Advertisment

பள்ளியில் குழந்தை பெற்ற மாணவி! சீரழியும் மாணவ சமுதாயம்!

ss

புவனகிரி பகுதியிலுள்ள பெண்கள் பள்ளியில் செப் டம்பர் 1-ஆம் தேதி மதியம் கழிவறைப் பகுதிக்கு வந்த சில மாணவிகள் அங்குள்ள சுற்றுச் சுவர் ஓரமாக ஆண் குழந்தை கிடப்பதாக பள்ளி ஆசிரியர் களுக்குத் தகவலளித்தனர். பின்னர் இதுகுறித்து புவனகிரி காவல்துறையினருக்கு புகார் கூறப்பட்டது.

Advertisment

dd

அதன்பேரில், பிறந்து சிலமணி நேரங்களே ஆன நிலையில் ஆண் குழந்தை இறந்து கிடந்ததைக் கைப்பற்றி, மருத் துவமனைக்கு அனுப்பினர் போலீசார். இது குறித்து பள்ளியில் விசாரணை

புவனகிரி பகுதியிலுள்ள பெண்கள் பள்ளியில் செப் டம்பர் 1-ஆம் தேதி மதியம் கழிவறைப் பகுதிக்கு வந்த சில மாணவிகள் அங்குள்ள சுற்றுச் சுவர் ஓரமாக ஆண் குழந்தை கிடப்பதாக பள்ளி ஆசிரியர் களுக்குத் தகவலளித்தனர். பின்னர் இதுகுறித்து புவனகிரி காவல்துறையினருக்கு புகார் கூறப்பட்டது.

Advertisment

dd

அதன்பேரில், பிறந்து சிலமணி நேரங்களே ஆன நிலையில் ஆண் குழந்தை இறந்து கிடந்ததைக் கைப்பற்றி, மருத் துவமனைக்கு அனுப்பினர் போலீசார். இது குறித்து பள்ளியில் விசாரணை மேற் கொண்டபோது பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த குழந்தை என தெரிய வந்தது. மாணவியிடம் காவல்துறை யினர் விசாரணை மேற் கொண்டதில், “அந்தப் பெண் எனக்கு ஒன்றும் இல்லை. மாதாந்திர விலக்கு கொஞ்சம் அதிகமாக உள்ளது. மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவ தாகக் கூறியுள்ளார்.”இதைக் கேட்டு விசாரணைக்குச் சென்ற போலீசார் அதிர்ச்சியடைந் துள்ளனர். விடாமல் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் ஊரிலுள்ள 10-ஆம் வகுப்பு படிக்கும் தம்பி உறவுமுறை கொண்ட பையன்தான் இதற் குக் காரணம் என மாணவி கூறியுள்ளார். இது போலீசா ருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த மாணவனிடம் விசாரித்த போது, தனக்கும் இதற்கும் தொடர்பில்லை எனத் தெரிவித் துள்ளான். அவனது தோற்றமும் பாலியல் விஷயங்களில் பரிட்சய மற்றவன்போல் தெரியவே, போலீ சார் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "உண்மையான குற்றவாளி யார் எனக் கண்டறிய அந்த குழந்தை, சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மாணவனின் உடலில் ரத்தம் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. டெஸ்ட் டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவி முதலில் அந்த மாணவ னை அடையாளம் காட்டினார். பின்னர் முன்னுக்குப் பின்னான தகவலைக் கூறிவருவதால் டி.என். ஏ. சோதனை முடிவு வந்த பிறகு தான் இதுகுறித்து தெளிவான முடிவு தெரியும்''’என்றனர்.

11-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து பள்ளி வளாகத் திலே வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் குழந்தை பெறும் வரை அந்த மாணவி, வீட்டுக்கும், சக மாணவர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும் தெரியாமல் கர்ப் பத்தை மறைத்தது எப்படி என்ற கேள்விகள் எழுகிறது.

செல்போன் வரவுக்குப் பின், இளைய தலைமுறையின் நடவடிக்கைகளில் எத்தனையோ மாற்றங்கள் நடக்கத்தொடங்கியுள் ளன. அதில் ஒழுக்கக் குறைபாடும் ஒன்று. இளைய தலைமுறையில் எதிர்காலத்தை மனதில் கொண்டு பாலியல் கல்வி, ஒழுக்க சிந்தனை களை பெற்றோரும் ஆசிரியரும் கற்றுத் தராவிட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரத்தான் செய்யும்.

-காளிதாஸ்

nkn100922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe