சர்க்கரை ஊழல்! -சர்ச்சையில் சேலம் கூட்டுறவு ஆலை !

999

நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சர்க்கரை விற்பனையில் 19 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நிரந்தர ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என 450 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. ஒரு லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தினசரி 2500 டன் கரும்பு அரவைக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது.

இந்த ஆலையில் பணியாற்றிவரும் அனைத்துப்பிரிவு பணி யாளர்களுக்கும் மாதந்தோறும் 10 கிலோ லெவி சர்க்கரை கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையை விட இங்கு குறைந்த விலைக்கு சர்க்கரை கிடைப்பதால் தொழிலாளர்களும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக, நக்கீரன் இதழ் நடத்திய கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ss

''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநராக மல்லிகா என்பவர் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்றார். இது, மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தி லான பணியிடம். ஆலையின் கணக்குப் பிரிவு எழுத

நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சர்க்கரை விற்பனையில் 19 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நிரந்தர ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என 450 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. ஒரு லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தினசரி 2500 டன் கரும்பு அரவைக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது.

இந்த ஆலையில் பணியாற்றிவரும் அனைத்துப்பிரிவு பணி யாளர்களுக்கும் மாதந்தோறும் 10 கிலோ லெவி சர்க்கரை கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையை விட இங்கு குறைந்த விலைக்கு சர்க்கரை கிடைப்பதால் தொழிலாளர்களும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக, நக்கீரன் இதழ் நடத்திய கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ss

''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநராக மல்லிகா என்பவர் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு பொறுப்பேற்றார். இது, மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தி லான பணியிடம். ஆலையின் கணக்குப் பிரிவு எழுத்தராக பணியாற்றிவரும் ராஜேஷ்குமார், நிர்வாக இயக்குநரின் தனி உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆலையில் பணியாற்றி வரும் அலுவலர்கள், சிப் பந்திகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு மாதம் 10 கிலோ 'லெவி' சர்க்கரை, கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. சர்க்கரை விற்பனை பொறுப்பையும் ராஜேஷ்குமாரே கவனித்து வந்தார். மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே இவ்வாறு சலுகை விலையில் சர்க்கரை விற்பனை செய்யப்படும்.

சர்க்கரை விற்பனை பணத்தை, மறுநாள் காலை 10.30 மணிக்குள், அலுவலக கணக்குப் பிரிவில் செலுத்திவிட வேண்டும். காலப் போக்கில், குறித்த நேரத்தில் பணத்தைச் செலுத்தாமல் ராஜேஷ்குமார் காலம் கடத்தி வந்தார். நிர்வாக இயக்குநர், அலுவல் சார்ந்த கூட்டங்களுக்காக சென்னைக்குச் செல்லும் போதும், உள்ளூரில் கரும்பு விவசாயிகளைச் சந்திக்கச் செல்லும்போதும் அதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்கான செலவுகளை ராஜேஷ்குமாரே நேரடியாகக் கையிலிருந்து கொடுத்துள்ளார். இந்த செலவுகள் திரும்பப் பெறக்கூடியது என்றாலும், கணக்கில் "அட்ஜஸ்ட்' செய்யப்படாமல் இருந்துள்ளது.

மேலும், நிர்வாக இயக்குநரின் தனிப்பட்ட தேவைக்கான பணத்தையும் இவரே கொடுத்துள்ளார். இவை எல்லாமே அவர் சர்க்கரை விற்பனைப் பணத்திலிருந்துதான் செலவு செய்திருக்கிறார். இந்நிலையில், இந்த ஆலைக்கு அண்மையில் இட மாறுதலில் வந்த அலுவலக மேலாளர் சீனிவாசன் என்பவர் தான், சர்க்கரை விற்பனைத் தொகையில் கையாடல் நடந் திருப்பதை கண்டுபிடித்தார். உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு சர்க்கரை விற்பனை நடந்திருக்கிறது என்றால், அலுவலகக் கணக்கில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனதாக வரவு வைத்திருப்பார். சந்தேகப் பட்டு கேட்கும்போதெல்லாம் அவை சர்க்கரை மூட்டைகளாக குடோனில் இருப்பில் உள்ளதாகவும், இதே ஆலையில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டக சாலைக்கு விற்பனை செய்ததாகவும் சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். முதல்கட்டமாக, 19 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது'' என்கிறார்கள் சர்க்கரை ஆலைப் பணியாளர்கள்.

