பொன்முடி சிறிதுகாலம் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். தற் பொழுது அவர் வீட்டில் அமலாக் கத்துறை ரெய்டு பாய்ந்துள்ளது. ஆனால், கனிம வளத்துறையில் கலைஞர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., எடப்பாடி ஆட்சிக் காலம் முதல் இன்று வரை கோலோச் சிக்கொண்டு இருக் கும் காண்ட் ராக்டர்கள் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் சுருட்டுகிறார்கள் என அதிர்ச்சித் தகவல்களை சொல்கிறார்கள் அந்தத் துறையின் அதிகாரிகள்.

dd

தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை வேலைகள் நடக்கின்றன. அந்த வேலைகளுக்காக ‘ரூல் 7-ன்படி கனிமவளத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் ஏரி, குளங்கள், விளைநிலங்களில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி கொடுப்பார் கள். ஒரு காண்ட்ராக்டருக்கு சாலைபோடும் பணிக்காக ஐம்பதாயிரம் டன் மண் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டால் அந்தக் காண்ட்ராக்டர் பேரை வைத்துக்கொண்டு மூன்று லட்சம் டன் மண் எடுப்பார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் செம்மண், சவுடு மண், களிமண் என பத்து வகை மண் இப்படி எடுக்கப்படுகின்றது.

"நூற்றுக்கணக்கான லாரிகள் எங்கள் கிராமத்தில் ஊடுருவுகிறது. இவர்கள் மண் எடுப்ப தால் எங்களது விவசாயம் பாதிக்கப்படுகிறது''’என தமிழ்நாடு முழுவதும் தினமும் செய்திகளில் எதிரொலிக்கும் குரல்களுக்கு காரணம் இந்த மணல் கொள்ளை தான். இதைத் தட்டிக் கேட்டால் அரசாங்க அனுமதி யுடன்தான் மண் எடுக்கிறோம் என நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக் டர் பதில் சொல் வார். இப்படி தமிழ்நாடு முழு வதும் ஆயிரக்கணக் கான இடங்களில் மணல் கொள்ளை கள் சர்வ சாதா ரணமாக நடக் கின்றன.

Advertisment

தமிழகம் முழுவதும் ஓடும் ஆறு களில் முப்பத்தைந்து இடங்களில் ஆற்றுமணல் எடுக்க அரசு அனுமதித் துள்ளது. ஒரு கட்டிடம் கட்டுபவர் ஆற்று மணல் வேண்டுமென்றால் அரசின் வெப்சைட்டில் போய் அப்ளை செய்து அனுமதி பெறவேண்டும். லாரிகள் மூலம் முப்பத்தைந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அவர் மணல் பெற்றுக்கொள்ளலாம். ஆற்று மணல் என்பது அரசாங்கத்தின் சொத்து. அதைப் பெறவேண்டுமென்றால் பணம் கொடுத்துப் பெறமுடியாது. ஆனால், இன்று ஒரு லோடு மணல் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரசாங்கம் அனுமதித்த இடங்களில் எல்லாம் ஒரு கும்பல் அட்டி போட்டு அமர்ந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணல் விற்பனை செய்கிறது. இதுவே சட்டப்படி குற்றம்.

dd

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் கருங்கல் ஜல்லி, கிரானைட் கற்கள், பலவகை கனிமங்களும், தாதுப்பொருட்களும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் கர்நாடகாவுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் பெரிய, பெரிய டிரக்குகளில் அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் இயங்கும் குவாரிகள் அனைத்திலும் குவாரி அதிபர்கள் லைசென்ஸ் பெற்றதைவிட அதிகமாகத்தான் வெட்டி எடுக்கிறார்கள். இதுவும் சட்ட விரோதம்.

Advertisment

இப்படி மண் வகைகள், ஆற்றுமணல், குவாரி ஆகிய மூன்றையும் தமிழ்நாடு முழுவதும் கட்டுக் குள் வைத்திருப்பவர்கள் மூவர். அதில் முக்கிய மானவர் கரிகாலன். இவர்கள் தென்மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள். சாதாரண பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர்களாக தொழிலை ஆரம்பித்தார்கள்.

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் பெயரில்தான் மணல் எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். ஆறுமுகசாமி என்பவர் மணல் தொழிலில் அப் பொழுது கோலோச்சிக் கொண்டிருந்தார். அவருடன் இந்த மூவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. 2006ல் தி.மு.க. ஆட்சி வந்ததும் இவர் கள் இந்த தொழிலில் மேலும் வளர்ந்தார் கள். மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சி வந்த தும் ஆறுமுக சாமி, கொட நாடு பங்க ளாவைக் கட்டிக் கொடுத்ததும், ‘ஜெ. வுக்கு லஞ்சம் தருவதாக செய்தி அடிபட்டது. ஆறுமுக சாமி வடக்கிலும், கரிகாலன் அணி தெற்கிலும் மணல் எடுத்துக்கொண்டிருந்த நிலையை மாற்றி, ஓ.பி.எஸ். மூலம் ‘ஜெ.வின் அறிமுகத்தைப் பெற்று இவர்கள் பிரகாசமாக தொழிலில் இறங்கினார்கள். சேகர் ரெட்டியை தங்களது பார்ட்னராக சேர்த்துக்கொண்டார்கள். 2016ல் சேகர் ரெட்டி அலுவலகத்தில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் ரெய்டு நடத்தியது. அதில் நூற்றிப்பத்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதில் முப்பத்தி மூன்று கோடி ரூபாய், ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு பண மதிப்பு இழப்பு செய்தபோது வெளியிட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள்.

அதற்கெல்லாம்கூட மிகச் சரியாகக் கணக்குக்காட்டி சேகர் ரெட்டி அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து விட்டார். அத்துடன் இந்தத் தொழிலில் இருந்து சேகர் ரெட்டி ஒதுங்கிவிட்டார். அதுவரை இந்தத் தொழிலில் சைலன்ட் ஆக இருந்து வந்த கரிகாலன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இப்பொழுது வட மாவட்டம் முழுவதும் கரிகாலனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதற்காக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசில் நிரந்தர ரூம் போட்டு தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார் கரிகாலன். தொழிலில் பில் எதுவும் இல்லை. இதுதவிர திருச்சியில் பஸ் ஸ்டாண்டு கட்டுவது, கட்டிடங்கள் கட்டுவது, சாலைகள் அமைப்பது என ஏகப்பட்ட காண்ட்ராக்டுகளை செய்து வருகிறார்கள்.

dd

மணல், அரசு சொத்து. சவுட்டு மண் மற்றும் கருங்கற்கள் போன்ற கனிம வளங்கள் எல்லாம் அரசுக்குச் சொந்தமானவை. அதை சட்ட விரோதமாக மறைமுகமாக எடுத்துச் சென்று இந்த மூவரணி வியாபாரக் கொள்ளை செய்து வருகிறது. இந்த மூவர் அணி செய்யும் வியாபாரத்திற்கு எந்தக் கணக்கும் இல்லை.

சசிகலா, ஓ.பி.எஸ்., எடப்பாடி மற்றும் தி.மு.க. அமைச்சர்கள் உதவியுடன் இந்த கொள்ளை நடக் கின்றது. “மாதம் நூறுகோடி ரூபாய் நாங்கள் கப்பம் கட்டுகிறோம்” என வெளிப்படையாகவே பேசு கிறார்கள் மூவரணி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

கனிம வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனும், கரிகாலனும் நண்பர்கள். ஏற்கெனவே புதுக்கோட்டை எம்.எல்.ஏ. சீட்டைப் பெற கரிகாலன் முயற்சி செய்தார். இப்பொழுது “எனக்கு எம்.பி. சீட் கொடுங்கள், டெல்லியை சரி செய்து விடுவேன்” என்று சொல்வதோடு, டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார் கரிகாலன். ஆனால் அமலாக்கத்துறை இவர் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறது. அடுத்த ரெய்டு கரிகாலன் டீமிற்குத்தான் என்று இந்த மூவர் அணி பற்றிய டீல்களை சொல்கிறார்கள் அமலாக்கத்துறையினர்.

“இந்த ஆட்சியில் மட்டும் இதுவரை 2500 கோடி ரூபாய் கப்பம் கட்டியதாக சொல்லும் இவர்கள், தி.மு.க. ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் வெடிகுண்டாகவே மாறுவார்கள்” என அலறுகிறார்கள் தி.மு.க. வி.ஐ.பி.க்கள்.

பத்திரிகைகள், ஊடகங்களில் இவர்களைப் பற்றிய செய்திகள் வெளிவராமல் இருக்க கோடிக்கணக்கில் செலவும் செய்துள்ளார்கள்.