போதையில் தள்ளப்படும் மாணவிகள்! -பதறும் பெற்றோர்!

drugs

ன் மகள் தள்ளா டிக்கொண்டு வரு வதைப் பார்த்த அவரது தந்தைக்கு அச்சம்... பதைபதைப்பு. காரணம் விபரம் புரி யாத வயது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி அவள். மேல்நிலைப் பள்ளி வகுப்பை எல்லாம் தாண்டவில்லை. (மாணவி களின் எதிர்காலம் கருதி பெயர் மற்றும் இதர அடையாளங்கள் தவிர்க் கப்பட்டுள்ளன) பிப்.28 அன்று தள்ளாடியபடி வந்த அவளை, வெகு நேரம் கழித்து விசாரித்த தந்தையிடம், சக மாணவி களுடன் சென்ற தன்னை அவர்களுக்கு வேண்டி யவர் தங்களைக் காரில் ஏற்றிக்கொண்டு சென் றார். குடிப்பதற்கு ஏதோ கொடுத்தார், சினிமா விற்குப் போனோம் என்று அவள் சொல்ல- பதறிப்போன தந்தை, அவளது மொபைலை வாங்கி அலசியிருக் கிறார். அதில் சந்தேகத் திற்கிடமான நம்பர் கிடைக்கவே, மறுநாள் அந்த நம்பரில் அவ ளையே பேசச்சொல்லி, நகராட்சிப் பகுதி

ன் மகள் தள்ளா டிக்கொண்டு வரு வதைப் பார்த்த அவரது தந்தைக்கு அச்சம்... பதைபதைப்பு. காரணம் விபரம் புரி யாத வயது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி அவள். மேல்நிலைப் பள்ளி வகுப்பை எல்லாம் தாண்டவில்லை. (மாணவி களின் எதிர்காலம் கருதி பெயர் மற்றும் இதர அடையாளங்கள் தவிர்க் கப்பட்டுள்ளன) பிப்.28 அன்று தள்ளாடியபடி வந்த அவளை, வெகு நேரம் கழித்து விசாரித்த தந்தையிடம், சக மாணவி களுடன் சென்ற தன்னை அவர்களுக்கு வேண்டி யவர் தங்களைக் காரில் ஏற்றிக்கொண்டு சென் றார். குடிப்பதற்கு ஏதோ கொடுத்தார், சினிமா விற்குப் போனோம் என்று அவள் சொல்ல- பதறிப்போன தந்தை, அவளது மொபைலை வாங்கி அலசியிருக் கிறார். அதில் சந்தேகத் திற்கிடமான நம்பர் கிடைக்கவே, மறுநாள் அந்த நம்பரில் அவ ளையே பேசச்சொல்லி, நகராட்சிப் பகுதி பக்கம் அவரை வரும்படி சொல்லித் தந்திரமாக வரவழைத்திருக்கிறார். நம்பிய அவனும் அதே காரில் வந்திருக்கிறான். தனது உறவினர்களுடன் காத்திருந்த அந்த தந்தை அவன் வந்ததும் அடையாளம் தெரிந்து ஆத்திரத்தில் அவர் அடிக்க, மற்றவர்களும் சேர்ந்து அடிகொடுத் துள்ளனர். அவன் வந்த காரையும் மடக்கி வைத் தனர். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அவனையும், அவன் வந்த காரையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்த விஷய மறிந்து பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் ஸ்டே ஷனில் கூடி விட்டனர்.

drugs

இதனிடையே பிடிபட்டவன் சேதுராஜ் என்றும், தனது ஊரி லுள்ள ஒருவரின் கார் டிரைவராக வேலை செய்பவன் என்றும் அந்தக் காரைத்தான், அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தியிருக்கி றான் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிந் திருக்கிறது. மேலும் அவனது மொபைல் போனை வாங்கிய போலீசார் அதை ஆராய்ந்தபோது. மாறு பட்ட படங்களோ, மாணவிகள் தொடர் பான படங்களோ பதிவாக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டார்களாம். விசாரணையில் "நான், அவர்களுக்கு ட்ரிங்ஸ் கொடுத்து தியேட்டரில் விட்டுவிட்டுதான் வந்தேன். வேறு செயல் களில் ஈடுபடவில்லை. நீங்களே அந்தப் பிள் ளைகளிடம் கேட்டுப் பாருங்கள்' என்றும் சொல்லியிருக்கிறான்.

