டப்பாடி ஆட்சியின்போது கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டி. இவரிடம் டிரைவராக இருந்தவர்தான் கனகராஜ். இவருக்கு நெருக்கமாக இருந்த அனுபவ் ஜூவல்லரி ஓனர் அனுபவ் ரவி இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கனகராஜ் இறந்த அன்று, கடைசியாகத் தன்னிடம் பேசியதாக அனுபவ் ரவி சாட்சியம் அளித்துள்ளார். அந்த சாட்சியத்தை சயான் தரப்பினர் கோர்ட்டில் கேள்வி எழுப்பினர்.

dd

இரவு எட்டரை மணிவாக்கில் இறந்துபோன கனகராஜ் எப்படி -எத்தனை மணிக்கு அனுபவ் ரவிக்கு போன் செய்திருக்க முடியும்? என அவர்கள் குறுக்கு விசாரணையில் கேள்வி கேட்டார்கள். அனுபவ் ரவிக்கு மறுவிசாரணையின்போது போலீஸார் சம்மன் அனுப்பினார்கள். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை அனுபவ் ரவி சென்றபோதும், போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டால் கொடநாடு தொடர்புடைய ஐந்து பேரின் மர்ம மரணத்தை விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புதான் கொடநாடு கொலை வழக்கில் மறுவிசாரணையை வேகப்படுத்தியது.

Advertisment

ff

அனுபவ் ரவி, எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர். அத்துடன், ஆறுகுட்டி எம்.எல்.ஏ.வுக்கும் நெருக்கமானவர். அனுபவ் ரவி, ஆறுகுட்டி எம்.எல்.ஏ., கனகராஜ் ஆகிய மூவரும் சேர்ந்துதான் கொடநாடு கொள்ளையை நடத்த திட்டமிட்டார்கள் என்கிற சந்தேகம் போலீஸுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் விபத்தில் சிக்கி கோவை குப்புசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்கான பில்லை அசோக்குமார் என்பவருடன் சேர்ந்து கட்டினார் அனுபவ் ரவி. அப்போதைய நீலகிரி எஸ்.பி. முரளிரம்பாவின் ஏற்பாட்டில் அனுபவ் ரவி, அசோக்குமாருடன் சேர்ந்து சயானின் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். யார் இந்த அசோக்குமார் என விசாரித்தோம்....

அசோக்குமார் கோவையைச் சேர்ந்த ஒரு பில்டர். இவர், அரசுத் துறைகளில் கட்டிட வேலைகள் செய்துவருபவர். அசோக்குமார், கனகரஜுக்கு போயஸ் கார்டன் மூலம் அறிமுகமாகிறார்.

Advertisment

ffபோயஸ் கார்டனில் ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவரும் அசோக்குமாரும் உறவினர்கள் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி, அசோக்குமாருக்கு கனகராஜை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த சயானுக்கு அசோக்குமாரும் நண்பர் என்பதால், அசோக்குமார் மூலம் கனகராஜின் அறிமுகம் கிடைக்கிறது.

சயான் மீது வைத்த நம்பிக்கையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு விவசாய நிலத்தை சயான் பெயரில் பவர் வாங்கி பதிவு செய்தார் அசோக்குமார். இந்த விபரமும் போலீஸாரின் விசாரணைக்கு உள்ளாகி யிருக்கிறது. விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவச் சிகிச்சை முடிந்து வந்தவுடன் சயான், அந்த ஐந்து கோடி மதிப்புள்ள நிலத்தின் பவரை, அசோக்குமாருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். கொடநாடு வழக்கு வருவதற்கு முன்பு வரை ஓ.பி.எஸ். அணியில் இருந்த ஆறுகுட்டி, கொடநாடு வழக்கு வந்ததும் இ.பி.எஸ். அணிக்குddd மாறிவிட்டார். அனுபவ் ரவி (அ) + அசோக்குமார் (அ) + ஆறுகுட்டி (ஆ) ஆகியோருக்கு கனக ராஜுடனான தொடர்புகளை மறுபடியும் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கியிருக்கிறது காவல்துறை.

அத்துடன் முன்னாள் எஸ்.பி.யான முரளி ரம்பா, எப்படி அனுபவ் ரவிக்கும் ஆறுகுட்டிக்கும் உதவியாக இருந்தார், யார் சொல்லி இந்த வேலைகளைச் செய்தார் என தீவிரமாக போலீஸார் புலனாய்வு செய்து வருகிறார்கள்.

இந்த வழக்கில், கூடலூரில் சிக்கிய குற்றவாளிகளை விடுவிக்க முன்னாள் அமைச்சரும் நீலகிரி மாவட்ட செயலாளருமான மில்லரின் பெயர் சந்தேகிக்கப்படுகிறது. அவரது வீட்டுக்கு விசாரணைக்கு போலீஸார் சென்றதாக தகவல் பரவியது. கூடலூர் செக்போஸ்ட்டில் சிக்கிய குற்றவாளிகளை விடுவிக்க மில்லர், சஜீவனுடன் சேர்ந்து உதவினாரா என்கிற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது. ஆனால், அந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்த வர்கள்.

விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் புதுப்புது திருப்பங்களைச் சந்திக்கிறது கொடநாடு வழக்கு.

________________________________________

உள்நோக்கம் இல்லை!

"கொலையை மறைக்க கொட்டிக் கொடுத்த எடப்பாடி டீம் கொடநாடு வழக்கில் பெண்ணிடம் விசாரணை' என செப்.29-ஆக.01 தேதியிட்ட இதழில் வெளியான செய்திக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மல்லிகா நல்லுசாமியும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் புலனாய்வில் இருக்கும் வழக்கில் தன்னை உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுவதாக வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மல்லிகாவோ, கட்டுரையில் குறிப்பிட்டபடி, தான் வறுமையில் வாடவில்லை என்றும், கணவர் இறந்த பிறகு கிடைத்த இன்சூரன்ஸ் -பணிக்கொடை தொகையால் கடன் களை அடைத்து, நல்லபடியாக வாழ்வதாகத் தெரிவிப்பதுடன், தன் வாழ்க்கை சொகுசாக மாறிய தாக கட்டுரையில் எழுதியிருப்பதையும், உறவுமுறைகள் பற்றி எழுதி இருப்பதையும் கடுமையாக மறுக்கிறார். கொடநாடு விவகாரத்தில் நக்கீரனுக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை. இவ்வழக்கு குறித்து 2019 முதல் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகும் நிலையில், அவை குறித்த தொடர் புலனாய்வுகளை மட்டுமே நக்கீரன் வெளியிடுகிறது.

(-ஆர்)