Advertisment

போதையில் மாணவர்கள்! ரெய்டில்  பிரபல கல் லூரிக்கள் மருத்துவமனைகள்!

vels1

மலாக்கத்துறை ரெய்டு, காவல்துறை ரெய்டுகளால் இந்தியாவின் பிரபல கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அதிர்ச்சியாகியுள்ளன. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் பொறுப்பேற்றது முதல் வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, போதை மருந்துகள் விற்பனையை குறிவைத்து தொடர்ந்து ரெய்டு செய்துவருகிறார். அவரின் தனிப்படையினர் மாநிலம் விட்டு மாநிலம் சென்று போதைப் பொருட்களை சப்ளை செய்யும் வலைப்பின்னலில் இருப்பவர்களை கைது செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல கல்வி நிறு வனங்களில் ஒன்றான வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருளை விற்பனை செய்தார்கள் எனச்சொல்லி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

vels

மாவட்ட எஸ்.பி. மயில்வாகனனுக்கு வந்த தகவலில், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்காமல் அப்பார்ட் மெண்ட்களில் தங்கியிருக்கிறார்கள். கல்லூரிக்கு போய்வந்த பின், உடன் படிப்பவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்கிறார்கள் எனத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படை யில் கடந்த 18ஆம் தேதி தனது ஸ்பெஷல் டீமை ரெய்டில் இறக்கினார். அவர்கள் "கிளவுட் அப்பார்ட்மெண்ட்' என்ற தனியார் விடுதியிலுள்ள வீடுகளில் சோதனை நடத்தியபோது, 500 கிராம் கஞ்சா,  53 போதை மாத்திரைகள், 250 மி.லி. கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு காரணமானவர்களென, பல்லைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஆயுஷ்சுக்லா, தேவ் குமார், ஆதர்ஷ்ஷா, ஆதித்யா பிரதான், ஹரியானா வை சேர்ந்த கேசவ், தெலுங்கானாவை சேர்ந்த ஈஸ்வர், கேரளாவை சேர்ந்த ஷிபான் என 7 பேரை போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (N.D.P.S. Act) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (B.N.S.) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையி லடைத்துள்ளது. இந்த வழக்கில் மாணவர்கள் அல்லாத

மலாக்கத்துறை ரெய்டு, காவல்துறை ரெய்டுகளால் இந்தியாவின் பிரபல கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அதிர்ச்சியாகியுள்ளன. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனன் பொறுப்பேற்றது முதல் வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, போதை மருந்துகள் விற்பனையை குறிவைத்து தொடர்ந்து ரெய்டு செய்துவருகிறார். அவரின் தனிப்படையினர் மாநிலம் விட்டு மாநிலம் சென்று போதைப் பொருட்களை சப்ளை செய்யும் வலைப்பின்னலில் இருப்பவர்களை கைது செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பிரபல கல்வி நிறு வனங்களில் ஒன்றான வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருளை விற்பனை செய்தார்கள் எனச்சொல்லி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

vels

மாவட்ட எஸ்.பி. மயில்வாகனனுக்கு வந்த தகவலில், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், விடுதியில் தங்காமல் அப்பார்ட் மெண்ட்களில் தங்கியிருக்கிறார்கள். கல்லூரிக்கு போய்வந்த பின், உடன் படிப்பவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்கிறார்கள் எனத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படை யில் கடந்த 18ஆம் தேதி தனது ஸ்பெஷல் டீமை ரெய்டில் இறக்கினார். அவர்கள் "கிளவுட் அப்பார்ட்மெண்ட்' என்ற தனியார் விடுதியிலுள்ள வீடுகளில் சோதனை நடத்தியபோது, 500 கிராம் கஞ்சா,  53 போதை மாத்திரைகள், 250 மி.லி. கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு காரணமானவர்களென, பல்லைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஆயுஷ்சுக்லா, தேவ் குமார், ஆதர்ஷ்ஷா, ஆதித்யா பிரதான், ஹரியானா வை சேர்ந்த கேசவ், தெலுங்கானாவை சேர்ந்த ஈஸ்வர், கேரளாவை சேர்ந்த ஷிபான் என 7 பேரை போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (N.D.P.S. Act) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (B.N.S.) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையி லடைத்துள்ளது. இந்த வழக்கில் மாணவர்கள் அல்லாத மூவரை தேடிவருகிறது.  இதுகுறித்து எஸ்.பி. ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களிடம் பேசிய போது, "போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணி யாற்றியதால் எஸ்.பி.க்கு தனி சோர்ஸ் இருக்கு. அவர்களிடமிருந்து நேரடியாகவே அவருக்கு தகவல்கள் போகுது. அவருக்கு வந்த தகவலின் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட மாணவர் களை சுற்றி வளைத்தோம். இவர்கள் கொரியர் வழியாக கல்லூரிக்கே போதைப் பொருட்களான கஞ்சா, மெத்தபெட்டமைன், கொக்கைன் பவுடர், மாத்திரை, ஊசிகளை வரவைத்துள்ளார்கள். மாணவர்களுக்கு வந்த பார்சல் என்பதால் கல்வி நிலைய செக்யூரிட்டிகள் பிரித்துப் பார்க்கவில்லை. அதனால் தொடர்ந்து பக்காவாக கல்லூரிக்கே வர வைத்துள்ளார்கள். சில நேரங்களில் ஆட்களே கொண்டு வந்தும் தந்திருக்கிறார்கள். 

Advertisment

இவர்களில் சிலர் கேரளா, தெலுங்கானா என நேரில் போயும் வாங்கியிருக்கிறார்கள். அனைவரும் வசதியான வீட்டுப் பிள்ளைகள். இவர்களுக்கு பணம் பிரச்சனையில்லை, தாங்கள் வாங்கிப் பயன் படுத்தியோடு மற்றவர்களுக்கும் வாங்கித்தந்து அதில் பணம் சம்பாதித்து ஜாலியாக இருந்துள்ளார் கள். வருங்காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விடுதிக்கு அல்லது கல்லூரிக்கு வரும் பார்சல்களை செக்யூரிட்டிகள் பிரித்துப்பார்த்து அதனை செக் செய்துவிட்டே தரவேண்டும். அப்போது தான் கல்வி நிலையங்களுக்குள் போதைப்பொருட்கள் வருவதைத் தடுக்க முடியும். எங்களுக்கு என்ன கவலையென்றால், கல்லூரிக்கு பார்சல் வழியாக வரவைத்தவர்கள், விடுதியிலும் அதனை வைத்திருப் பார்களோ என அச்சமாக இருக்கிறது. எங்களால் விடுதிகளுக்குள் போக முடியாததால் சோதிக்க முடியவில்லை'' என்றார்கள். 

சில வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு கைமாறி யது கண்டறியப்பட்டதால் அமலாக் கத்துறை அதுவாகவே இவ்விவகா ரத்தில் உள்ளே நுழைந் தது. நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதில் கோவாவை சேர்ந்த ட்ரக் சேல்ஸ் லேடியின் அக்கவுண்ட்டுக்கு பலரும் பணம் அனுப்பியுள்ளனர். அந்த பெண்ணின் அக்கவுண்ட் டுக்கு பணம் அனுப்பியவர்களின் பட்டியலை அமலாக்கத்துறை எடுத்துள்ளது. அதில் இரண்டு லட்ச ரூபாய் பெல்கிங் என்பவரின் அக்கவுண்ட்டி லிருந்து போயிருக்கிறது. இவர் யாரென விசாரித்த தில், கேரளாவை சேர்ந்த இவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை மருத்துவராகப் பணியாற்றுவது தெரிய வந்தது. வேலூரில் சி.எம்.சி. மருத்துவர்கள் குடி யிருப்பில் குடியிருக்கிறார். அவரைத்தேடி அமலாக் கத்துறை ஜனவரி 16ஆம் தேதி, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சோதனை நடத்தியதில், 5 விதமான விலையுயர்ந்த போதைப்பொருளை கண்டுபிடித்து எடுத்துள்ளது. அந்த மருத்துவர் தலைமறைவாகிவிட்டார். 

vels3

இதுகுறித்து சி.எம்.சி. மருத்துவமனையில் நேர்மையாக பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, "சி.எம்.சி. மருத்துவமனையில் பணி யாற்றும் சிலர் போதை மருந்துகளை பயன்படுத்து கிறார்கள், அதனை நிர்வாகம் கண்டுகொள்வ தில்லை. போதைக்கு அடிமையாகும் மருத்துவர் களை, பணியாளர்களை திருத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்கிறது நிர்வாகம். அமலாக்கத்துறை ரெய்டின்போதும், எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என அவசரஅவசரமாக மறுக்கக் காரணம், சி.எம்.சி. டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்கா உட்பட சில நாடுகளிலிருந்து, புதிய போர்டு மெம்பர்கள், இயக்குநரை தேர்வு செய்ய வருகிறார்கள். இந்த நேரத் தில் இப்படி சிக்கிவிட்டானே, மருத்துவமனை பெயர் கப்பலேறுகிறதே என்பதால் இந்த ரெய்டுக்கும் சி.எம்.சி. நிர்வாகத்துக்கும் சம்பந்த மில்லை என அறிவித்தார்களே தவிர, மற்ற நேரமாக இருந்தால் அதனையும் அறிவிக்கமாட்டார்கள். அந்த மருத்துவரை போலீஸ் கஸ்டடியில் விசாரித்தால் மேலும் சிலர் சிக்க வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்கள்.

vels2

சி.எம்.சி. நிர்வாகத்தை போலவே, போதைப் பொருள் வைத்திருந்ததாக ஏழு மாணவர்கள் கைதான விவகாரத்திலும், அது அவர்களின் தனிப் பட்ட விவகாரம், அவர்களை சஸ்பென்ட் செய்து விட்டோம் என்கிறது வி.ஐ.டி. பல்கலைக்கழக நிர் வாகம். எங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவ - மாணவிகளின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம், எங்கள் வேலை கல்வி கற்றுத் தருவது மட்டுமே என்பது அப்பல்கலைக்கழத்தின் தொடக்ககாலம் முதல் இப்போதுவரை கடைப்பிடிக்கப்படும் விதி. இதனால் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் காதல் விவகாரத்தில் கத்திக்குத்து, கொலை, தற்கொலை என நடந்துள்ளது. இந்த போதைப் பொருள் விவகாரமெல்லாம் சர்வசாதாரணம் என்கிறார்கள் நீண்ட காலமாக இப்பல்கலைக்கழகத்தை கவனித்து வருபவர்கள். போதைப்பொருள் பயன்பாடு, பார்ட்டி கல்ச்சர் குறித்து சிலரிடம் நாம் பேசிய போது, "மெடிக்கல், இன்ஜினியரிங், பிசினஸ் மேனேஜ்மென்ட் என ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத படிப்பு, வெவ்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்தாலும், ஐ.டி உட்பட வேறு தளங்களில் இவர்கள் வேலை செய்தாலும், இவர்களை ஒருங் கிணைப்பது போதை பார்ட்டிகள் தான். ஒருமுறை நண்பனின் நண்பன் தரும் பார்ட்டி பப்புக்கு சென்றால் அங்கே வெவ்வேறு ப்ரண்ட்ஸ் கிடைப்பார்கள். அதன்மூலம் ஒரு நெட்வொர்க் உருவாகி விடுகிறது. அதன்பின் இவர்கள் வாட்ஸ் அப், இன்ஸ்டா, டெலிகிராம் வழியாக தங்களுக்குள் தொடர்பு வைத்துக் கொண்டு கோட்வேர்ட் வழியாகவும், குரூப் சாட் வழியாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள். மகாபலிபுரம், இ.சி.ஆர், புதுச்சேரி, பெங்களூரு, கோவை, ஆலப்புழா, குமரகம் போன்ற இடங்களுக்கு மாதம் ஒரு ஊர் எனச் சென்று பிரைவேட் பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்கள். வாராவாரம் பார்ட்டிக்கு செல்லும் குரூப்களும் உள் ளன. நம்ம ஏலகிரியில் சென்னை முதல் பெங்களூரு வரையுள்ள பல தனியார் பிரபல கல்லூரி, ஐ.டி இளசுகள் வாரா வாரம் வந்து குவிகிறார்கள். இங்கு போதை பார்ட்டிகள் மட்டுமல்லாமல் செக்ஸ் பார்ட்டிகளும் நடக்கிறது. காவல்துறையும் இந்த வயதில் ஜாலியாக இருக்கிறார்கள், இருக்கட்டும் விடுங்க என விடுகிறார்கள்.

சிலர் நடவடிக்கை எடுக்கும்போது இவர் களுக்காக வரும் சப்போர்ட்களைப் பார்த்து மிரண்டுவிடுகிறார்கள். இதனால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. சப்போர்ட் செய்பவர்கள் பெரிய பெரிய ஆட்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாமல் போவதால் இந்த போதைப்பழக்கம் தொற்றுநோய்போல் பரவுகிறது'' என்றனர். இதனை தடுக்காமல் இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது?           


__________
இறுதிச் சுற்று!  

அ.தி.மு.க. வெளிநடப்பு!

தமிழக சட்டசபை வியாழக்கிழமை கூடியதும் உறுப் பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். நேரமில்லா நேரத்தில், கறிக்கோழி பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அ.தி.மு.க.வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்தார். அப்போது, "இந்த விவகாரம் குறித்து விவாதிக்கச் சில நிமிடங்கள் அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சினை?" என கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலளித்த அப்பாவு, "கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒரு கட்சி மட்டும் அளித்திருந்தால் அனுமதி அளித்திருப்பேன். மொத்தம் 15 பேர் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் அனுமதி தர வேண்டியுள்ளது'' என்றார். இருப்பினும், சபாநாயகர் பதிலை ஏற்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இதை யடுத்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், "கவன ஈர்ப்பு தீர்மானத் திற்கான பதில் தயாரானதும் நாளை அது குறித்து விவாதிக்க லாம்'' என்று தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.         

-இளையர்

nkn240126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe