286 நாட்கள்! வெறும் எட்டு நாட்கள் ஆய்வுப்பணிக்காக, போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் ஆறாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, திட்டமிட்ட படி திரும்ப முடியாமல் போனது. அதன்பின்னர், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மாதக் கணக்கில் இழுத்துக்கொண்டே செல்ல, அவர் எதை உட்கொண்டு அங்கே உயிர் வாழ்வார்? அதற்கான வசதிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறதா? அவர் நலமுடன் இருக்கிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. அதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் நலமாக இருக்கும் வீடியோ, ஒளிப்படங்களை நாசா வெளியிட்டது.

ss

இந்நிலையில், நாசா நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, சுனிதா வில்லி யம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை சர்வ தேச விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகர மாக அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, மார்ச் 12ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இம்முறை இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், மார்ச் 18ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவ ரோடு, நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் ஏறி அமர்ந்து கொள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்தி லிருந்து டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. அங்கி ருந்து மொத்தம் 17 மணி நேரப் பயணத்துக்கு பின்னர், மார்ச் 19, அதிகாலை 3.27 நிமிடத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் அருகிலுள்ள கடற்பரப்பில், கேப்சூல் வெற்றிகரமாக இறங்கியது. அந்நேரத்தில், கடலில் டால்பின்களும் உற்சாகமாகத் துள்ளி விளையாடியது, காண்பதற்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்வை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ததால், உலகெங்கும் கோடிக்கணக்கானோர் கண்டு சிலிர்த்தனர்.

Advertisment

சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விண்வெளி வீரர்களும் உடனடியாக நம்மைப்போல் புவியீர்ப்பு விசைக்கேற்ப கால்களை வலுவாக ஊன்றி நிற்பது சிரமம் என்பதால், அவர்களை ஸ்ட்ரச்சர் மூலமாக கேப்சூலிலிருந்து கீழிறக்கி, அழைத்துச்சென்றனர். அவர்களுக்கு மூச்சு விடுவதிலும், உடலின் இயக்கங்களிலும் சிக்கல்கள் எழ வாய்ப்பிருப்பதால் நால்வரும் தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உடல் நிலை சகஜமான பின்னரே அனைவரையும் போல் இயல்பாக நடமாட இயலும்.

விண்வெளியில் தங்கியிருந்த நாட்களில், தனது அன்றாட செயல்பாடுகளின் ஆச்சர்யங் களை நாசா இணையதளத்தின் வீடியோக்களின் மூலம் அனைவரோடும் பகிர்ந்துகொள்வார் சுனிதா வில்லியம்ஸ். 0 டிகிரி புவியீர்ப்பு சூழலில், அங்கே படுத்துத் தூங்குவதற்கென இருக்கும் பிரத்யேக ஸ்லீப்பிங் பேக்கினுள் எப்படி நுழைந்து படுத்துக்கொள்வது என்பதை விவரித் திருக்கிறார். அங்கேயே கணினி, புத்தகங்கள், பொம்மைகள் எனச் சுற்றிலும் இணைக்கப் பட்டிருக்கும். பூமியில், கட்டிலில் படுத்திருப்பது போன்ற உணர்வைத் தராதென்பதை விளக்கி யிருந்தார். அதேபோல் காலையில் எழுந்து பல் துலக்குவது, கழிவறையைப் பயன்படுத்துவது, உணவு உட்கொள்ளும் முறை என ஒவ்வொரு சந்தேகங்களையும் செய்முறையாகவே விளக்கியிருந்தார்.

சுனிதா வில்லியம்ஸுக்கு இது மூன்றாவது விண்வெளிப் பயணமாகும். அவரது முதல் பயணத்தில் மொத்தம் 194 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். அதற்கடுத்த பயணத்தில் 127 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார். தற்போது வெறும் எட்டு நாட்கள் மட்டுமே சென்றுவர இருந்தவர், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேல் அங்கே தங்கியிருந்து திரும்பியிருக்கிறார். இதுவும் ஒரு சாதனையே!

Advertisment

சுனிதா வில்லியம்ஸின் தந்தையான விஞ்ஞானி தீபக் பாண்டியா. இவரது பூர்வீக மான குஜராத்தின் ஜூலாசன் கிராமம், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியதையடுத்து திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. கிராமத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி யும், கோயில்களில் தீபம் ஏற்றியும், தேவாலயங் களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர் விண்வெளியிலிருந்து பத்திரமாகத் திரும்ப வேண்டுமென்று, "அகண்ட ஜியோத்' என்ற அணையா தீபத்தை அக்கிராம மக்கள் ஏற்றினார்கள். 9 மாதங்களாக அந்த தீபம் எரிந்துவந்த நிலையில், தற்போது தங்கள் மகிழ்ச்சியை பேரணியாகக் கொண்டாடிய பின், அந்த தீபத்தை அணைக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லி யம்ஸுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்!