மாணவர்களுக்கு கல்வி அறிவை ஊட்டுவதோடு, ஒழுக்கத் தையும், சமூகப் பார்வையையும் கல்விக்கூடங்களே வழங்குகின்றன. சமீபகாலமாக, ஆசிரியர்களே, தங்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல்ரீதியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும், அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் மாணவிகள் தற்கொலை முடிவுவரை செல்வதும் அதிகரித்து வருகிறது.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் கலந்துகொண்டதாகவும் மாணவிகள் தரப்பில் எழுப்பப்பட்ட புகார், பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ஆசிரியர், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளிலும், பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
அதேபோல, சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீசுஷில்ஹரி இன்டர் நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பல ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த விவகாரத்தை நமது நக்கீரன் அம்பலப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பக்கபலமாக நின்றது. சிவசங்கர் பாபா மீது 4 மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்த மாணவிக்கு, அங்குள்ள இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கர வர்த்தி, பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது பெருத்த அதிர் வலையை ஏற்படுத்தியது. மாணவி களுக்கு இப்படியான தொல்லைகள் என்றால், பள்ளி மாணவனைக் காதலித்து, அவனோடு தலை மறைவான ஆசிரியை குறித்த செய்தியும் வெளியாகியிருக்கிறது.
இப்படியாக, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரப்பிலும், பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலும் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. ஆன்லைன் கல்விமுறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், மாணவர்களைப் பாலியல் சுரண்டல்களிலிருந்து பாதுகாப்பதற்கு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவது அவசியமாகிறது. இவ்விவகாரத்தில் நக்கீரன் தனது சமூகப் பங்களிப்பைச் செய்வதற்காக சட்டரீதியாகக் களமிறங்கியுள்ளது.
பள்ளி மாணவர்களை பாலியல் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுமுன் வழக்கறிஞர் ராம்சங்கர் முறையிட்டார். அந்த முறை யீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், நக்கீரன் ஆசிரியர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவல கத்திற்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்.