Advertisment

கொல்லிமலையில் ஜெ.யின் ஆஸ்தான ஜோதிடர் திடீர் யாகம்!

jay-jothidar

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என கொல்லிமலையில் வில்லங்க வேள்வியை நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான பூபதி.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அன்பழகன் என அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருப்பவர் ஈரோடு பூபதி. அ.தி.மு.க.வுக்காக அவர் சொன்ன ஆருடங்கள் கடந்த காலங்களில் எந்தளவுக்குப் பலித்தன என்பதெல்லாம் வேறு கதை. ஆனால், இந்த முறை அவருக்கு நல்ல மவுசு.

Advertisment

h

அதனால், ஜோதிடர் பூபதியே, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் கொல்லிமலை யில் உள்ள வள்ளலார் குடிலில், 234 கலசங்க

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என கொல்லிமலையில் வில்லங்க வேள்வியை நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான பூபதி.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அன்பழகன் என அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருப்பவர் ஈரோடு பூபதி. அ.தி.மு.க.வுக்காக அவர் சொன்ன ஆருடங்கள் கடந்த காலங்களில் எந்தளவுக்குப் பலித்தன என்பதெல்லாம் வேறு கதை. ஆனால், இந்த முறை அவருக்கு நல்ல மவுசு.

Advertisment

h

அதனால், ஜோதிடர் பூபதியே, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் கொல்லிமலை யில் உள்ள வள்ளலார் குடிலில், 234 கலசங்களை வைத்து யாகம் நடத்தியிருக்கிறார். ஏப். 22ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாள்களாக யாகம் நடந்துள்ளது. அதுவும் ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரமான மகத்தில் யாகத்தைத் துவக்கியிருக்கிறார்கள் சிவனடியார்கள்.

இது தொடர்பாக ஜோதிடர் பூபதி ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார். அதில், ''அம்மா மறைவுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எல்லோரும் கடந்த 4 ஆண்டாக சிறப்பான ஆட்சியைத் தந்துள்ளனர். அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவதற்காக இந்த யாகத்தை நடத்துகிறோம். இதற்காக 2 தங்கக் குடங்கள் உள்பட 234 கலசங்களில் தலைக்காவிரி தீர்த்தம், கங்கை தீர்த்தம், திருக்கயிலாய தீர்த்தம், கொல்லிமலை தீர்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.சி. சம்பத் ஆணையிட்டதன் பேரில், இந்த யாகத்தை செய்கிறோம்,'' என்று கூறியிருந்தார்.

கொரோனா தொற்று அபாயத்தால் யாகத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் பூபதி மற்றும் சிவனடியார்களே கலந்து கொண்டனர். உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள் கூட ஆர்வம் காட்டவில்லை. ஒட்டுமொத்த கருத்துக்கணிப்புகளும் இந்த முறை ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் எனக் கட்டியம் கூறிவரும் நிலையில்... பூபதி ஜோதிடரின் திடீர் யாகம், அ.தி.மு.க. வட்டாரத்திலேயே பேசுபொருளாகியிருக்கிறது.

ga

""தேர்தல் முடிந்தபிறகு எதற்காக யாகம் நடத்த வேண்டும்'' என நாம் அமைச்சர் எம்.சி.சம்பத்தை தொடர்புகொண்டு கேட்டோம். ""ஜோதிடர் பூபதி தன்னிச்சையாக இந்த யாகத்தை நடத்தியிருக்கிறார். அவர் எனக்கு மட்டுமின்றி எல்லா அமைச்சர்களுக்கும் நன்கு தெரிந்தவர். அவர் பெரிய பக்திமான். எப்போதும் ஏதாவது பூஜைபண்ணிட்டு இருப்பாரு. நானாக அவரை யாகம் நடத்தச் சொல்லவில்லை. மேலிடத்தை கேட்காமல் நான் எப்படி யாகம் நடத்தச் சொல்ல முடியும் சார்? அவரே ஏதாவது பூஜைபண்ணிட்டு, அதன்பிறகு இந்த மாதிரி பூஜையெல்லாம் செய்தேன் என்பார். இதில் எதற்காக அவர், என் பெயரை பயன்படுத்தினார் எனத் தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்கிறேன்'' என்று சிரித்தபடியே மழுப்பினார்.

இதையடுத்து நாம் ஜோதிடர் பூபதியிடம் பேசினோம். ""தேர்தலே முடிந்த பிறகு அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் dஎன யாகம் நடத்துவது முரணாக இருக்கிறதே?'' எனக் கேட்டோம். ""சார்... நல்ல கேள்வி... நல்ல கேள்வி. அருமையாக கேட்டீங்க. காலையிலேருந்து நிறைய போன்கள் வந்தது. ஆனால் இந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை. நல்ல கேள்வி, அதாவதுங்க ஆன்மிகத்துல சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு இருக்கிறது. மக்கள் ஓட்டு போட்டுட்டாங்க. அது தமிழ்நாடு பூராவும் தெரியும். அதன்பிறகு ஏன் இந்த யாகம் நடத்துகிறோம் எனக் கேட்டீங்க. நல்ல கேள்விங்க.

இந்த யாகத்தை எந்த சுயநலமும் இல்லாமல் கொல்லிமலையில் நடத்துகிறோம். திருவாசகத்தை முன்னிறுத்தி நல்லாட்சி அமையணும்னு யாகம் நடத்துறோம். அமைச்சர் சம்பத் எனக்கு நல்ல நண்பருங்க. அவரு யாகம் நடத்தச் சொல்லலீங்க'' என்றாரே தவிர, கடைசிவரை நாம் கேட்ட கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை.

""அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதைக்கூட அமைச்சர் சம்பத் உள்ளிட்ட சிலரிடம் ரகசியமாகச் சொல்லியிருக்கிறேன். அது என்ன என்பதை மே 2-ம் தேதி நீங்களே தெரிந்து கொள்வீர்கள்'' என்றும் சீரியஸாகச் சொன்னார் ஜோதிடர் பூபதி.

"உண்மையில் தேர்தல் வெற்றிக்காகத்தான் யாகம் நடத்தப்பட்டதா அல்லது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கான விசேஷ பூஜைகளா?' என்ற பல்வேறு யூகங்களும் ர.ர.க்களிடம் எழுந்துள்ளது.

-இளையராஜா

nkn280421
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe