Advertisment

வாரிசு அரசியல்! கோஷ்டி மோதல்! -திருச்சி அ.தி.மு.க. மல்லுக்கட்டு!

bb

.தி.மு.க. படுதோல்வியடைந்த மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த படியாக திருச்சியும் அடக்கம். 9 தொகுதி களிலும் தோல்வி. அதற்குக் காரணம், வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்குள்ள உள்கட்சி யுத்தம்தான்.

Advertisment

vv

திருச்சி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்துவரும் நிலையில், அ.தி.மு.க.வினர் அதில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் உட்கட்சிக்குள் நடைபெற்ற உள்ளடி வேலைகள் என்பதால், பல நிர்வாகிகளை மாற்றவேண்டும் என்ற

.தி.மு.க. படுதோல்வியடைந்த மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்த படியாக திருச்சியும் அடக்கம். 9 தொகுதி களிலும் தோல்வி. அதற்குக் காரணம், வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்குள்ள உள்கட்சி யுத்தம்தான்.

Advertisment

vv

திருச்சி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்துவரும் நிலையில், அ.தி.மு.க.வினர் அதில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் உட்கட்சிக்குள் நடைபெற்ற உள்ளடி வேலைகள் என்பதால், பல நிர்வாகிகளை மாற்றவேண்டும் என்ற எண்ணம் எடப்பாடிக்கு எழுந்துள்ளது.

கடந்த ஆட்சியில் சுறுசுறுப்பாக இருந்த அமைச்சர்களில் பலர் தற்போது வெளியே வராமல் முடங்கி கிடப்பதால், கட்சி நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி நினைத்திருக்கும்போது, தற்போது கடும் போட்டி நிலவி வருவதால், மாநகர் மாவட்ட செயலாளரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

ff

சிக்கலை ஏற்படுத்துவதில் முத-டத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். வயது முதிர்வு ஒருபக்கம் இருந்தாலும், கடந்த தேர்தலில் சென்னையில் இருந்து வந்து திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் 50ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தொகுதிக்குள் செல்லும் இடமெல்லாம் பலத்த எதிர்ப்பை சந்தித்தார் வெல்லமண்டி.

தேர்தல் சமயத்தில்கூட கட்சிக்காரர் களிடம் நெருங்கிச் செல்லாததால், அவர் தோல்வியைச் சந்திக்க வேண்டும் என்று கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக இருந்ததால், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். எனவே தனக்குப் பிறகு தன்னுடைய அரசியல் வாரிசாக தன்னுடைய மகன் ஜவஹர் இருக்கவேண்டும் என்பது அவர் கணக்கு. அதனால் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துவிட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்தமுறை சட்டமன்றத் தேர்தலிலேயே ஜவகரை வேட்பாளராக்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்த நிலையில் அது நிறைவேறாததால், கடந்தமுறை திருச்சிக்கு வருகை தந்த வைத்திலிங்கத்தின் மூலம் மகனுக்கு எப்படியும் மாவட்ட செயலாளர் பதவியை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறார்.

vv

இதற்கிடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து, தேர்தலுக்கு முன்பு வெல்லமண்டி நடராஜன் மூலம் அ.தி.மு.க.வில் இணைந்து அவருடனே இருந்துவரும் திருச்சி ஜெ.சீனிவாசனுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் மற்றொரு கூட்டம் அதனைத் தடுக்க முயற்சி செய்து வருகிறது. அதிலும், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு எப்படி பதவி கொடுக்கலாம் என்று மல்லுக்கட்ட ஆரம் பித்துள்ளனர். ஆனால் சீனிவாசன், வைத்திலிங்கம் மூலம் எப்படியாவது பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றார்.

"கடந்த தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களால் திருச்சியில் உள்ள எந்த தொகுதியும் வெற்றி பெறமுடியாமல் போனது' என திருச்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் சொன்னாலும்... அதனுடன், "கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல்தான், நிச்சயமாக ஜெயிக்க முடியும் என நம்பியிருந்த தொகுதிகளிலும் தோல்வியை ஏற்படுத்தி விட்டது' என்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

இளைஞர்களுக்கும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கும் தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியினரின் எதிர்பார்ப்பு. எடப்பாடி கவனத்திற்கும் இது சென்றாலும் வெல்லமண்டி நடராஜன், குமார், வளர்மதி, ரத்தினவேலு என களை கட்டும் கோஷ்டிப் பூசல்களால் தள்ளாடுகிறது திருச்சி அ.தி.மு.க.

nkn010912
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe