அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார். நவம்பர் 19ஆம் தேதி, அவருடைய தாய் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தார். 10 நாட்கள் கழித்து அந்த மாணவி வீடு திரும்பினார். வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும், மாணவி தரப்பிலும் அழைத்துச்சென்றவர் தரப்பிலும் சமரசமானார்கள்.
இந்நிலையில், நவம்பர் 26ஆம் தேதி அந்த மாணவியும் பெற்றோரும் இருதரப்பு வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்கப் பட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் ஆஜரானார் கள்.
அப்போது, அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி ஆலோசனையும் அறிவுரையும் கூறவேண்டும் எனச் சொல்லி, காவலர்களின் ஓய்வறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண் காவலரை அருகில் வைத்துக்கொள்ளாமல், தனியாக அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய தகவல், விருதுநகர் மாவட்ட காவல் கண்கா
அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார். நவம்பர் 19ஆம் தேதி, அவருடைய தாய் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தார். 10 நாட்கள் கழித்து அந்த மாணவி வீடு திரும்பினார். வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும், மாணவி தரப்பிலும் அழைத்துச்சென்றவர் தரப்பிலும் சமரசமானார்கள்.
இந்நிலையில், நவம்பர் 26ஆம் தேதி அந்த மாணவியும் பெற்றோரும் இருதரப்பு வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்கப் பட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் ஆஜரானார் கள்.
அப்போது, அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி ஆலோசனையும் அறிவுரையும் கூறவேண்டும் எனச் சொல்லி, காவலர்களின் ஓய்வறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண் காவலரை அருகில் வைத்துக்கொள்ளாமல், தனியாக அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய தகவல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்குத் தெரிவிக்கப்பட... அன்றிரவே சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
காவலர்களின் ஓய்வறைக்குள் ஏதோ நடந்து, சம்பந்தப்பட்டவர் சார்பு ஆய்வாளர் என்பதால் என்னென்னமோ மூடி மறைக்கப்பட்டு, இடமாற்ற நட வடிக்கையுடன் விவகாரத்தை கமுக்கமாக முடித்துவிட்டது காவல்துறை’ என விஷயம் தெரிந்த வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்தே முணுமுணுப்பு எழ, களமிறங்கினோம்.
"அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நிதானமாக இல்லை. ஏற்கனவே, அவர் பணிபுரிந்த சில காவல்நிலையங்களி லும் இதே ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்தான். இரவோடு இரவாக அவர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இதிலிருந்தே குற்றத்தின் தன்மை என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். அத்தனைபேர் முன்னிலை யிலும், அந்த மாணவியைத் தனியே காவலர் ஓய்வறைக்கு அழைத்துச்சென்று, "இந்த வயசுல உனக்கு காதல் தேவையா? வீட்ட விட்டு ஓடிப்போயிருக்க. பத்து நாள் அவன்கூட இருந்திருக்க. என்னென்ன நடந்துச்சு? என்கிட்ட சொல்லு. இல்லைன்னாலும் மெடிக்கல் டெஸ்ட்ல எல்லாம் தெரிஞ்சிரும்'’என்கிற ரீதியில் மிரட்டலாகப் பேசி, ‘"இதான் என்னோட மொபைல் நம்பர்... வாங்கி வச்சிக்க. அப்பப்ப என்கிட்ட பேசு'’ என்று கூறியதோடு, அம்மாணவியின் தோளைத் தொட்டு முகத்துக்கு நேராக நெருங்கியபோது, அவள் அழுதிருக்கிறாள். அப்போது ஓய்வறையின் கதவும்கூட லேசாகச் சாத்தப்பட்டி ருக்கிறது''’என்கிறார்கள், அங்கு நடந்ததை அறிந்தவர்கள்.
சார்பு ஆய்வாளர் முத்துக்குமாரைத் தொடர்புகொண்டபோது, தொடர்ந்து அவர் நம்மைத் தவிர்த்தார். இந்நிலையில், அந்த 17 வயது மாணவி மற்றும் பெற்றோருடன் அன்று அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலை யம் சென்ற வழக்கறிஞர் ராஜ்குமாரைத் தொடர்புகொண்டோம். "அந்தப் பெண் மொதல்ல சரியான தகவல் சொல்லல. வெளிய வந்தபிறகுதான் சொல்லுச்சு. பாதிக்கப்பட்டவர் மைனர் பொண்ணுங்கிறதுனால அப்ப நாங்க ரொம்பவும் பெரிசு பண்ணல. அங்கே பையன் தரப்பு வழக்கறிஞர்களும் இருந் தாங்க.. நாங்களும் இருந்தோம். எல்லாரு முன்னாலயும் இது நடந்துச்சு. அதான்.. நடவடிக்கை எடுக்கிற அளவுக்கு விவகாரம் சீரியஸாயிருச்சு. வெளில தெரியக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா, விஷயம் வெளிய கசிஞ்சிருச்சு. போலீஸ் டிபார்ட்மெண்ட் நடவடிக்கை எடுத்திருச்சு. ஏ.எஸ்.பி. மதிவாணன் என்ன ரிப்போர்ட் கொடுத்திருக்காருன்னு தெரியல. மற்ற விபரத்த அவருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க''’என்று பட்டும் படாமலும் பேசினார்.
விசாரணை மேற்கொண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் அறிக்கை சமர்ப்பித்த அருப்புக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் மதிவாணனைத் தொடர்பு கொண்டோம்.
"கதவை எல்லாம் சாத்தல. விசாரிச்சப்ப சப்-இன்ஸ்பெக்டர் அந்த ரூம்ல நின்னுக் கிட்டிருந்தத எல்லாரும் தெளிவா பார்த் திருக்காங்க. கதவைத் தொடவே கிடையாது. கதவு திறந்துதான் இருந்திருக்கு. ஓபனான ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல அந்தப் பெண்ணோட அம்மா இருக்காங்க. பையனோட வக்கீல்களும் இருக்காங்க. இத்தனைபேர் இருக்கும்போது ஒருத்தர் கதவைச் சாத்த முடியுமா? சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தான் பண்ணுனத அவரே சொல்லுறாரு. அந்த மாணவியைத் தனியா கூட்டிட்டுப் போயி, "நீ வந்து என் நம்பரை வச்சிக்கம்மா.. உனக்கு நான் உதவுறேன்'னு சொல்லிருக்காரு. அவரோட விளக்கம் இப்படியிருக்கு.
மாணவியை விசாரிச்சப்ப.. "என்கிட்ட நம்பர் கொடுத்து ரொம்ப வற்புறுத்து னாரு. தனியா கூட்டிட்டுப் போயி நிற்கவச்சு, நம்பரைக் கொடுத்து வச்சிக்கச் சொல்லி.. மறுபடி எஸ்.ஐ. ரூம்லயும் நம்பரை வாங்கச்சொல்லி வற்புறுத்தினாரு'ன்னு சொன்னாங்க. இதான் நடந்திருக்கு''’எனத் தெளிவாக விளக்கினார்.
உதவுவதாகச் சொல்லி, ஒரு மைனர் பெண்ணின் மனம் புண்படும் அளவுக்கு நடந்து, உபத்திரவம் தந்தவர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் என்பது கொடுமையாக அல்லவா இருக்கிறது?