Advertisment

இளம் பத்திரிகையாளர்கள் செய்தி!

student-reporters

தங்க இடமின்றித் தவிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள்!

student-reporters

சென்னை பல்கலைக்கழகத்தின் தாய்க்கல்லூரியும் தென்னிந்திய உயர் கல்வித்துறையின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுவதுமான மாநிலக் கல்லூரியின் விடுதி இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் ஏழை-எளிய முதல் தலைமுறை பட்டதாரிகள் கடும் பாதிப்படைந்துகொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இது குறித்து, நாம் மேலும் விசாரித்தபோது... "175 வருட பழமை வாய்ந்த இக்கல்லூரியில் 24 துறைகளில் 2000/-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விக்டோரியா மாணவர் விடுதியை மேம்படுத்த அரசாங்கம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில் சீரமைக்கும் பணி முடிவடையாததால், மாணவர்கள் தங்க இடமில்லாமல் உணவுக்கும் வழியில்லாமல் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழல் நிலவிவருகிறது.

Advertisment

இதுகுறித்து, வடபழனி விடுதியில் தங்கி முதுகலை பயிலும் மாணவர் காளி நம்மிடம், “""சென்னையில படிச்சா வாழ்க்கையில் முன்னேறலாம்னுதான் இங்க வர்றோம். ஆனா, த

தங்க இடமின்றித் தவிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள்!

student-reporters

சென்னை பல்கலைக்கழகத்தின் தாய்க்கல்லூரியும் தென்னிந்திய உயர் கல்வித்துறையின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுவதுமான மாநிலக் கல்லூரியின் விடுதி இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் ஏழை-எளிய முதல் தலைமுறை பட்டதாரிகள் கடும் பாதிப்படைந்துகொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இது குறித்து, நாம் மேலும் விசாரித்தபோது... "175 வருட பழமை வாய்ந்த இக்கல்லூரியில் 24 துறைகளில் 2000/-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விக்டோரியா மாணவர் விடுதியை மேம்படுத்த அரசாங்கம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில் சீரமைக்கும் பணி முடிவடையாததால், மாணவர்கள் தங்க இடமில்லாமல் உணவுக்கும் வழியில்லாமல் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழல் நிலவிவருகிறது.

Advertisment

இதுகுறித்து, வடபழனி விடுதியில் தங்கி முதுகலை பயிலும் மாணவர் காளி நம்மிடம், “""சென்னையில படிச்சா வாழ்க்கையில் முன்னேறலாம்னுதான் இங்க வர்றோம். ஆனா, தங்குறதுக்கான வசதி செய்து தரலை. மேன்ஷன்களில் தங்கிப்படிக்கும் அளவுக்கு வசதியில்ல. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படவேண்டியிருக்கு. மைலாப்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம்னு அரசு விடுதிகளில் தற்காலிகமாக தங்கினாலும் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக, மாநிலக் கல்லூரியில் படிக்கும் பார்வையற்ற, மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகுறாங்க. கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் விடுதியை விரைவில் சீரமைத்துவிட்டால் மாணவர்கள் தங்கிப்படிக்க வசதியாக இருக்கும்''’என்கிறார் கோரிக்கையாக. சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி, இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இருந்தும், பயனின்றித் தவிக்கிறார்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்.

-வேலா சந்திரமௌலி

மந்திரி ஏரியாவில் ரவுடிகள் ராஜ்ஜியம்!

student-reporters

திடீர் விஞ்ஞானியான அமைச்சர் செல்லூர் ராஜு, தன் சொந்தப் பகுதியில் உருவாகியுள்ள ரவுடிகள் கூடாரத்தை எந்த டெக்னிக்கில் கையாளப் போகிறார் என எதிர்பார்க்கிறார்கள் அச்சத்தில் வாழும் பொதுமக்கள். இதுகுறித்து, நம்மிடம் பேசும் ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாஃபர், தனது கடையில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். “""மதியம் மூன்றரை மணி இருக்கும். நான் கடையில இல்ல. கடைக்குள்ள வந்த மூணு பேர் 2,000 ரூபாய்க்கு ட்ரெஸ் எடுத்துட்டு பணம் கொடுக்கும்போது... 700 ரூபாய்தான் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. முடியாதுன்னு கடையில் இருந்தவங்க சொன்னதும், "உங்க ஓனருக்கு போன் போடுங்க'ன்னு எனது லைன்ல வந்தாங்க.

"உங்களத் தெரியும் பாய்,… நாளைக்கு வந்து மீதி பணத்தை தர்றோம்'னதும்... "உங்கள எனக்குத் தெரியாது... நேர்ல வர்றேன்'னு சொல்லிட்டுப், போறதுக்குள்ள 700 ரூபாய் பணத்தைக்கூட கொடுக்காம, அந்த ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டு ஓட முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனால், போலீஸ் அரெஸ்ட்பண்ணி ஜெயில்ல வெச்ச கோபத்துல, அந்த பசங்க குரூப்பில் ஒருத்தன் தொழுகையை முடிச்சுட்டு வந்த என்னை, கையிலேயும் தோள்லேயும் வெட்டிட்டு ஓடிட்டான். பக்கத்துக்கடைக்காரர் ஓடிவந்துதான் என் உயிரைக் காப்பாற்றினார். இப்பவும், அதே குரூப் திரும்பவும் வந்து என்னை நோட்டமிட்டிருக்கு. எங்க உயிருக்கே பாதுகாப்பு இல்ல''’என்கிறார் அச்சத்துடன். இதற்கு, முக்கிய காரணமாக சொல்லப்படுவது, இங்கிருக்கும் டாஸ்மாக் மற்றும் செல்லூர் ஜட்டிக்குமார் என்ற ரவுடியின் பெயரைச் சொல்லிக்கொண்டு உலாவும் அக்யூஸ்ட்கள்தான். சமீபத்தில் நடந்த பிரச்சினையால் மதுரை மத்திய சிறையில் ஜட்டிக்குமார் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு பலரும் அராஜகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

-அஹமது

உயிரைக் குறி வைக்கும் விபரீத டெண்டர்!

student-reporters

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பேருந்துநிலைய மேற்கூரை கடந்தவருடம் உடைந்துபோன நிலையில்... "புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும்' என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். பழுதுபார்க்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால், கடந்த 2015-ஆம் ஆண்டு உடன்குடி நடுக்கடை காலனி அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய ஒப்பந்ததாரருக்கே இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அவர்மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் சூழலில் முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என புகார்கள் கிளம்பின. மேலும், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த சூழலில் தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தி பேருந்துநிலைய மேற்கூரை கட்டப்பட்டுள்ளது. ஜூன் 18-ந் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராடி வருகின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.

இதுகுறித்து, உடன்குடி பேரூராட்சி பொறியாளர்களிடம் கேட்டபோது... ""தரமற்ற கட்டுமானப் பொருட்களை வைத்து கட்டப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், டெண்டர் முறைகேடு குறித்து செயல் அலுவலரிடம் கேட்டபோது, “"நான் பணிக்கு வருவதற்கு முன்பே டெண்டர் விடப்பட்டு வேலையும் நடந்துவருகிறது'’என்கிறார். பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலைய கூரை கட்டும் பணியை ஏற்கனவே விபத்தை ஏற்படுத்தியவருக்கே டெண்டர் வழங்கியிருப்பது மக்களின் உயிரைப்பற்றிக் கவலைப்படவில்லை என்பதைக் காட்டுகிறது'' என்று தங்களது குமுறலை வெளிப்படுத்தி போராட்டத்திற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் உடன்குடி மக்கள்.

-ராஜேஸ்வரி ரங்கசாமி

student reporters nkn06.7.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe