Advertisment

அடுத்தடுத்த விபத்துகள்! பஞ்சரான வந்தே பாரத் ரயில்கள்!

vv

ரு காலத்தில் சென்னை விமானநிலையம் என்றாலே அதன் மேற்கூரை இடிந்து விழு வதே தொடர்ச்சியான செய்தி யாக இருந்துவந்தது. தற்போது அந்த இடத்தை, இந்திய பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப் பட்ட "வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் பிடித்துள்ளது. இந்தியாவிலுள்ள 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகை யிலும், சொகுசாகப் பயணிக்கும் வகையிலும் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இந்த ரயில் போக்குவரத்து வடிவமைக்கப் பட்டது.

Advertisment

v

இத்திட்டம் முதன்முறை யாக, கடந்த 2019ஆம் ஆண்டு

ரு காலத்தில் சென்னை விமானநிலையம் என்றாலே அதன் மேற்கூரை இடிந்து விழு வதே தொடர்ச்சியான செய்தி யாக இருந்துவந்தது. தற்போது அந்த இடத்தை, இந்திய பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப் பட்ட "வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் பிடித்துள்ளது. இந்தியாவிலுள்ள 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகை யிலும், சொகுசாகப் பயணிக்கும் வகையிலும் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இந்த ரயில் போக்குவரத்து வடிவமைக்கப் பட்டது.

Advertisment

v

இத்திட்டம் முதன்முறை யாக, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி கொடியசைக்கத் தொடங்கப்பட்டது. தொடங்கப் பட்ட மறுதினமே கடைசிப் பெட்டிகளில் தீப்புகை உருவாகி மின் தடை ஏற்பட்டது. அடுத் தடுத்து பிரச்சனைகள் எழுந்த தால் அதன் ஓட்டம் நிறுத்தப்பட் டது. இந்நிலையில், மேம்படுத்தப் பட்ட ரயில் வண்டியின் போக்கு வரத்தை, கடந்த செப்டம்பர் 30, வெள்ளியன்று, 'வந்தே பாரத் 2.0' என்ற பெயரில், குஜராத்தின் காந்தி நகரில், மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அந்த ரயில் வண்டியில் பிரதமர் மோடியும் சிறிதுதூரம் பயணித்தார். 'அப்பாடா... இனி பிரச்சனை யில்லை!' என்று ரயில்வே துறையினர் பெருமூச்சுவிட, அதிலும் மண் விழுந்தது.

ஒரே வாரத்தில், பட்வா - மணி நகர் இடையே இந்த ரயில் ஓடும்போது ரயில் பாதையின் குறுக்காக எருமை மாடுகள் கூட்டமாகக் குறுக்கிட்டன. வழக்கமாக ரயிலுக்கு குறுக்காக மாடுகள் வந்தால், அவற்றுக்குத் தான் உயிர்ச்சேதமாகும். ஆனால் இங்கோ, வந்தே பாரத் ரயிலின் எஞ்சின் பகுதி பெருத்த சேதமடைந்து பாதி வழியிலேயே வண்டி நிறுத்தப்பட்டது. எருமை மாடுகள் கூட்டமாக வந்ததால் தான் இந்த அசம்பாவிதம் நடந்த தாக சப்பைக்கட்டு கட்டினார்கள்.

மறுதினமே, காந்தி நகருக் கும் மும்பைக்குமிடையே ஓடிக் கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது, குஜராத் மாநிலம் ஆனந்த் ஸ்டேஷனுக் கருகே செல்லும்போது பசு மாடு குறுக்கிட, இங்கும் ரயிலின் எஞ்சின் சேதமடைந்தது. மறு நாள், டெல்லிக்கும் வாரணாசிக் கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஓடும்போது, அதன் சக்கரங்களில் ஒன்று பழு தடைந்து, அடிப்பாகம் நெளிந்து வண்டி பாதியிலேயே நின்று போனது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் தந்த விளக்கத்தில், மணிக்கு 180 கி.மீ.க்கு மேல் வேகத்தில் செல்லும்போது மாடு கள் குறுக்கிட்டால் இது தவிர்க்க முடியாதென்றும், ரயிலின் முன்பகுதியை அப்படியே மாற்றிக்கொள்ளும் வசதியுள்ளது என்றும் குறிப்பிட்டது! இன் னொருபக்கம், இந்த ரயிலுக்கான சக்கரங்கள் அனைத்தும் சீன நிறுவனத்திடமிருந்து வாங்கப் பட்டதெனக்கூறி பழியை சீனா மீது போடும் முயற்சியும் நடந்தது. இனியாவது விபத்தில்லா வந்தே பாரத்துக்கு வழியுண்டா?

Advertisment

nkn151022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe