Advertisment

எதிர்பார்ப்பில் மாணவர்கள்! அரசு நிறைவேற்றுமா?

dd

2010-ல் கலைஞர் தலைமையி லான தி.மு.க. அரசில் துணைமுதல்வ ராக இருந்த மு.க.ஸ்டாலின் முன் னெடுப்பில், குமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணியின மக்கள் வசிக்கும் 48 குடி யிருப்புப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 13 ஆண்டுகளாக வேறெந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாத சூழலில், சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு அரசு உத்தரவின் படி மலைக்கிராமப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளோடு குமரி மாவட்ட ஆட்சிய

2010-ல் கலைஞர் தலைமையி லான தி.மு.க. அரசில் துணைமுதல்வ ராக இருந்த மு.க.ஸ்டாலின் முன் னெடுப்பில், குமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணியின மக்கள் வசிக்கும் 48 குடி யிருப்புப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 13 ஆண்டுகளாக வேறெந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாத சூழலில், சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு அரசு உத்தரவின் படி மலைக்கிராமப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளோடு குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடினர்.

Advertisment

ff

இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட தில், பேச்சிப்பாறை பச்சைமலையைச் சேர்ந்த ரஞ்சினி என்ற மாணவி, "எங்களின் முன் னேற்றத்துக்காக அரசு ஒதுக்கும் நிதி அதிகாரி களால் செலவு செய்யப் படுவது குறித்து எங்க ளுக்குத் தெரியாது. ஆனால் கல்வியில் நகர்ப்புற மாணவர் களுக்கு போட்டியாக நாங்கள் முன்னேறி யுள்ளோம். தினமும் பள்ளிக்கு பேச்சிப்பாறை அணையை படகில் தான் கடக்கிறோம். இதற்கு 40 ரூபாய் கட்ட ணம். இதைக் கட்ட முடியாமல் பல நாட்கள் பள்ளிக்கே செல்லாமல் இருந்திருக்கிறோம். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லாததால் மரங்களின் பின்னால்தான் போக வேண்டி யிருக்கு. அதிகாரிகளோ கழிவறைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆன்லைன் கல்வி கிடைக்காமல் கஷ்டப்படு கிறோம். மின்சாரம் மட்டும்தான் கிடைத்திருக்கிறது'' என கொட்டித் தீர்த்தார்.

Advertisment

gg

காணியினம் முன்னேற்ற சங்க செயலாளர் பாலன்காணி கூறும்போது, "கடந்த தேர்தலின் போது பழங்குடியின மக்க ளிடம் கனிமொழி மேடமும், மனோதங்கராஜும் குறைகளைக் கேட்டறிந்தனர். நாங்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்வ தாக உறுதியளித்தனர். இதுவரை அமைச்சர் மனோதங்கராஜ் எங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. அவர் தொகுதி யில்தான் காணி இன மக்கள் வசிக்கும் மலைக்கிராமங்கள் நிறைய உள்ளன. அதேபோல் தினமும் 40 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு படகில் செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நிலையில் செல்கின்றனர். தனி நபர்கள் இயக்கக்கூடிய அந்த படகுகளை அரசு பாதுகாப்போடு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இயக்கவேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறும்போது, "மாணவர்களின் கோரிக்கையை சீரியஸாக எடுத்துள்ளேன். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று ஒரு சில நாட்களில் அவர்களின் குறைகளைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

"அந்த மலைக்கிராம மக்களுக்கு, கலைஞர் ஆட்சியில் மின்சாரம் கிடைத்ததுபோல்... ஆட்சியரிடம், அந்த மாணவர்கள் வைத்த குறைகள், ஸ்டாலினின் ஆட்சியில் தீர்க்கப்படுமா?' என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

nkn170623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe