குமரி மாவட்டம் குளச்சல், செம்பொன்விளையை சேர்ந்த தி.மு.க. பேரூர் செயலாளரான குமார் சங்கர் (52) தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத மகள் தீபாவதி (26), கடந்த 6-ம் தேதி இரவு கூலிக்கு ஆள் வைத்து தந்தையை கொலை செய்தார். இதுகுறித்து ஏதும் தெரியாதது போல் நாடகமாடிய நிலையில், குளச்சல் தனிப்படை போலீசாரின் 7 நாள் விசா ரணைக்குப் பிறகு, தீபாவதியையும், கொலை யாளிகளான கோபு (18), ஸ்ரீமுகுந்தன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதான் பத்திரிகைச் செய்தியாகவும் இருந்தது.
இந்த நிலையில், கொலைக்கான காரணமாக தீபாவதி கொடுத்த வாக்குமூலத் தைத் தாண்டி அந்த கொலையை அரங் கேற்ற தீபாவதி எப்படிப்பட்ட முயற்சி களெல்லாம் எடுத்திருக்கிறாள் என்பது குறித்து தனிப்படை போலீஸ் ஒருவர்... "முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்து டைப் ரைட்டிங் சென்டர் ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த தீபாவதியும், அவ ருடைய தாயார் ரெத்தினாவதியும் (46) எந் நேரமும் செல்போனிலேயே இருப்பார் களாம். இதுகுறித்துதான் குமார் சங்கர், தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து அடித்து உதைப்பாராம். இதனால் தந்தை யைத் தீர்த்துக்கட்ட தீபாவதி முடிவெடுத்தார்.
இதுகுறித்து, டைப்ரைட்டிங் சென்ட ரில் அவளுடைய மாணவனாக இருக்கும் திக்கணங்கோட்டைச் சேர்ந்த கோபுவிடம் (ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவதியிடம் 12-ம் வகுப்பு டியூசனும் படித்து வந்துள் ளான்). தனது தந்தையை கொலை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். அதற்கு கோபு, "கொலை செய்வது ரொம்ப கஷ்டம். அதுக்குப் பதிலா, சாப்பாட்டில் தென்னை மாத்திரை விஷம் வைத்துக் கொடுத்தால் உடனே செத்துப் போயிடுவார். அது தற்கொலை யாகிவிடும், உங்களுக்கு பிரச்சினை வராது' என்று யோசனை கூறியிருக்கிறான். அதையடுத்து, தென்னை மாத்திரை வாங்குவதற்காகவே பாலப்பள்ளம், கருங்கல் பகுதியில் இருவரும் மூன்று நாட்களாக அலைந்திருக்கிறார்கள்.
தென்னை மாத்திரை கிடைக்காததால், அடுத்த முயற்சியாக கையிலிருக்கும் 60 ஆயிரம் ரூபாயில் ரவுடிகளை செட் பண்ணி கொலை செய்யலாமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்காக குளச்சல், ரீத்தாபுரம் பகுதிகளிலுள்ள சின்னச் சின்ன ரவுடிகளை ஒரு வார காலத்துக்கு தொடர்புகொண்டு பேசி யுள்ளனர். பின்னர் நாகர்கோவிலிலிருந்த இரண்டு ரவுடிகளைத் தொடர்புகொண்டு பேசிய தில், அவர்கள் 5 லட்சம் ரூபாய் கேட்க... இதுவும் வேலைக்காகாது என்று கைவிட்ட னர். இந் நிலையில்தான், தீபாவதிக்காகப் பரிதாபப்பட்டு, "நானே அந்த கொலை யைச் செய்யுறேன் டீச்சர்'' என்று கோபு முன்வந்திருக்கிறான். பின்னர், கொலை செய்வதில் பயிற்சியெடுப்பதற்காக முதலில் கோழி, பூனைகளைப் பிடித்துக் கத்தியால் குத்திப் பழகியிருக்கிறான். இருந்தும் மனிதரைக் கொல்வதற்கான தைரியம் வராததால், சிங்காரி செண்டை மேளம் அடிக்கச்செல்லும் தனது நண்பனான மூவர்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீமுகுந்தனிடம் கூறியிருக்கிறான். அவனோ, "எனக்கும் ரவுடியாகணும்னு ஆசைதான். இந்தக் கொலையை நானே பண்றேன், நீ ஒத்தாசையா மட்டும் இரு'' என்று கூறியிருக்கிறான். இதையடுத்து ஸ்ரீமுகுந்தனுக்கு கூகுள்பே வழியாக 60,000 ரூபாய் டிரான்ஸ்பரானது.
இந்த பணத்தைக் கொண்டு ஊரைச் சுற்றிவிட்டு செலவழித்தவன், கடந்த 6-ம் தேதி இரவு 8:30 மணிக்கு குடிபோதையுடன் தீபாவதியின் வீட்டுக்குச் சென்று, ஏற்கனவே போதையிலிருந்த குமார் சங்கரை, தண்ணீர் எடுக்கும் மோட்டாரைச் சரிசெய்ய வேண்டுமென்று ரோட்டுக்கு அழைத்து வந்து கத்தியால் குத்திக் கொலை செய்தான்.
அதன்பின்னர் அருகிலிருந்த, கோபு வீட்டினுள் ளிருந்த தீபாவதிக்கு செல்போனில் "உங்கப்பாவின் கதை முடிந்துவிட்டது' எனச் சொல்ல, வீட்டுக்குள்ளிருந்து "அப்பா... அப்பா...'' என அலறியபடி தீபாவதி வெளியே வர... அவளது அம்மாவும், சகோதரி சோனியாவதியும் பதட்டத்தோடு ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த குமார் சங்கரைப் பார்த்துக் கதறினார்கள்.
பின்னர், 7 நாட்கள் விசாரணையில் இரண்டாம் நாளே தீபாவதிதான் கொலைகாரி என்று தெரிந்த பின்னும் வெளிக்காட்டாமல், மற்ற இருவரையும் சேர்த்து மொத்தமாகக் கைது செய்தோம்'' என்றார்.
"சமீபகாலமாக, மாணவர்களும், சிறுவர்களும் குற்றவாளிகளாக மாறுவதற்குக் காரணமாக இருப்பவர்கள், தீபாவதியைப் போன்ற கொடூர மனம் கொண்டவர்கள்தான். இச்சம்பவத்தில் தீபாவதிக்காக, அவளுடைய சுயநலத்துக்காக... இளம் வயதுடைய இரண்டு பேர் கொலைக் குற்றவாளியாக மாறியுள்ளனர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடராமல் இருக்க, காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.