ss

இன்னொரு முக்கிய அதிகாரியிடம் பேசியபோது, "அலுவலகப் பணி நேரத்தில் கூட நிர்வாக இயக்குநர் மல்லிகாவின் வீட்டு வேலைகளைச் செய்து கொடுக்கும் அளவுக்கு ராஜேஷ்குமார் மேலிடத்துடன் நெருக்கமாக இருந்தார். இதனால், சர்க்கரை ஊழல் நடந்திருப்பது தெரிந்து இருந்தும் யாரும் வாயே திறக்கவில்லை. இதை இப்படியே விட்டால் ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என அலுவலக மேலாளர் சீனிவாசன் கறார் காட்டியதால் வேறு வழியின்றி ராஜேஷ்குமார் மீது விசாரணை பாய்ந்துள்ளது.

விசாரணையில் ராஜேஷ் குமார், தான் தவறு செய் துள்ளதை ஒப்புக்கொண்டு கைப்பட எழுதிக் கொடுத் துள்ளார். தன்னுடைய தவறை மறைப்பதற்காக அவர் ஆலையில் 10 பேருக்கு பணம் கொடுத்த தாகவும் சொல்கிறார். ஆனால் யார் யார் என்று பெயர் சொல்லவில்லை. முதல்கட்டமாக அவரிடமிருந்து ஜனவரி 2ஆம் தேதி, 3 லட்சம் ரூபாய் ஆலை தரப்பில் வசூலிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து ஜனவரி 4ஆம் தேதி ராஜேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக இயக்குநர் உத்தர விட்டுள்ளார். முறைகேடு செய்த மொத்தப் பணத்தையும் அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது'' என்றார்.

இந்த பரபரப்புக்கு இடையே, நிர்வாக இயக்குநர் மல்லிகா திடீரென்று அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இடமாறுதல் செய்யப்பட்டு, ஜனவரி 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். நிர்வாக ரீதியாக மல்லிகா மீது பல புகார்கள் சென்றதாலும், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றிவிட்ட காரணத் தாலும் தான் அவர் இடமாறுதல் செய்யப் பட்டதாக இருவேறு பேச்சுக்கள் உலா வருகின் றன. இதையடுத்து, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் பணிகள், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் யோகவிஷ்ணுவுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, விவசாயிகள் முன்னேற்றக் கழகம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கக் கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நம்மிடம், ''கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய ஆலையாக இருந்த இந்த ஆலை, அதிகாரிகள் அலட்சியத்தாலும் நிர்வாகச் சீர்கேடுகளாலும் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. சர்க்கரை விற்பனையில் ஊழல் செய்ததாக பணியாளர் ராஜேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? உண்மையில் எந்தளவுக்கு முறைகேடு நடந்தது என்பது குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என புதிய நிர்வாக இயக்குநரிடம் வலியுறுத்தி உள்ளோம். கடந்த இரண்டு மாதமாக கரும்புப் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. இந்த ஆலையில் பழுதடைந்த, தரமற்ற இயந்திரங்களால் சர்க்கரை கட்டுமானம் டன்னுக்கு 6.8 சதவீதம் தான் கிடைக்கிறது. இதே கரும்பை தனியார் ஆலையில் சோதனை செய்தபோது, டன்னுக்கு 8.8 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் கிடைக்கிறது. தரமான இயந்திரங்களை நிறுவி னால் உற்பத்தியைப் பெருக்கலாம்'' என்றார்.

சர்க்கரை ஊழல் தொடர்பாக விளக்கம் பெற, முன்னாள் நிர்வாக இயக்குநர் மல்லிகாவை அலைபேசியில் தொடர்புகொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதேபோன்ற முறைகேடுகள், மற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe