சர்க்கரை ஆலை மோசடி! கொந்தளிப்பில் தொழிலாளர்கள், விவசாயிகள்!

ss

டலூர் மாவட்டம் பெண்ணாடம், எரை யூர் பகுதியில் 1965 வாக்கில் மருத பிள்ளை என்பவர் அருணா சர்க்கரை ஆலை ஒன்றை துவக் கினார். இதன்மூலம் 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கரும்பு பயிர் செய்து பலனடைந்தனர். 50 ஆண்டு காலம் பயனுள்ள வகையில் இயங்கிய இந்த ஆலை, மருத பிள்ளை மறைவுக் குப்பின் அவரது பிள்ளைகள் நிர்வாகத்தை சரி யாக நடத்தாத காரணத்தால், ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி தியாகராஜன் தரப்பினரிடம் விற்கப்பட்டது. அதன்பின், அம்பிகா சர்க்கரை ஆலை என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட்டது.

aa

2014 -15 ஆம் ஆண்டுகளிலிருந்து, கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 54 கோடி ரூபாய் பாக்கி வைத்தது தியாகராஜன் தரப்பு. மேலும், டிராக்டர் உரிமையாளர்களுக்கு 2 கோடி வாடகை பாக்கி, தொழிலாளர்களுக்கு 13 கோடி சம்பள பாக்கி, வங்கிகளில் சுமார் 80 கோடி கடன் ஆகியவற் றோடு, தியாகராஜனுக்கு சொந்தமான ஆரூரான் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கா

டலூர் மாவட்டம் பெண்ணாடம், எரை யூர் பகுதியில் 1965 வாக்கில் மருத பிள்ளை என்பவர் அருணா சர்க்கரை ஆலை ஒன்றை துவக் கினார். இதன்மூலம் 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கரும்பு பயிர் செய்து பலனடைந்தனர். 50 ஆண்டு காலம் பயனுள்ள வகையில் இயங்கிய இந்த ஆலை, மருத பிள்ளை மறைவுக் குப்பின் அவரது பிள்ளைகள் நிர்வாகத்தை சரி யாக நடத்தாத காரணத்தால், ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி தியாகராஜன் தரப்பினரிடம் விற்கப்பட்டது. அதன்பின், அம்பிகா சர்க்கரை ஆலை என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட்டது.

aa

2014 -15 ஆம் ஆண்டுகளிலிருந்து, கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 54 கோடி ரூபாய் பாக்கி வைத்தது தியாகராஜன் தரப்பு. மேலும், டிராக்டர் உரிமையாளர்களுக்கு 2 கோடி வாடகை பாக்கி, தொழிலாளர்களுக்கு 13 கோடி சம்பள பாக்கி, வங்கிகளில் சுமார் 80 கோடி கடன் ஆகியவற் றோடு, தியாகராஜனுக்கு சொந்தமான ஆரூரான் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கான சம்ப ளம், கரும்பு விவசாயிகளுக்கான தொகை என, சுமார் 200 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இவ்வளவையும் தராமல் இழுத்தடித்துவிட்டு, தனது ஆலை திவால் என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார் தியாகராஜன். இதையடுத்து விவசாயிகள் நீதிமன்றத்துக்குப் போக, தியாக ராஜனை கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில், அவரை காவல்துறை கைது செய்தது. உடனே பதறிப்போன ஆலை முதலாளிகள், தியாக ராஜனை ஜாமீனில் எடுத்தனர். இந்நிலையில், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான பணத்தைத் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலம், கட்டடங்கள் மற்றும் எறப்பாவூர். காணாதகண் டான் போன்ற இடங்களிலுள்ள நிலங்களையும் சேர்த்து மொத்தம் சுமார் 1000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம் விடப் பட்டது. அதில், தமிழகம், ஆந்திரா உட்பட பல இடங்களில் சர்க்கரை ஆலை மற்றும் சாராய பேக்டரி நடத்தும் எஸ்.என்.ஜே. என்ற நிறு வனம் 136 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளது. இந்த தொகை குறைவு என்பதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் ஏலத்துக்கு விடும்போது எஸ்.என்.ஜே. குரூப் தான் ஏலத்தை கைப்பற்றுமெனக் கூறப்படுகிறது. அப்படி கைப்பற்றப்பட்டால் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு 56% மட்டுமே தரப்படு மென எஸ்.என்.ஜே. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட தொழிலாளர்களும் விவசாயிகளும், எங்களால் ஏற்க முடியாதென் றும், முழுத்தொகையையும் கொடுத்த பின்பே புது நிர்வாகம் தொடங்க வேண்டுமென்றும், இல்லையென்றால் உள்ளே நுழைய விடமாட்டோமென்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், விவசாயி களும் இணைந்து மே 18ஆம் தேதி ஆலை வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ss

அதில் கலந்துகொண்ட விவசாயிகளிடம் பேசினோம். இறையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி செல்வமணி, "நாங்கள் மிகவும் சிரமப்பட்டு கரும்பு பயிரிட்டு அனுப்பியதில், 2 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ளனர். தற்போது பாதிப் பணம் தான் கொடுப்போமென எங்கள் தலையில் இடியை இறக்கி யுள்ளனர். முழுப்பணமும் கொடுக்கும் வரை விடமாட்டோம்'' என்றார். அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி, "எங்களுக்கு 65,000 ரூபாய் வரவேண்டும் அந்தப் பணத்திற்காக பல ஆண்டுகளாக அலைந்துதிரிந்து, அந்த வருத்தத்திலேயே எனது கணவர் இறந்து போனார். நான் இறப்பதற்குள்ளாவது எங்கள் பணம் கிடைக்குமா?'' என்று பரிதாபமாகக் கேட்கிறார்.

ss

தொழிலாளி கணேசன் என்பவரின் மனைவி மணமல்லி, "எனது கணவரின் சம்பள பாக்கி சுமார் 11 லட்சம். இதற்காக பல ஆண்டுகளாக அலைந்த என் கணவர், கடந்த ஆண்டு இறந்தே போனார். திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவிக்கிறேன். எங்கள் பணம் கிடைக்காவிட் டால் குடும்பத்தோடு தற்கொலை செய் வதைத்தவிர வேறு வழியில்லை'' என்றார். ஆலைத் தொழி லாளர்களுக்காகக் களப்பணியாற்றும் தொழிலாளி சுரேஷ், "ஆலை நிர்வாகம் எங்களுக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கி 12 கோடி. மேலும், தொழிலாளர்களுக்காக பிடித்தம் செய்யப்பட்ட இ.பி.எஃப். அனைத் தையும் விழுங்கிவிட்டது ஆலை நிர்வாகம். எனக்கு மட்டுமே சுமார் 13 லட்சம் வரவேண்டியுள்ளது. இருமுறை ஹார்ட் அட்டாக் வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ளேன். மருந்து வாங்கக்கூட வழியில் லாமல், தெம்பில்லாமல் இருக்கிறேன். என்போலவே பல தொழிலாளர்களும் சிக்கலில் இருக்கிறார்கள்'' என்றார்.

"பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் தவித்து வருகிறோம். ஆலையை ஏலத்தில் எடுக்கப் போகும் எஸ்.என்.ஜே. நிர்வாகம், விவசாயிகளும், தொழி லாளர்களும் தங்களுக்கு வரவேண்டிய பணம் குறித்து ஆன்லைன் மூலமாக நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டு மென்றும், அதை அனுப்பாதவர்களுக்கு பணம் கிடைக்காது என்றும் அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய மோசடியாகும்'' என்கிறார் ஐ.என்.டி.யூ.சி. இராமலிங்கம்.

nkn270523
இதையும் படியுங்கள்
Subscribe