ம்ஸ்ட்ராங் கொலை விசாரணையின் போது, கமிஷனர் அருண், "ரவுடிகளுக்கு அவர்களுக்குப் புரியும் பாஷையிலேயே பதிலளிக்கப்படும்'' என்றார். அதையடுத்து திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில், செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 4.20 மணிக்கு காக்காத் தோப்பு பாலாஜி என்கவுன்டரில் பலியாகியுள்ளார். இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தில் 10.50 மணிக்கு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் மையங்கொண் டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை விளங்குகிறது. சென்னை கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தைக் காட்டிலும், வடசென்னை பகுதியிலே அதிக வருமானம் கிட்டுவதால் இங்கு ரவுடிகளுக்குப் பஞ்சமில்லை. அதனைச் சார்ந்து நடக்கும் கொலைகளுக்கும் பஞ்சமில்லை.

en

வருமானம் வரும் இடத்தில் யார் பெரியவர், யாருக்கு எந்த ஏரியா என்ற தகராறுகளுக்கும் பஞ்சமில்லாததால் ரவுடிகளுக்கு இடையிலான மோதல்களும், கொலைகளும் இங்கு அதிகம். வடசென்னையில் பல்வேறு வழக்குகளிலும், ரவுடிகளுக்கு இடை யிலான மோதல்களிலும் சம்பந்தப்பட்டவர் களில் காக்காதோப்பு பாலாஜியும் ஒருவர்.

Advertisment

இவர் மீது குண்டர் தடுப்பு, கொலை, கொலைமுயற்சி என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவர் தலைமறைவாக இருந்துவந்தார். சம்பவ தினத்தன்று ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்திருக்கிறார் பாலாஜி. கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலப் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்ட போலீசார், ஒரு கார் நிற்காமல் சென்றுள்ளதால் உஷாராகி, அதனைப் பின்தொடர்ந்து சென் றுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய மருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்புப் பகுதியில் உள்ளே புகுந்து அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளது அந்த கார்.

விடாமல் துரத்திவந்த போலீசார், காரை மடக்க முயல, உள்ளேயிருந்த பாலாஜி தன் னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசா ரைப் பார்த்து சுட ஆரம்பித்துள்ளார். வேறு வழியில்லாமல் தற்காப்புக்காக காவல் ஆய் வாளர் சரவணன் திருப்பிச் சுட்டதில் பாலாஜி யின் மார்பில் குண்டுபாய்ந்து, அருகாமையி லுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் இறந்துள்ளார். உடனடியாக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது.

ee

Advertisment

சென்னை காக்காதோப்பில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ரவுடிகள் மத்தியில் பிறந்த இடத்தின் பெயராலே அழைக்கப்பட்டு, பின் னால் அதுவே அடைமொழியாக அமைந்துள் ளது. கே.ஜி.எப். பட பாணியில் சிறுவயதிலேயே பெரும் தலைகள் எனப்படும் ரவுடிகளிடம் மோதி பிரச்சனை ஏற்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வலம்வந்துள்ளார். ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா தொடங்கி சதீஷ், பில்லா சுரேஷ், விஜயகுமார் என கொலைகள் மூலம் பரபரப்பாகப் பேசப்படும் அளவில் வளர்ந்தார்.

ரவுடி நாகேந்திரனை பக்கபல மாக வைத்துக்கொண்டு மேலும் வளரத்தொடங்கினார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாயினர். அதிகார பலம் இருந் தால் மட்டுமே நம் மால் நெடுநாள் பய ணிக்கமுடியும் என நினைத்த பாலாஜி, அ.தி. மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான வெற்றிவேலுக்கு பக்கபலமாக பல பணிகளைச் செய்துதந்து வழக்குகளிலிருந்து தன்னைத் தற்காத்துவந்துள்ளார். வெற்றிவேலுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நெருக்க மாக மாறியுள்ளார். சம்பவ செந்தில் அவருக்கு முக்கிய எதிரியாக இருந்துள்ளார். யார் பெரி யவர் என்கிற போட்டி இருவருமிக்குமிடையில் வெகுகாலமாக நடந்துவந்துள்ளது.

அந்தவகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ரவுடிகளான சி.டி.மணி, காக்காதோப்பு பாலாஜி ஆகியோர் காரில் சென்றபோது, தேனாம்பேட்டை அருகில் நாட்டு வெடி குண்டை அவர்களின் காரின் மீது சம்பவ செந்தில் வீசினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர்தப்பினர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி காரணமாக கடந்த சில வருடங்களாக நேரடி சம்பவத்திற்குள் நுழையாமல் ஸ்கெட்ச் மட்டும் போட்டு ஆட்களைத் தீர்த்துக்கட்டும் தொழிலை காக்காதோப்பு பாலாஜி செய்துவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கடைசி யாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் காவல்நிலையத்தில் ஆயுத தடைச் சட்டம் வழக்கில் காக்காதோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். பிறகு, ஜாமீனில் வெளியே வந்த காக்காதோப்பு பாலாஜி தொடர்ச்சியாக தலை மறைவாக இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ee

காக்காதோப்பு பாலாஜியை தீவிரமாகத் தேடிவந்த போலீசார், இன்று வாகனத் தணிக் கையின்போது எதிர்ப்பட்டு தப்பியோடிய போது, போலீசாருக்கும் அவருக்குமான மோத லில் பலியானார். புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் சென்னையில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இது.

கடந்த முறை ஆம்ஸ்ட்ராங் கொலைவழக் கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி திருவேங்க டத்தை என்கவுன்டர் செய்த அதே காவல் ஆய்வாளர் சரவணனால் என்கவுன்டர் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்கு வந்த பாலாஜி யின் தாயார் கண்மணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “"கடந்த 10 ஆண்டுகளாக என் மகன் எவ்வித குற்றச் சம்பவங்களிலும் ஈடு படாமல் இருந்துவந்த நிலையில், காவல்துறை யினர் வேண்டுமென்றே என் மகனை சுட்டுக் கொன்றுவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைவழக் கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சம்பவ செந்திலை பிடிக்கமுடியாமல் காவல்துறையினர் திணறிவந்தனர். அவரது மனைவியைக்கூட காவல்துறையினர் விசாரிக்க வில்லை. பாலாஜியின் நண்பர்கள் ஆறு பேரை, சம்பவ செந்தில் திட்டமிட்டுக் கொலை செய்தும், பாலாஜியை அவரால் கொல்லமுடியவில்லை. இதனால், காவல்துறையினரின் துணையோடு, எனது மகனை சுட்டுக் கொன்றுவிட்டார் சம்பவ செந்தில்''’என போலீசார் மீதும், சம்பவ செந்தில் மீதும் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

வேலூரில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, தினமும் நீதிமன்றம் சென்று கையொப்ப மிட்டு வந்த தனது மகனை, என்கவுண்டர் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில் திட்டமிட்டு சதிசெய்து போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாக அவர் வேதனையோடு குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து வடக்கு இணை ஆணையர் பர்வேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை. காலையில் வாகனத் தணிக்கையில் இருக்கும் போது, போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் துரத்தினர். குற்றவாளி காரிலிருந்து வெளியே வந்து ஓர் இடத்தில் பதுங்கிக்கொண்டு இரண்டு முறை போலீசாரை நோக்கி சுட்ட நிலையில் தற்காப்பிற் காகத் திருப்பிச் சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடை பெற்று முடியும்வரை உள்ளே இருந்தது காக்கா தோப்பு பாலாஜி என தெரியாது''’என்றார்.

இது ஒருபுறமிருக்க, காக்காதோப்பு பாலாஜிக்கு வேண்டியவர்களோ, "காக்கா தோப்பு பாலாஜியை முந்தையநாளே ஆந்திரா வில் வைத்து பிடித்துவிட்டனர் போலீசார். அவரை தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டுவந்து வைத்திருந்தனர். அவரை என்ன செய்யலாம் என ஆலோசித்த நிலையில், கமிஷனரின் உத்தரவின் பேரிலே என்கவுன் டரில் முடிக்க முடிவுசெய்தனர். அவரை என்கவுன்டரில் போட பலரும் தயங்கிய நிலையில், திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்த இன்ஸ்பெக்டர் சரவணனை வைத்தே கதையை முடித்திருக்கின்றனர்''” என்கிறார்கள்.

அடுத்தடுத்த என்கவுன்ட ரால், சென்னை ரவுடிகளில் பலரும், தங்கள் பெயரும் என்கவுன்டர் லிஸ்ட்டில் இருக்குமோ என்ற பீதியில் இருக்கின்றனர்.

-அ.அருண்பாண்டியன்

படங்கள்: ஸ்டாலின்