Advertisment

தடுமாறும் முதல்வர்! உளறும் அமைச்சர்கள்! - கொரோனா கால கொடூரக் கூத்து!

cc

ரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அங்கு மீடியாக்களை சந்தித்தார்.

Advertisment

cc

""நீங்கள் எல்லோரும் முககவசம் அணிந்துள்ளீர்கள்... என்னை பாருங்கள் முககவசமா அணிந்துள்ளேன் பயமெல்லாம் போயிருச்சு கொரோனாவுடன் பழகியாச்சு'' என்றவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாயினர். ""மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி கொண்டு வருகிறார்கள். நான் முககவசம் அணியாமல் உங்கள்கூட பேசி வருகிறேன், எனக்கு எந்த பயமும் இல்லை. எல்லாத்தையும் பழகிக் கொள்ளவேண்டும்'' என்று அவர் மறுபடியும் சொன்னபோது, செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி யடைந்தனர். அமைச்சர் பேசியது சில சேனல்களில் லைவ்வாக ரிலே ஆனது. அதைக்கூட உணராமல், தன் கட்ச

ரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அங்கு மீடியாக்களை சந்தித்தார்.

Advertisment

cc

""நீங்கள் எல்லோரும் முககவசம் அணிந்துள்ளீர்கள்... என்னை பாருங்கள் முககவசமா அணிந்துள்ளேன் பயமெல்லாம் போயிருச்சு கொரோனாவுடன் பழகியாச்சு'' என்றவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாயினர். ""மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி கொண்டு வருகிறார்கள். நான் முககவசம் அணியாமல் உங்கள்கூட பேசி வருகிறேன், எனக்கு எந்த பயமும் இல்லை. எல்லாத்தையும் பழகிக் கொள்ளவேண்டும்'' என்று அவர் மறுபடியும் சொன்னபோது, செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி யடைந்தனர். அமைச்சர் பேசியது சில சேனல்களில் லைவ்வாக ரிலே ஆனது. அதைக்கூட உணராமல், தன் கட்சிக்காரர்களுடன் காரில் ஏறிச் சென்றார்.

அமைச்சரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் முத லமைச்சருக்கு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, ""முகக்கவசம் அணிவது இல்லை என்று சட்டவிரோதமாக பேசி வரும் அமைச்சர்மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் புகார் கொடுத்துள்ளேன். கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில் மத்திய மாநில அரசுகள் தொற்றை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அணியாத பட்சத்தில் அபராதம் விதித்து தொகையை வசூலித்து வருகின்றது..

Advertisment

cc

ஆனால் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் அமைச்சராக உள்ள செல்லூர் ராஜு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் இதற்கு நேர்மாறாக பேசியிருக்கிறார். இது மத்திய மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு விரோதமானது.

ஒரு அமைச்சரே இவ்வாறு கூறினால் பொதுமக்கள் எப்படி பொது வெளியில் முககவசம் அணிவார்கள். எனவே தமிழக முதல்வர் இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி முககவசம் அணியாத பொதுமக்களிடம் இதுவரை பல கோடி ரூபாய் அபராத தொகை வசூலித்து உள்ள காவல்துறையும் இவரிடம் அபராதம் விதித்து அதை வசூலிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கடுமையான பேரிடர் காலத்தில் இது போன்ற பொறுப்பற்ற புரிதல் இல்லாத அமைச்சரின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே புவிவெப்பமாவதை தடுக்க போகிறேன்... நீர் நிலைகளை காப்பாத்த தனது சயிண்டிஸ்ட் மூளையை பயன்படுத்தி தெர்மாகோல் விட்ட அமைச்சர், தற்போது மக்களின் உயி ருடன் விளையாட முடிவெடுத்திருப்பது வேத னையாக இருக்கிறது என்கிறார்கள் மதுரைவாசிகள்.

cc

செல்லூர் ராஜூ ஓப்பனாக பேசி விட்டார். பெரும்பாலான அமைச்சர்கள் இப்படி லூஸ் டாக் விடாவிட்டாலும், கொரோனா கால நடைமுறைகளைப் பின்பற்றுவதேயில்லை. உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மீடியா கவரேஜூக்கு ஆசைப்பட்டு, கூட்டம் கூட்டி நிவாரண உதவிகளை வழங்கினார். அந்த செய்தியை சேகரிக்க வந்த ஒரு நிருபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்படியிருந்தும், திருவாரூர் மாவட்ட ஆய்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி வந்தபோது, மாவட்ட எல்லையில் கட்சிக் காரர்களைத் திரட்டிவந்து வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். கூட்டமாக வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை.

பல மாவட்டங்களிலும் முதலமைச்சரின் விசிட்டின்போது, லோக்கல் அமைச்சர்களும் மா.செ.க்களும் திரட்டி வரும் கூட்டத்தில் மாஸ்க் அணிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இ-பாஸ் நடைமுறை இருந்தவரை பொதுமக்களின் பயணத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் கொடி போட்ட காரில், லோக்கல் அமைச்சரின் பெயரையோ எம்.எல்.ஏ. பெயரையோ சொல்லிவிட்டு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையையும் கடைப்பிடிக்காமல் பயணம் செய்தனர். இதில் சரக்கு பாட்டில்களுடன் பயணித்தவர்களும் உண்டு.

ஏறத்தாழ 160 நாட்களுக்குப் பிறகு கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்க உத்தர விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் இந்த வயதில் அதிகளவில் கோவில், மசூதி, தேவாலயம் என வழிபாட்டு இடங்களுக்குப் போகக்கூடியவர்கள். பொதுஇடங்களுக்கு வந்தால் கொரோனா நோய்த்தொற்று அவர்களை எளி தாகப் பாதிக்கும் என்று கூறி அனுமதிப்பதற்கு கெடுபிடி செய்கிறது கோவில் நிர்வாகம். ஆனால், ஆய்வுப் பணி என பல இடங்களுக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள்தான்.

மாஸ்க் அணிவது முதல் பொது இடங்களில் நடமாட்டம் வரை மக்களுக்கு ஒரு நீதி. ஆட்சியாளர்களுக்கு ஒரு நீதி. தடுமாறுகிறார் முதல்வர். உளறுகிறார்கள் அமைச்சர்கள்.

-அண்ணல்

படம் : குமரேஷ்

nkn050920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe