திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. நான்கு பெண் பிள்ளை களுக்கு அடுத்ததாக மகன் முகிலன் பிறந்ததால் குடும்பத்தினர் அனை வரும் மகன்மீது மிகுந்த பாசத் துடன் இருந்துள்ளனர். 9-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவனை படிப்பு சரியாக வரவில்லையென திருப்பத்தூர் டோமினிக் சேவியர் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்துள்ள னர். பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்துவந்த முகிலன், கடந்த 3-ஆம் தேதி பள்ளி வளாக கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

இது கொலை, கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டுமெனக் கூறி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்காமல் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு பின் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவாதத்தை அடுத்து 5-ஆம் தேதி உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.  

இதுகுறித்து முகிலனின் சகோதரி வழக்கறிஞர் சந்தியா, "அவன் நன்றாக படிக்கவேண்டும் என்பதற் காகவே இந்த பள்ளியில் கொண்டுவந்து சேர்த் தோம்,. இங்கு வந்தபின் நன்றாக படிக்கத் துவங்கினான். பத்தாவதில் தேர்ச்சி பெற்றதால் 11-வதும் இங்கேயே சேர்த்தோம். ஆகஸ்ட் 1-ஆம் தேதி பள்ளிக்கு வரவில்லை, வீட்டுக்கு வந்துள் ளானா என பள்ளியிலிருந்து கேட்டார்கள். நாங்கள் பதறிப்போய் பள்ளிக்குச் சென்று கேட்டபோது, ஹாஸ்டலில்தான் கேட்கவேண்டும் எனச் சொன்னார்கள். விடுதியிலுள்ள சி.சி.டி.வி. புட்டேஜ் காட்டச் சொல்லியும் காட்டவில்லை. அதன்பின் ஆகஸ்ட் 1ஆம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் தந்தோம். போலீஸ் வந்து சி.சி.டி.வி. புட்டேஜ் பார்த்தபோது, டைனிங் ஹாலி லிருந்து தோட்டத்துக்குப் போவது தெரிந்தது. தோட்டத்து பக்கமிருந்த சி.சி.டி.வி. கேமரா ஒர்க்காகவில்லை யென சொல்லிவிட்டார்கள். இரண்டு நாள் தேடியும் கிடைக்காத நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி மோப்பநாய் வரவைத்து தேடியபோது, பூட்டிய கிணற்றில் என் தம்பியின் உடல் மிதந்துகொண்டிருந்தது. உள்ளிருந்து உடலை எடுத்தபோது அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் பின்புறம் ரத்தமிருந்தது, முதுகில் காய மில்லை. அவனை தூக்கும்போது கை, கால்களின் சதை மட்டும் தனியே பிய்த்துக்கொண்டு வந்தது, கைகளில் கொப்பளம், கொப்பளமாக இருந்தது. இப்போதுவரை உடற்கூராய்வு ரிப்போர்ட் வர வில்லை. பையன் தற்கொலை செய்துகொண்டான் என போலீஸே சொல்கிறது. அதனால்தான் நீதி கேட்டு போராடுகிறோம்''’என்றார் சோகத்துடன்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ஷியமளாதேவியோ, “"குடும்பத்தார் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் உடற்கூராய் வுக்கு சிறப்பு அனுமதி பெற்று மருத்துவப் பேராசிரியர்கள், பேனல் போர்டு மருத்துவர்களை கொண்டு நடந்தது. அவை வீடியோ பதி வும் செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் முறைப்படி நடக்கிறது. நாங்கள் இது வரை தற்கொலை எனச் சொல்லவில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பின்பே அதனடிப்படையில் விசாரணை வேகப்படுத்தப்படும்''’என்றார்.

-கிங்