தனக்கு வேண்டிய ஒரு மாணவியோடு வந்த அவளது வகுப் பின் சக மாணவிகள் மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு தனி இடத்திற்குப் போயி ருக்கிறார்கள். அவன் வாங்கி வந்தது பீர், மது என்று அந்த மாணவி களுக்கும் தெரியுமாம். அவர்கள் அனைவரும் ஒன்றாகவே பீர் அருந்தியிருக்கிறார்கள். பின்பு அவர்களை நகரின் ஒரு சினிமா தியேட்டரில் மதியக் காட்சி பார்க்க விட்டு விட்டு காட்சி முடிந்த பின்பு வந்து அவர் களைக் காரில் பிக்-அப் செய்து கொண்டு போனவன் வழியில் டிராப் செய்துவிட்டுப் போயிருக்கிறான். அந்த நேரத்தில் வீடு திரும்பிய அந்த மாணவியின் தந்தை சந்தேகப்பட்டு மறுநாள் பொறி வைத்துப் பிடித்திருக் கிறார். இதில் வேறு யாரும் சம்பந்தப்பட் டுள்ளார்களா என்றும் விசாரணை போகிறது.

""அவரை விசா ரித்ததில் பிள்ளை களுக்கு அது, மது வகையான பீர் என்றும் தெரிந்திருக்கிறது. எல் லோரும் ஒன்றாகத் தானிருந்து குடித்திருக் கிறார்கள். என்றாலும் அறியாத சின்னஞ்சிறு மாணவிகளுக்கு போதைப்பொருளைக் கொடுத்தது குற்றம்தான். போக்சோ பிரிவிலும் இது அடங்கும்; வழக் குப் பதிவு செய்யப்படும்'' என்கிறார் ஆய்வாள ரான சத்தியப்பிரபா.

17 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தாக சிக்கிய சேதுராஜ் மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது. தப்பிய அவனது நண்பனான மாவிலியூத்துக் கிராமத் தின் அஜய் என்பவன் தேடப்படும் நபராகி யிருக்கிறார்.

இதுபோன்று சேதுராஜ் மாணவி களைக் காரில் அழைத் துச் செல்லும்போது உடன் அவனது நண் பன் அஜய்யும் செல்வ துண்டாம். நகரின் ஒதுக் குப்புறத்தில் அமர்ந்து மது அருந்தினால் விஷ யம் வெளியாகிவிடும் என்பதால் சங்கரன் கோவில் திருநெல்வேலி சாலையிலிருக்கும் மேசியாபுரம் கிராமத் தின் வயல்வெளிப் பக்கமுள்ள கோழிப் பண்ணைத் தோப்பில் அமர்ந்து மாணவி களுக்கு பீர் சப்ளை செய்து அவர்களைப் போதையில் தள்ளி யிருக்கிறான் சேதுராஜ்.

விபரமறியாத பள்ளி மாணவிகள் போதையில் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இது ஒருநாள் சம்பவமா? ஆழமாக விசாரிக்கப் பட வேண்டிய ஒன்று.

இன்னொரு பொள்ளாச்சி சம் பவமாகி விடக்கூடாது என்று நகரில் கனத்த பேச்சும் ஓடுகிறது.

-பரமசிவன்

படம்: ப.இராம்குமார்

nkn110320
இதையும் படியுங்கள்
Subscribe