திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூரைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகள் மீரா ஜாஸ்மின் எரித்துக்கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக, தற்கொலை என்று தெரியவந்துள்ளது. 

Advertisment

கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று, அவர் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதையடுத்து மீரா ஜாஸ்மினை தேடிவந்த பெற் றோர், அவரை கண்டுபிடித்துத் தருமாறு ஜி.எச். காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசாரின் தேடுதல் வேட்டையில், சமயபுரத்தை அடுத்த சனமங்கலம் காப்புக்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் உடலை போலீசார் மீட்டனர். முதலில், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினார்கள். 

Advertisment

இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, மீரா ஜாஸ்மின் தற்கொலை செய்துகொண்டதாக ஆதாரப்பூர்வமாக தற்போது தெரியவந்துள்ளது. காணாமல்போன அன்று மீரா ஜாஸ்மின் தனது வீட்டருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் ஒரு பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நடந்து சென்று புத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்று, பின்னர் பெரம்பலூர் பேருந்திலேறி சிறுகனூரில் பெட்ரோல் கேனுடன் இறங்கியுள்ளது சி.சி.டி.வி.யில் தெரியவந்தது.

மீரா ஜாஸ்மின் தன்னுடைய பள்ளித்தோழி வினோதினியின் சகோதரரான விஜய் என்பவரை காதலித்து வந்துள்ளார். மீரா ஜாஸ்மி னும், வினோதினியும், பெரம்பலூர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்றாகப் படித்துள்ளனர். வினோதினி மூலமாக விஜய் பழக்கமாக, 12ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி முடிக்கும்வரை அவர்கள் காதலித்து வந்தி ருக்கிறார்கள். மீரா ஜாஸ்மினுக்கும் விஜய்க்கும் இடையிலான காதலில் அவ்வப்போது சண்டை வருவதும், சமாதானம் வருவதுமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 9.12.2024 அன்று, மதியம் 2.30 மணிக்கு இருவரும் வாட்சப் வீடியோ காலில் சண்டையிட்டபடியே இருக்கையில், திடீரென மீரா ஜாஸ்மின் பார்க்கும்போதே விஜய் கோபத்தோடு தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். 

Advertisment

வாட்ஸ்ஆப் வீடியோ காலில் இதைப் பார்த்ததிலிருந்தே தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான மீரா, விஜய் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், விஜய் உயிரோடிருக்கும் உணர்வோடு அவரது செல்போனுக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பியபடியே இருந்திருக்கிறார். அதற்காகவே விஜய்யின் செல்போனை தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்யும்படி விஜய்யின் அப்பாவிடம் கூறியிருக் கிறார். இப்படியான சூழலில், சம்பவ தினத்தன்று, விஜய்யுடன் பலமுறை தனிமையில் சந்தித்துப் பேசிய சன்மங்கலம் பகுதியிலுள்ள கருப்பசாமி கோவிலுக்கு பெட்ரோல் கேனோடு சென்றவர், தன்மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந் தது. கிட்டத்தட்ட 20 சி.சி.டி.வி. ஆதாரங்களின் மூலமாக இதனை காவல்துறை கண்டறிந்தது. கொலை எனக் கூறப்பட்டு, தற்போது தற்கொலை என்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.