்.

ops

மாவட்டத்தில் உள்ள ர.ர.க்களோ, "கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். என்று சொல்லவே எங்களுக்கு அசிங்கமாக இருக்குதுங்க. 25 வருடமாக அ.தி.மு.க. கோட்டையாக இருந்த தேனி மாவட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணமே ஓ.பி.எஸ்.-க்கு இல்லை. தான் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என்ற அடிப்படையில் தான் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் டம்மி வேட்பாளர்களை போட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் இருந்ததால்தான் தோல்வி ஏற்பட்டது.

4-ல் 3 தொகுதியில் வென்று தேனி மாவட்டம் தி.மு.க. கோட்டையாகிவிட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அமைச்சர், முதல்வர், துணை முதல்வராக இருந்தும்கூட கட்சிக்காரர்களுக்கு, எந்த ஒரு கோரிக்கையும், குறைகளையும் நிவர்த்தி செய்யவில்லை காண்ட் ராக்ட்காரர்களை மட்டுமே அருகே வைத்துக்கொண்டு தன் குடும்பத்தினரும் உறவினர்களும் சொத்துக் களை குவித்துக்கொண்டு அசுர வளர்ச்சி அடைந் தார்களே தவிர கட்சிக் காரர்கள் ஐந்துபைசா கூட நன்மை அடையவில்லை. கட்சியும் வளரவில்லை. கட்சியின் துணை ஒருங் கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான இ.பி.எஸ். தனது மாவட்டத்திற்கும் கொங்கு மண்டலத்தில் உள்ள கட்சிக்காரர்களின் குறைகளையும் கோரிக் கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்ததின் மூலம்தான் சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தனக்குன்னு ஒரு இமேஜை உருவாக்கியிருக் கிறார் ஆனால் ஓ.பி.எஸ். தென்மாவட்டங்களில் தனக்கென ஒரு இமேஜை இதுவரைக்கும் உரு வாக்கிக் கொள்ளவில்லை. ஓபிஎஸ் வேஸ்டுங்க.

தி.மு.க அமைச்சர்களான ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அருகில் உட்கார்ந்து கொண்டு இந்த அரசை பாராட்டிவருவதைக் கண்டு, அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை மனம் நொந்துபோய் வருகிறார்கள். அதையெல்லாம் ஓ.பி.எஸ். கண்டுகொள்வதில்லை. அதற்கு என்ன காரணம் என்றால்... கடந்த பத்து வருடங் களுக்கு முன்பு இதே தி.மு.க. ஆட்சியில் ஓ.பி.எஸ். மேல் சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டது. அதன்பின் அ.தி.மு.க. ஆட்சி வந்த உடனே அதை கிடப்பில் போட்டுவிட்டனர்.

ops

கடந்த வருடம் தற்போது முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் கவர்னரை சந்தித்து அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏற்கனவே கொடுத்திருக்கிறார். அதில் ஓ.பி.எஸ். பெயரும் இடம் பெற்நிருக்கிறது. அதுபோல் ஏற் கனவே சொத்துக் குவிப்பு வழக்கும் நிலுவையில் இருக் கிறது. அதையெல் லாம் இந்த அரசு கையில் எடுக்கப் போகிறது. ஓ.பி. எஸ்.ஸை எதிர்த்துப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனோ "தி.மு.க. ஆட்சி வந் தால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஓ.பி.எஸ். ஸின்அனைத்து சொத்துக்களையும் அரசுடைமையாக்கி, அதை மக்களுக்கு பிரித்து கொடுக்க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுப்பார்' என பகிரங்கமாகவே தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தார்.

அதையெல்லாம் ஓ.பி.எஸ். மனதில் வைத்துக்கொண்டுதான் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான், தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போட்டு வருகிறாரே தவிர கட்சிக்காக எல்லாம் இவர் விசுவாசமாக இல்லை. கட்சியை வளர்க்கவும் ஆர்வம் காட்ட வில்லை. கட்சிக்காரர்களும் இவர் பின்னாலே இல்லை வெறும் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டு தனி மனிதனாகத்தான் ஓ.பி.எஸ். இருந்துகொண்டு, தனது சொத்துக்களை காப் பாற்றிக்கொள்ள தி.மு.க. பக்கம் சாய்ந்துவரு கிறார் என்பதுதான் உண்மை'' என்று கூறினார்கள்

இந்த குற்றச்சாட்டுகளை பற்றி ஓ.பி.எஸ்..ஸிடம் விளக்கம் கேட்க செல்மூலம் பலமுறை தொடர்புகொண்டும் கூட லைனில் பிடிக்க முடியவில்லை.

nkn090621
இதையும் படியுங்கள்
Subscribe