அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனரால் சுபஸ்ரீ மரணமடைந்து பதினேழு நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை மிக மிக லேட்டாக கைது செய்திருக்கிறது தமிழக போலீஸ்.
ஜெயகோபால் கைது செய்யப்பட்ட அன்று சுபஸ்ரீயின் வீட்டிற்கு கனடா நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் சுபஸ்ரீ சர்வதேச அளவில் சுற்றுலா வணிகத்தைப் பற்றி படிக்க தேர்வு ஒன்றை எழுதியிருந்தார். அந்தத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்று தேர்வு பெற்றிருந்தார் என்பதை சொல்லும் கடிதம்தான் அது. கனடா அரசின் ஊக்கத் தொகையோடு அந்நாட்டில் தங்கிப் படிக்க சுபஸ்ரீ அனுமதி பெற்றிருந்தார். "இந்த கடிதம் பதினேழு நாட்களுக்கு முன்பே வந்திருந்தால் எனது மகள் கனடாவிற்கு படிக்கச் சென்றிருப்பாள். இப்படி கொலைகார பேனரில் சிக்கி இறந்திருக்கமாட்டாளே' என கதறுகிறார் சுபஸ்ரீயின் தாயார் கீதா.
இந்த பதினேழு நாட்களும் கொலைகார பேனர் வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் ஆளும்கட்சியின் பாதுகாப்பில்தான் இருந்தார். சென்னை அண்ணாசாலையில் பிரபலமான காஸ்மோபாலிட்டன் கிளப் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஆளும் கட்சியின் வி.ஐ.பி.க்கள் தங்குவதற்கான ஒரு ஹோட்ட
அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனரால் சுபஸ்ரீ மரணமடைந்து பதினேழு நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை மிக மிக லேட்டாக கைது செய்திருக்கிறது தமிழக போலீஸ்.
ஜெயகோபால் கைது செய்யப்பட்ட அன்று சுபஸ்ரீயின் வீட்டிற்கு கனடா நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் சுபஸ்ரீ சர்வதேச அளவில் சுற்றுலா வணிகத்தைப் பற்றி படிக்க தேர்வு ஒன்றை எழுதியிருந்தார். அந்தத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்று தேர்வு பெற்றிருந்தார் என்பதை சொல்லும் கடிதம்தான் அது. கனடா அரசின் ஊக்கத் தொகையோடு அந்நாட்டில் தங்கிப் படிக்க சுபஸ்ரீ அனுமதி பெற்றிருந்தார். "இந்த கடிதம் பதினேழு நாட்களுக்கு முன்பே வந்திருந்தால் எனது மகள் கனடாவிற்கு படிக்கச் சென்றிருப்பாள். இப்படி கொலைகார பேனரில் சிக்கி இறந்திருக்கமாட்டாளே' என கதறுகிறார் சுபஸ்ரீயின் தாயார் கீதா.
இந்த பதினேழு நாட்களும் கொலைகார பேனர் வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் ஆளும்கட்சியின் பாதுகாப்பில்தான் இருந்தார். சென்னை அண்ணாசாலையில் பிரபலமான காஸ்மோபாலிட்டன் கிளப் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஆளும் கட்சியின் வி.ஐ.பி.க்கள் தங்குவதற்கான ஒரு ஹோட்டல் இருக்கிறது. தாமரையின் ஆங்கிலப் பெயர் கொண்ட அந்த ஹோட்டலில் முதல்வர் எடப்பாடியின் நிழலான சேலம் இளங்கோவனும், பால்வள வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தங்குவார்கள்.
அக்ரியையும் இளங்கோவனையும் பார்க்க அ.தி.மு.க.வினர் அந்த ஹோட்டலில் அதிகம் புழங்குவார்கள். உயர்மட்ட காண்ட்ராக்டுகளை பேசி முடிக்கச் செல்லும் அ.தி.மு.க.வினரில் ஒரு சிலர் அக்ரியின் தம்பியிடம், "அண்ணன் ரூமுக்கு பக்கத்து ரூம் ஏன் பூட்டிக் கிடக்கிறது' என கேட்க... "உஷ்... அது ரகசியம். அந்த ரூமில்தான் பேனர் வைத்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயகோபாலை முதல்வர் எடப்பாடி தங்க வைத்திருக்கிறார்' என அக்ரியின் தம்பி சொல்ல... எதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு என வாய்மூடிச் சென்றனர். "ஜெயகோபால், தேன்கனிகோட்டை யில் ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார்' என்கிற தகவலை கேள்விப்பட்டதும், "இங்கதானே இருந்தார், அங்கே எப்ப போனார்' என ஆச்சரியப் படுகிறார்கள்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்டோம். சுபஸ்ரீ மரண மடைந்த செய்தி கேள்விப்பட்ட தும் ஜெயகோபால் காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள பாபுசெட்டி சத்திரத்திற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து பெங்களூரு சென்றார். அவர் அங்கிருந்து ஒகேனக்கல் சென்றார். பெங்களூரிலிருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் அவர் வழக்கமாக தங்கும் ரிசார்ட்டில் தங்கியிருந்தார். பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க பரத் என்கிற நபரை நியமித்திருந்தார். தேன்கனிக்கோட்டை ரிசார்ட்டிலேயே தனது மகன் கார்த்திக்கிற்கு முதலிரவும் நடத்தினார்.
மடிப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் மகேஷ்குமார், ஜெயகோபாலை கண்காணித்த போது, பரத் என்கிற நபர் ஜெயகோபால் வீட்டிற்கு வருவதையும் அங்கிருந்து அவர் ஜெயகோபாலின் மகன் கார்த்திக்கிடம் பேசுவதையும் கண்டுபிடித் தார். பரத் பேசிய தொலைபேசி எண்களை ஆராய்ந்தபோது, ஜெயகோபாலின் மகன் கார்த்திக் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இந்தத் தகவலை மாநில உளவுப் பிரிவு போலீசாருக்கு சென்னை நகர போலீசார் சொல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட உளவுத்துறை போலீசார் ஒரு விடுதியில் ஜெயகோபால் தங்கி யிருப்பதையும் அவரது கார் அங்கே நிற்பதையும் உறுதி செய்தனர். உடனே தனிப்படை அமைத்து தேன்கனிக்கோட்டை யில் ஜெயகோபாலை போலீசார் கைது செய்தனர்.
இது சட்டம்-ஒழுங்கு போலீசார் சொல்லும் விவரம். இந்த வழக்கில் போக்குவரத்து விதிமீறலை விசாரிக்கும் ஆய் வாளர் ரமேஷ்குமார் தலைமை யிலான டீம், காஞ்சிபுரம் மாவட்டம் பாலூரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை கைது செய்ததாகச் சொல்கிறது. உறவினர் வீட்டில் சுபஸ்ரீ யின் மரணம் தொடர்பான வழக்கில் இரண்டாவது குற்றவாளியான மேகநாதனை இத்தனை நாட்கள் போலீசார் ஏன் தேடவில்லை. சட்டம்-ஒழுங்கு போலீசார் ஒரு டீமாகவும் போக்குவரத்து போலீசார் இன்னொரு டீமாகவும் பிரிந்து கைது நடவடிக்கைகளை தனித்தனியாக செய்வதன் காரணமென்ன என காவல்துறையினரே சந்தேக கேள்வியை எழுப்புகிறார்கள்.
கொலைகார பேனர்களை அச்சடித்த சண்முகா டிஜிட்டல் பேனர்களை கூலிக்காக கொண்டுபோய் சாலைகளில் வைத்ததாக சங்கர், லட்சுமிகாந்தன், பழனி, சுப்பிரமணி ஆகிய நான்கு பேரை கைது செய்தது. அவர்கள் மீதிருந்த எளிமையான குற்றங் களை பார்த்த ஆலந்தூர் கோர்ட் நீதிபதி ஸ்டா லின் அந்த நான்குபேரையும் விடுவித்துவிட்டார்.
கோர்ட்டில் நிற்க வைக்கப்பட்ட கவுன்சிலர் ஜெயகோபாலிடம் நீதிபதி ஸ்டாலின், "நீங்கள் செய்த குற்றத்தின் கொடூரம் தெரியுமா?' என கேட்க... "ஆமாம் சார், நான் செஞ்சது தப்புதான் சார்' என தலையைக் குனிந்தவாறே சொன்னார் ஜெயகோபால். இந்த குற்றவுணர்வு ஜெய கோபாலுக்கு வருவதற்கே பதினேழு நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.
பேனர் வைக்கப்பட்ட பள்ளிக்கரணை பகுதி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் அழகு, சட்டவிரோத பேனர் வைக்க அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகளான உதவி செயற்பொறியாளர் பாலாஜியும், மண்டல அதிகாரி பாஸ்கரனும் திருமண மண்டப உரிமையாளர்களிடம் இருந்து பெரும் தொகையை பேனர் வைத்த போதும், பேனர் வைத்து சுபஸ்ரீ இறந்த பிறகும் "வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன்' என பெற்றுள்ளார்கள். "சட்டவிரோதமாக பேனர்களை வைத்தார்கள் என பாலாஜியிடம் 11-ம் தேதியும், சுபஸ்ரீ இறந்த 12-ம் தேதி காலையும் புகார் செய்தேன்' என பள்ளிக்கரணை உதவி ஆய்வாளரிடம் பேசிய விஜய்ரஞ்சன் என்கிற மாநகராட்சியின் தற்காலிக ஊழியர், தற்போது "யாருடனும் பேசக்கூடாது' என மவுனமாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சப்-இன்ஸ்பெக்டருடன் பேசிய பேச்சு மட்டும் வாட்ஸ்-ஆப்பில் வெளியாகி சுபஸ்ரீயின் மரண செய்தி போல சுற்றிக்கொண்டிருக்கிறது என சுட்டிக் காட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த்